புதன், 4 ஏப்ரல், 2012

வாழ்க்கைக்கு உதவும் ஐடிஐ படிப்புகள்




அப்படி தொழிற்சாலைகளில் பயிற்சி பெறும் போது அங்கு அவர்கள் பயிற்சி நிறுவனத்தில் கற்றுக் கொண்ட பாடங்களையும், பயிற்சிகளையும் ஒருசேர கற்றுக்கொண்டு இங்கு செய்முறை பயிற்சியை தொழிற்சாலைகளில் முழுமையாக பெறுவார்கள். அதற்கு அவர்கள் பயிற்சி பெறுகிற ஒவ்வொரு மாதமும் பயிற்சிக்கான ஊக்கத் தொகையாக (சம்பளம் ) அரசாங்கமும், தொழிற்சாலை நிறுவனமும் சேர்ந்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். சில தொழிற்சாலைகள் ஒரு மாத சம்பளமாக அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலான ஊக்கத் தொகையினை வழங்குகின்றன. காரணம் அங்கு பயிற்சிக்கு மேல் ஒரு தொழிலாளருக்கான உற்பத்தியையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். இத்தகைய பயற்சியை மேற்கொள்ளும் போதே (ஆர்ஐ சென்டர்) எனப்படும் மண்டல தொழிற்பழகுனர் பயிற்சிமையத்தில் வாரம் ஒரு நாள் வகுப்புகள் நடத்தப் படுகின்றன.
ஐடிஐயில் தொழிற்பயிற்சி பெறும் போது படித்த பாடங்களான பணிமனைக் கணக்கீடுகள், அறிவியல், பயிற்சி பெற்ற டிரேடு சம்பந்தமான பாடங்கள், இயந்திர உற்பத்திப் பொருட்களின் முப்பரிமாணப் படங்கள் வரைதல், சமூக அறிவியல் போன்ற பாடப்பகுதிகள் மீண்டும் நடத்தப் படுகின்றன. செய்முறை பயிற்சியை மாணவர்கள் தொழிற்சாலையிலேயே பெற்றுக்கொள்வார்கள்.பயிற்சி பெறும் தொழிற்சாலையிலும் மாணவர்களுக்கு செய்யவேண்டிய உற்பத்திப் பொருளின் மாதிரிப்படங்கள் தரப்படும். அவைகளை கொண்டு தான் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டியிருக்கும்.

ஓராண்டு, ஈராண்டு அப்ரண்டீஸ் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கிற மாணவர்களுக்கு, அகில இந்திய அளவில் மீண்டும் ஒரு தேர்வு நடக்கிறது. தொழிற்பழுகுனர் பயிற்சியின் முடிவில் நடத்தப்பெறும் தேர்விலும் மொத்தம் மதிப்பெண்கள் 700.அகில இந்திய தொழிற்பழகுனர் பயிற்சி தேர்வினை முடித்ததும் , தேர்வ முடிவுகள் வந்த சில மாதங்களில் இப்போதும் தொழிற்பழகுனர் பயிற்சி மையங்கள் (ஆர்ஐ) அடிப்படையில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவையும் அகில இந்திய அளவில் நடத்தப்படுகின்றன.

இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில் பழகுனர் சான்றிதழ் ( புரவி ஷனல்) வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழைக் கொண்டு மாணவர்கள் தங்கள் படிப்பு சார்ந்த வேலைவாய்ப்புக்களை வழங்கும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு விண்ணப்பித்து வேலைக்கு சேரும் தகுதியை பெறுகிறார்கள். மத்திய அரசு சார்ந்த ரயில்வேதுறை, ஆயுதத்தொழிற்சாலை, துப்பாக்கித் தொழிற்சாலை, அணுஆராய்ச்சி நிறுவனம், கப்பல் துறை சார்ந்த பணிகள், பாரதமிகுமின் நிறுவனம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் காலி இடங்களுக்காக நடத்தும் போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதி வெற்றி பெற்று பணியில் சேரலாம்.
சொந்தமாக சிறு தொழிற்கூடம் அமைத்து மேலும் சிலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கலாம். பிரபல கம்பெனிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பினை பெற்று சொந்த தொழிற்சாலையில் பொருள் உற்பத்தி செய்து மேலு<ம் சிலருக்கு வேலைவாய்ப்பை தரலாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இப்படி பல்வேறு வாய்ப்புகளை தொழிற்பயிற்சி படிப்பினை பயில்வதன் மூலம் மாணவர்கள் பெறலாம்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் காலங்களிலேயே கேம்பஸ் தேர்வுகள் மூலம் பிரபல கம்பெனிகள் மாணவர்களை தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு அளிப்பதும் உண்டு.

ஐடிஐ படிக்கும் மாணவர்கள் மேலும் படிக்க விருப்பம் இருந்தால் அவர்கள் பாலிடெக்னிக் கல்லுõரிகளில் சேர்ந்து படிக்கலாம். அப்போது அவர்களுக்கு ஐடிஐ யில் பயிற்சி பெற்றதால் பாலிடெக்னிக்கில் சொல்லிக் கொடுக்கும் பாடங்களும், பெறும் பயிற்சிகளும் புரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் மிகவும் சுலபமாக இருக்கும்.

இப்படி பல்வேறு வாய்ப்புகளை தொழிற்பயிற்சி படிப்பினை பயில்வதன் மூலம் மாணவர்கள் பெறலாம்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் காலங்களிலேயே கேம்பஸ் தேர்வுகள் மூலம் பிரபல கம்பெனிகள் மாணவர்களை தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு அளிப்பதும் உண்டு.

ஐடிஐ படிக்கும் மாணவர்கள் மேலும் படிக்க விருப்பம் இருந்தால் அவர்கள் பாலிடெக்னிக் கல்லுõரிகளில் சேர்ந்து படிக்கலாம். அப்போது அவர்களுக்கு ஐடிஐ யில் பயிற்சி பெற்றதால் பாலிடெக்னிக்கில் சொல்லிக் கொடுக்கும் பாடங்களும், பெறும் பயிற்சிகளும் புரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் மிகவும் சுலபமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக