ஞாயிறு, 21 மார்ச், 2010

ஆந்திர *தல்வர்பாராட்டியசகலகலா வல்லவர்

யங் ஜீனியஸ்!
ஆந்திர *தல்வர்பாராட்டிய
சகலகலா வல்லவர்!
சமீபத்தில் பட்டி,தொட்டி, சிட்டிகளில் குழந்தைகள் அதிகமாய் *ணு*ணுத்த பாடல் "சூச்சூ மாரி'. "பூ' படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலைப் பாடியவர்
சென்னை அசோக்நகரைச் சேர்ந்த எஸ். பார்த்தசாரதி. இவர், ஜி.ஆர்.டி மகாலட்சுமி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். படித்துக் கொண்டே பல சாதனைகளையும் , திறமைகளையும் தனக்குள்ளே வளர்த்துக்கொண்டு, வளர்ந்து வருகிறார்.
இசை ஆர்வம் வந்தது எப்படி?
சின்னவயசில இருந்தே பாடுவேன். எந்தப் பாட்டைக் கேட்டாலும் திரும்பி பாடிப் பார்ப்பேன். அப்படிஇசையில ஆர்வம் வந்தது.பிறகு
அதுக்கான பயிற்சியை மேண்டலின் *த்து, டிரம்ஸ் கோபால், இந்துஸ்தாணி இசைக்கலைஞர் வீரேஷ் மாதுரிகிட்ட இசையை கத்துக்கிட்டேன்.
திரைப்பட பாடல்பாட வாய்ப்புஎப்படி வந்தது?
பிரபல டி.வி. ஒண்ணுல இசைநிகழ்ச்சி போட்டி நடந்தது.அதுல நிறைய பேர் கலந்துக்கிட்டு பாடினாங்க. நான் நல்லா பாடினதைப்பார்த்த இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் எனக்கு பூ படத்தில " ச்சூ ச்சூ மாரி பாட்டுக்கு வாய்ப்பு கொடுத்தார்.தவிர
பள்ளிகள்ல நடந்த இசைப்போட்டிகள்லேயும் பாடி நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். அப்பறம் , இசைமொட்டுகள்ங்கற இன்னிசை குழுவுல சேர்ந்து நுõத்துக்கணக்குல பாடல்களை பாடியிருக்கேன்.
இசைதவிர வேற திறமைகள்?
அபாகஸ்ங்கற எளிய *றையில் கணக்குகள் செய்ற வித்தையும் கத்துக்கிட்டிருக்கேன். சில ஆண்டுகளுக்கு *ன்னே ஆந்திர மாநில *ன்னாள் *தல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு *ன்னால மிக கஷ்டமான அபாகஸ் கணக்குகளை செஞ்சு காட்டி பாராட்டு வாங்கினேன். கணிதமேதை சகுந்தலா தேவியைப் போல நீ கணிதத்தில் சாதனை படைக்கணும்னு பாராட்டினார்.
பாடல்களை பாடறதோட , கம்போசிங் செய்ற பயிற்சியையும் செஞ்சுக்கிட்டு வர்றேன்.
பொழுது போக்கு?
பொழுது போக்குன்னு சொல்லணும்னா செஸ், கேரம், சட்டில்டு, தபால் தலைகள் சேகரிக்கறது . ஒரு நாள் காலையில் டியூசன் *டிச்சுட்டு வரும் போது மரத்திலிருந்து ஒரு நாரைப்பறவை அடிபட்டு விழந்துடுச்சு உடனே புளூகிராஸ்க்கு தெரியப்படுத்தி காப்பாத்திட்டேன். அந்தப்பறவை சரியாகற வரை என்னால சாப்பிட *டியலை. மனுசு கனத்துப்போச்சு .
உங்க வீட்டைப் பற்றி சொல்லுங்களேன்?
எங்க வீட்ல நான்மட்டும் தான். அதனால ஒரு அனாதை இல்லத்திலிருந்து ஒரு பெண்ணை தத்தெடுத்து, அவளை என் தங்கையாக பாவித்து, அவள் படிப்புக்கு உதவிசெய்தேன். என்றார் பார்த்தசாரதி.அவரது திறமைகள் வளரட்டும் என்று வாழ்த்திவிட்டு வந்தோம்.
செல்வகுமார்