திங்கள், 12 மார்ச், 2012

மூர்த்தி சிறியது! கீர்த்தி பெரியது!!







யங் ஜீனியர்ஸ்
கீர்த்தன்
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்பார்கள்.அப்படி இத்தனை சிறிய வயதில் தன் பெற்றோர்களின் துணையுடன் கீர்த்தன் செய்யும் சாதனைகள் அபாரம். அவனது திறமைகள் பற்றி அவனது அம்மா கலவாணியிடம் பேசினோம். தன்மகனின் திறமைகள் பற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட விசயங்கள் இதோ...* உங்களுடையகுடும்பம் பற்றி சொல்லுங்க?எங்களுக்கு சொந்தஊர் சேலம் தான். நான் ஹவுஸ்வொய்ப் தான். எம்ஏ இங்கிலீஸ் லிட்ரேச்சர் படிச்சிருக்கேன். என் கணவர் எத்திராஜுலு டிராவல் ஸ் வெச்சிருக்கறதால சேலத்துக்கு வந்திட்டோம் . அவர் எம்பிஏபடிச்சிருக்கார். என்மகன்பெயர் கீர்த்தன். பத்துவயசுதான் ஆகுது. இப்போ நாலாம் வகுப்பு சேலத்தில இருக்கிற செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில படிக்கிறான்.
* உங்களுடைய குழந்தைகள் அவர்களுடைய திறமைகள் பற்றி சொல்லுங்கள்?எங்க பையனுக்கு யுகேஜி படிக்கறப்ப ஸ்விமிங்க் பழக்கினோம் மூணு முறை பத்துவயசுக் குள்ளே கலந்துக்கறவங்க கேட்டகிரியில மாவட்ட அளவிலான போட்டிகள்ல முதல் பரிசு வாங்கியிருக்கான். அதேசமயம் ஸ்கூல்லயும் ஸ்கேட்டிங் இருந்தது. அதில ஆர்வம் வரவும் அதையும் கத்துக்க வெச்சோம். நாலாம்வகுப்பு படிக்கறப்ப மாவட்ட அளவில கலந்துக்கிட்டு நாலாம் இடத்துக்கு வந்தான். அப்போதே இசையில ஆர்வம் இருந்தது. தொடர்ந்து செஸ்ல, கேரம்போர்டுல ஆர்வம் செலுத்தி கத்துக்க ஆரம்பிச்சான். ஐந்தாம் வகுப்பு படிக்கறப்ப செஸ்ல மூணாவது இடத்துக்கு வந்தான். மாநில அளவில ஐந்தாவது இடத்துக்கு வந்தான். இசையில ஆர்வம் இருந்ததால டிரினிட்டி காலேஜ் ஆப்மியூசிக் ல சேர்த்து விட்டோம். அந்த இசைக்கல்லுõரிக்கு தமிழகம் முழுக்க பல கிளைகள் இருக்கு. அதனுடைய தலைமையகம் லண்டன்ல இருக்கு. இப்போ கீர்போர்டுலயும், பியானோவிலும் ஐந்தாவது கிரேடு முடிச்சிருக்கான். மொத்தம் எட்டு கிரேடு இருக்கு. அதை எல்லாம் முடிச்சா இசையமைப்பாளராகலாம். ஒவ்வொரு கிரேடுக்கும் எக்சாம் இருக்கு. இதுவரை ஒவ்வொரு கிரேடிலும் 85சதவிகிதம் மார்க் எடுத்திருக்கிறான். ஹாரீஸ் ஜெயராஜோட மாமா என்.சுரேந்திரன் தான் எங்க பையனுக்கு மியூசிக் டீச்சர். அதேமாதிரி படிப்பிலயும் படுசுட்டி. என்றவர். அவனுடைய வயசுக்கு இந்த திறமைகள் எல்லாம் அதிகம் தான்.கடவுளோட அனுக்கிரகம்னு தான் சொல்லணும். இதுதவிர ஓவியங்கள் வரைவான். இசையில பெரிய அளவுக்கு கொண்டு வரணும். என்றவர் தன்னுடைய மகளைப்பற்றி சொல்லத் தொடங்கினார். என் பொண்ணு பவன்யா எல்கேஜி படிக்கிறா. ஆங்கிலம் , தமிழ்ல நல்லா பேசுவா. எங்களுக்கு ஆங்கிலம் தெரியுங்கறதால சரளமா பேசுவா. மேடைபயம் கொஞ்சம் கூட அவளுக்கு கிடையாது. என்கிறார் பெருமிதத்துடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக