திங்கள், 23 ஏப்ரல், 2012

ஸ்டூடண்ட் டைரி



ஒருநாள் எங்கள் பள்ளியின் மைதானத்தில் நாங்கள் மாணவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் எங்கள் பள்ளிஅறை சுவர்களுக்கு வர்ணம் அடித்திருந்தார்கள். விளையாட்டை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த சமயம். உயர்வகுப்பு படித்துக் கொண்டிருந்த  சில மாணவர்கள் கரிதுகளாலும், பாக்கெட்டில் வைத்திருந்தா பென்சிலாலும் அதில் அவர்களின் பெயர்களையும், கட்சித்தலைவர்களின் பெயர்களையும் எழுதி  வாழ்க! ஒழிக!  என்று எழுதியிருந்தார்கள். மறுநாள் காலை பிரேயர் கூடியது. அப்போது வந்த தலைமையாசிரியர் கடவுள் வாழ்த்துப் பாடும் போது சுவரில் கிறுக்கியிருந்த பெயர்களை பார்த்துவிட்டார். பிரேயர் முடிந்தும் மாணவர்களை நிற்கச்சொன்னார். மாணவ மாணவிகள் அனைவரும் காத்திருந்தார்கள். அப்போது சுவரில் கிறுக்கியது யார் என்று கேட்டார். மாணவர்கள் யாரும் சொல்லவில்லை. எங்களுக்கு அடுத்த உயர் வகுப்பு மாணவர்கள் மட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யாரும் சொல்லவில்லை. உடனே எங்கள் ஆசிரியர் யாரும் தங்கள் தவறை ஒத்துக் கொள்ளாததால் நாளை பிரேயரில் இங்கே ஒரு உண்டியல் வைக்கப்படும் அதில் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஐந்து ரூபாய்கள் போட வேண்டும். இதுதான் தண்டனை இது தவறு செய்த மற்ற மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். மொத்த மாணவர்களுக்கும் நாம் செய்வது தவறு என்பது புரியும். வசூலாகும் மொத்த பணத்திலும் பெயிண்ட் வாங்கி மீண்டும் அடித்துவிட்டு அதன் மேல் தலைவர்களின் படங்கள், பொன்மொழிகள் எழுதப்போகிறோம். ஆசிரியர்கள் இந்தப்பணத்தில் டீ,வடை வாங்கி சாப்பிட இங்கே உண்டியல் வைக்கப்பட வில்லை என்றார்.
மறுநாள் மாணவர்கள்நிறையபேர் காசை கொண்டு வந்து போட்டார்கள். மேலும் .ண்டியலில் போட விரும்பாதவர்கள் ஒவ்வொரு வகுப்பிலம் மாணவர்களே வசூல் செய்து கொண்டு வந்தும் உண்டியலில் போட்டார்கள். நாம் படிக்கும் பள்ளியையும், வீட்டையும் நாம் தானே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

ஆர்.ஜனார்தனன்.
எட்டாம் வகுப்பு,
ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி
துறையூர்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ரூபிக் கியூப்பில் உலக சாம்பியன்!



உடற்திறன் சார்ந்த விøளாட்டுக்களை அவுட்டோர் கேம் என்றும் , அறிவாற்றல் சார்ந்த விளையாட்டுகளை இன்டோர் கேம் என்று அழைப்பர். இன்டோர் கேம் வகையில் கேரம், செஸ் போல ரூபிக்கியூப் இப்போது  பிரபலம். இந்த விளையாட்டில் 11 வயதில் உலகசாம்பியன் பட்டத்தை வென்றவர் திருச்சியைச் சேர்ந்த பெர்னெட் ஒர்லாண்டோ.
இவருடைய அப்பா ஜான்லுõயி. சர்வதேச நினைவாற்றல் பயிற்சியாளராக இருக்கிறார். அம்மா பவுலின் செல்வராணி. அரசு பள்ளியில டீச்சர். அக்கா காலேஜ்ல படிக்கிறார். பெர்னெட் ஒர்லாண்டோ இப்போது திருச்சி செயிண்ட் ஜேம்ஸ் மெட்ரிக் ஹையர் செகண்ட்ரி பள்ளியில ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
*ரூபிக் கியூப் விளையாட்டு என்றால் என்ன?
1980ம் ஆண்டு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எர்னோ ரூபிக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட புதுமையான விளையாட்டு இது. ஆறு பக்கங்கள் கொண்ட பெரிய கனசதுரத்தில் (கியூப்) ஐந்து அடுக்குகள் கொண்ட சிறு கன சதுரங்கள் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும். இந்த சிறு கனசதுரங்களை ஆறு புறமும் திருப்பி அமைக்க கூடிய வகையில் இருக்கும். இந்த கனசதுரங்களை மிகக்குறைந்த நேரத்தில்  ஆறு பக்கங்களிலும் ஒரே வண்ணம் வரும்படியாக மாற்றி அமைப்பதில் தான், இந்த விளையாட்டின் திறமை அடங்கியுள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் இந்த கனசதுரங்களை ஒரே வண்ணத்தில் மாற்றி அமைப்பவர்களே வெற்றியாளர்கள்.  இதற்கு அதிக நினைவாற்றலும் , அறிவாற்றலும் அடிப்படையாகும்.
*இதில் எப்படிஆர்வம்  வந்தது?
தந்தையைப் பார்த்து கற்றுக் கொண்டேன். எனது ஆர்வத்தை பார்த்த என் தந்தை எனக்கு பயிற்சி கொடுத்தார். அந்த பயிற்சிஇந்த விளையாட்டில் என்னை பிரகாசிக்கச் செய்தது. பல வெற்றிகளை பெற வைத்தது. என்   சாதனைகளுக்கு என் தந்தையே காரணமாக இருக்கிறார்.
உங்களின் சாதனைப் பட்டியல் விவரம்?
 இவ்விளையாட்டில் 2003ம் ஆண்டு கனடா நாட்டில் 2வது உலக கோப்பை போட்டியும், 2005 ம் ஆண்டு அமெரிக்காவில் 3வது உலககோப்பை போட்டியும் 2007ம் ஆண்டு ஹங்கேரியில் 4வது உலகக்கோப்பை  போட்டியும் நடந்தது.  அப்போது சக போட்டியாளர்களாக நானும், என் அப்பாவும் கலந்து கொண்டோம். அந்த நாடுகளுக்கு செல்வதற்கு எந்த வித அரசு நிதிஉதவியும் இல்லாமல் எனது தந்தையே சொந்த செலவில் அழைத்துச் சென்றார். குருவுக்கு குருவாகவும் , அப்பாவுக்கு அப்பாவாகவும்  இருந்து, அந்த சமயத்தில் என் அப்பாவே பட்ட கஷ்டங்கள் எனக்கு உத்வேகத்தைத் தந்தது. அதனால் இந்த விளையாட்டில் என்னால் சாதிக்க முடிந்தது. பத்துவயதில் ஆறு ஆசிய சாதனை களையும்,  11வதுவயதில் 3 ஆசிய சாதனைகளையும் முறியடித்தேன். 2006ம் ஆண்டு நெதர்லாந்தில் டச் ஓபன் ரூபிக்கியூப் போட்டியிலும், 2007ம் ஆண்டு ஜப்பானிலும், ஹங்கேரியில் நடந்த 4வது ரூபிக்கியூப் போட்டியிலும் கலந்துகிட்டு பல பதக்கங்களை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறேன். 11 வது வயதில் உலக சாம்பியன் பட்டத்தை ஜெயித்திருக்கிறேன். இந்த ஆண்டு பிப்ரவரியில் கான்பூரில் இந்தியன் ஓபன் போட்டியிலும்,  சென்னையில் நடந்த சாஸ்த்ரா ஓபன் போட்டியிலும் இந்திய சாம்பியன் பட்டத்தை ஜெயித்திருக்கிறேன்.புரபசனல் கியூப் போட்டியில கண்ணைக் கட்டிக்கிட்டு உலக அளவில பெரியவங்களோட போட்டியிட்டு ஜெயிச்சிருக்கேன். இன்னும் சொல்லிக்ணுட்டே போகலாம்...
* பெருமையாக நினைப்பது?
உலகில் வேறெந்த விளையாட்டிலும்  இப்படி தந்தை, மகன் சேர்ந்தாற்போல விளையாடி வெற்றி பெற்றது இல்லைன்னு நினைக்கிறேன். எனக்கு,பள்ளியிலும் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மே<லும் விளையாட்டில் சாதிக்க ஊக்கப்படுத்து கிறார்கள். சர்வ தேச அளவில் இன்னும் பல சாதனை படைக்க வேண்டும் என்பதே என் லட்சியம். என்னைப்போன்ற மாணவர்கள் ரூபிக் கியூப் விளையாட்டில் சாதிக்க பலர் முன் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

அஷ்டாவதானி அக்ஷரா ஸ்ரீ


யங் ஜீனியர்ஸ்

அஷ்டாவதானி அக்ஷரா ஸ்ரீ

அக்ஷரா ஸ்ரீ யின் சாதனைகளைப் பார்த்தால் இந்த இளம் சாதனையாளரை அஷ்டாவதானி சாதனையாளர் என்றே சொல்லலாம். இவர் பல துறைகளில் பலசாதனைகள் படைத்திருக்கிறார்.


* உங்களுடைய குடும்பம் பற்றி சொல்லுங்களேன்?
அப்பா ரவிச்சந்திரன்எலும்பு மருத்துவர். அம்மா கௌரி ரவிச்சந்திரன் பெண்கள் சிறப்பு மருத்துவராக இருக்காங்க, அண்ணன் ஆனந்த் 9ம் வகுப்பு படிக்கிறார். தம்பி  அரவிந்தாக்சன் 3ம் வகுப்பு படிக்கிறான்.நான் 8ம் வகுப்பு படிக்கிறேன். நாங்கள் மூவரும் ராமநாதபுரத்தில் உள்ளநேஷனல் அகாடமி மாண்டிச்சோரி  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  படிக்கிறோம்.

* பல சாதனை செய்து வரும் உனக்கு குறிப்பாக  எந்தெந்த துறைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கு? 
கர்நாடக சங்கீதம் பாட ஆசை. அதனால், கர்நாடக சங்கீதத்தை முறைபடி ஆரம்பநிலையில் இருந்துசங்கீதபோசனம் கலைவாணி மேடம் கிட்ட கத்துக்கிட்டேன்.
அடுத்து எனக்கு நாட்டியம் என்றால் கொள்ளைப்பிரியம். எனவே,  பரதநாட்டிய கலையை  ரவிமாஸ்டர்க்கிட்ட கத்துக்கிட்டேன்.பரதநாட்டியம் ஓரளவு ஆட தெரிந்தப்பிறகு கோயில்களில் ஆடியிருக்கேன்.
கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டதால் நல்ல பாடமுடிகிறது. பாட்டு கச்சேரி பலமேடைகளில், டிவி நிகழ்ச்சிகளில் பாடியிருக்கேன்.
எனக்கு  ஏழு வகையான இசைக் கருவிகளை  இசைக்கத்தெரியும். அது  புல்லாங்குழல் , மௌத்ஆர்கன், புல்புல்தாரா, ஜலதரங்கம், கிதார், வீணை, கீபோர்டு ஆகியன. இந்த இசைக்கருவிகளில் இப்போது வாசிச்சுக்கிட்டிருக்கேன். இந்த இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு பொதிகை, ராஜ்டிவி, ஸ்டார் விஜயிலும் சில இசை நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். குழந்தைகளுக்கான போட்டி இசை நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டு பரிசுகளும் வாங்கியிருக்கேன்.

* கலைகளில் அசத்தும் நீங்க விளையாட்டில் எப்படி?
விளையாட்டு யாருக்குத்தான் பிடிக்காது? எனக்கு விளையாட்டில் எப்போதுமே ஆர்வம் உண்டு.
நீச்சல், ஸ்கேட்டிங், சைக்கிளிங் போட்டிகளில்  மாவட்ட அளவில் பல முறை முதல் பரிசு வாங்கியிருக்கிறேன்.
 குழுவிளையாட்டுகளான கோகோ, துரோபால் விளையாட்டிலும்  ஐந்தாம் வகுப்பு படிக்கறப்ப போட்டிகள்ல கலந்துக்கிட்டு நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்.
நினைவுத்திறன் போட்டிகள், ஓவியம் பெயிண்டிங்கிலும் முதல்பரிசுகள், ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதும் போட்டியிலும் 68 ம்வகுப்பு மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் இரண்டாம் பரிசு வாங்கியிருக்கேன். இப்படி நிறைய மாதாந்திர இலக்கியப் போட்டிகள், மாவட்ட , மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கியிருக்கேன்.
 பொழுதுபோக்குன்னு சொன்னாலே விளையாட்டும், ஓவியமும் தான் அதிலும் பொழுது போக்குக்கு மேல ஆர்வம் செலுத்தறதால  அந்த பொழுது போக்கும் என்னுடைய திறமைகளை வளர்த்துக்கறதில ஒண்ணாக இருக்கு.  சரின்னு டிவியை பொழுது போக்காக பார்த்தாலும் அதிலும் சங்கீதம் சம்மந்தப்பட்ட விசயங்கள் வர்றப்ப அதிலிருந்தும் ஏதாவது விசயங்கள் கத்துக்க முடியுது. என்னுடைய லட்சியம் அப்பா அம்மாவைப்போல நானும் மருத்துவராகி பலருக்கும் சேவை செய்யணும் என்கிறார் இந்த குட்டி சாதனையாளர்.
 செல்வகுமார். 

ரூபிக் கியூப்பில் உலக சாம்பியன்!


உடற்திறன் சார்ந்த விøளாட்டுக்களை அவுட்டோர் கேம் என்றும் , அறிவாற்றல் சார்ந்த விளையாட்டுகளை இன்டோர் கேம் என்று அழைப்பர். இன்டோர் கேம் வகையில் கேரம், செஸ் போல ரூபிக்கியூப் இப்போது  பிரபலம். இந்த விளையாட்டில் 11 வயதில் உலகசாம்பியன் பட்டத்தை வென்றவர் திருச்சியைச் சேர்ந்த பெர்னெட் ஒர்லாண்டோ.
இவருடைய அப்பா ஜான்லுõயி. சர்வதேச நினைவாற்றல் பயிற்சியாளராக இருக்கிறார். அம்மா பவுலின் செல்வராணி. அரசு பள்ளியில டீச்சர். அக்கா காலேஜ்ல படிக்கிறார். பெர்னெட் ஒர்லாண்டோ இப்போது திருச்சி செயிண்ட் ஜேம்ஸ் மெட்ரிக் ஹையர் செகண்ட்ரி பள்ளியில ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
*ரூபிக் கியூப் விளையாட்டு என்றால் என்ன?
1980ம் ஆண்டு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எர்னோ ரூபிக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட புதுமையான விளையாட்டு இது. ஆறு பக்கங்கள் கொண்ட பெரிய கனசதுரத்தில் (கியூப்) ஐந்து அடுக்குகள் கொண்ட சிறு கன சதுரங்கள் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும். இந்த சிறு கனசதுரங்களை ஆறு புறமும் திருப்பி அமைக்க கூடிய வகையில் இருக்கும். இந்த கனசதுரங்களை மிகக்குறைந்த நேரத்தில்  ஆறு பக்கங்களிலும் ஒரே வண்ணம் வரும்படியாக மாற்றி அமைப்பதில் தான், இந்த விளையாட்டின் திறமை அடங்கியுள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் இந்த கனசதுரங்களை ஒரே வண்ணத்தில் மாற்றி அமைப்பவர்களே வெற்றியாளர்கள்.  இதற்கு அதிக நினைவாற்றலும் , அறிவாற்றலும் அடிப்படையாகும்.
*இதில் எப்படிஆர்வம்  வந்தது?
தந்தையைப் பார்த்து கற்றுக் கொண்டேன். எனது ஆர்வத்தை பார்த்த என் தந்தை எனக்கு பயிற்சி கொடுத்தார். அந்த பயிற்சிஇந்த விளையாட்டில் என்னை பிரகாசிக்கச் செய்தது. பல வெற்றிகளை பெற வைத்தது. என்   சாதனைகளுக்கு என் தந்தையே காரணமாக இருக்கிறார்.
உங்களின் சாதனைப் பட்டியல் விவரம்?
 இவ்விளையாட்டில் 2003ம் ஆண்டு கனடா நாட்டில் 2வது உலக கோப்பை போட்டியும், 2005 ம் ஆண்டு அமெரிக்காவில் 3வது உலககோப்பை போட்டியும் 2007ம் ஆண்டு ஹங்கேரியில் 4வது உலகக்கோப்பை  போட்டியும் நடந்தது.  அப்போது சக போட்டியாளர்களாக நானும், என் அப்பாவும் கலந்து கொண்டோம். அந்த நாடுகளுக்கு செல்வதற்கு எந்த வித அரசு நிதிஉதவியும் இல்லாமல் எனது தந்தையே சொந்த செலவில் அழைத்துச் சென்றார். குருவுக்கு குருவாகவும் , அப்பாவுக்கு அப்பாவாகவும்  இருந்து, அந்த சமயத்தில் என் அப்பாவே பட்ட கஷ்டங்கள் எனக்கு உத்வேகத்தைத் தந்தது. அதனால் இந்த விளையாட்டில் என்னால் சாதிக்க முடிந்தது. பத்துவயதில் ஆறு ஆசிய சாதனை களையும்,  11வதுவயதில் 3 ஆசிய சாதனைகளையும் முறியடித்தேன். 2006ம் ஆண்டு நெதர்லாந்தில் டச் ஓபன் ரூபிக்கியூப் போட்டியிலும், 2007ம் ஆண்டு ஜப்பானிலும், ஹங்கேரியில் நடந்த 4வது ரூபிக்கியூப் போட்டியிலும் கலந்துகிட்டு பல பதக்கங்களை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறேன். 11 வது வயதில் உலக சாம்பியன் பட்டத்தை ஜெயித்திருக்கிறேன். இந்த ஆண்டு பிப்ரவரியில் கான்பூரில் இந்தியன் ஓபன் போட்டியிலும்,  சென்னையில் நடந்த சாஸ்த்ரா ஓபன் போட்டியிலும் இந்திய சாம்பியன் பட்டத்தை ஜெயித்திருக்கிறேன்.புரபசனல் கியூப் போட்டியில கண்ணைக் கட்டிக்கிட்டு உலக அளவில பெரியவங்களோட போட்டியிட்டு ஜெயிச்சிருக்கேன். இன்னும் சொல்லிக்ணுட்டே போகலாம்...
* பெருமையாக நினைப்பது?
உலகில் வேறெந்த விளையாட்டிலும்  இப்படி தந்தை, மகன் சேர்ந்தாற்போல விளையாடி வெற்றி பெற்றது இல்லைன்னு நினைக்கிறேன். எனக்கு,பள்ளியிலும் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மே<லும் விளையாட்டில் சாதிக்க ஊக்கப்படுத்து கிறார்கள். சர்வ தேச அளவில் இன்னும் பல சாதனை படைக்க வேண்டும் என்பதே என் லட்சியம். என்னைப்போன்ற மாணவர்கள் ரூபிக் கியூப் விளையாட்டில் சாதிக்க பலர் முன் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

 செல்வகுமார்.

ஒரு தபால்தலையில் 324 ஓவியம் தீட்டியவர்!



சிவகுரு பாலாஜி. இவர் ஓவியத்தில் வித்தகர் என்று யாராவது சொன்னால் சட்டென்று நம்பவே முடியாது. ஆனால், அவர் வரைந்திருக்கும் ஓவியங்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்! ஆ! இவரா, இவ்வளவு நுணுக்கமான ஓவியங்களை வரைந்திருக்கிறார் என்று. இவரை யங் ஜீனியஸ் என்று வாயார அழைக்கலாம். ஓவியத்தில் மட்டுமா இவர் வித்தகர்?
இறகுப்பந்து விளையாட்டு, நுண்கலை சிற்பங்கள் உருவாக்குவதில் சாதனை என்று சிறுவயதிலேயே பல திறமைகளையும் கொண்டு வளர்ந்து வருகிறார்.
சிவகுருபாலாஜி,ஈரோடு  எஸ்விஎன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பத்தாம்வகுப்பு படித்துவருகிறார். இவரின் பெற்றோர்கள் சுந்தர் பவர்லுõம் மெஷினுக்கான ஸ்பேர்பார்ட்ஸ் விற்பனை செய்கிறார். அம்மா சாந்தி பட்டதாரி ஆசிரியர். தம்பி சிவசூர்யவாசன் மூணாம்வகுப்பு படிக்கிறார்.
உங்களது திறமைகள் பற்றி?
ஐந்து வயதிலிருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. பள்ளியில் நடக்கும் அனைத்துப் ஓவியப்போட்டிகளிலும் கலந்து கொண்டு நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன்.
தினமலர் சிறுவர்மலர் நடத்திய வண்ணம் தீட்டும் போட்டியில் முதல்பரிசு கிடைத்தது.
ஓவியத்தில் உங்கள் சாதனையாக எதை சொல்வீர்கள்?
 ஒரு அடி நீள, அகல திருவள்ளுவர் படத்திற்குள் 1330 திருக்குறளையும் எழுதி, 2.5 செமீ நீள, அகல புத்தகத்தில் பத்து குறள் வீதம் எழுதியுள்ளேன். அவற்றை பள்ளி  அளவில் ஓவியக்கண்காட்சியில் வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினேன். ஒரு ரூபாய் ஸ்டாம்பின் பின்புறம் 324 ஓவியங்கள்  வரைந்திருக்கிறேன். சாக்பீஸில் கிரீடம்,மிக்கிமவுஸ், சங்கிலி,வேன்,
கார், ரயில், வாள் போன்றவற்றை செதுக்கியுள்ளேன்.
ஓவியம் தவிர வேறு எதிலாவது கவனம் செலுத்துகிறீர்களா?
ஓரிக்காமி என்கிற கலைமூலம் காகித வடிவமைப்பு செய்வது. நிர்வாகத்தில் உபயோகமற்ற கழிவு பொருட்களி லிருந்து புதிய பொருட்களை உருவாக்குவது. ஆங்கிலத்தில் இலக்கணப் பிழை யில்லாமல் சரளமாக பேசுவது, தமிழில் கதைகள்மற்றும் கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறேன். மதுரை பாரதி யுவகேந்திராவின் யுவஸ்ரீகலாபாரதி விருதை பெற்றிருக்கிறேன்.
யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய இறகுப்பந்து போட்டியில் ஈரோடு மாவட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 2007ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றுள்ளேன்.செஸ் மற்றும் கேரம் விளையாடுவேன்.
எதிர்கால ஆசை?
இயற்பியல் துறை அல்லது நானோ தொழில்நுட்பத் துறையில் சாதித்து தமிழ்நாட்டையும் , இந்தியாவையும் உலக அரங்கில் பெருமைப்பட வைக்கவேண்டும்.
 செல்வ குமார்

குட்டி வாரியார்



"பிஞ்சில் பழுத்தப்பழம்' என்று பிரகதீஸ்வரனை
சொன்னால் பொருந்தும். 2ம் வகுப்பு படிக்கும் போதே பல பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றவர். மேடைப் பேச்சுத்திறன் வளர வளர இன்று ஆன்மிக சொற்பொழிவு புரிகிறார். இவரை மக்கள் "குட்டி வாரியார்' என்றே அழைக்கின்றனர்.இவர்,மதுரையில் சிஇஓஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த வயதில் எப்படிஆன்மிகம் பற்றி பேச முடிகிறது?
நான் 2ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பேசுவேன். மேடைப் பேச்சு பயம் எனக்கு இல்லாததால் மேலும் மேலும் பேச்சுத்திறமையை வளர்த்துக்கொண்டேன். என் தந்தை ஒரு தமிழாசிரியர் என்பதால் வீட்டில் நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருந்தார். அவற்றை எல்லாம் படித்தேன். தாத்தா, பாட்டிகள் சொல்லிய புராணக்கதைகள் பல கேட்டேன். இத்துடன் கடவுளின் அருளும் எனக்கிடைத்திருப்பதாக நினைக்கிறேன். ஒரு முறை கிருபானந்தவாரியாரின் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அந்தப்புத்தகக்தைப்படித்ததிலிருந்து, கிருபானந்தவாரியார் போல நாமும் பேச வேண்டும் என்று விருப்பபட்டேன். அதனால், அவர் பேசிய சொற்பொழிவுகளை எல்லாம் சிடியில் பலமுறைக்கேட்டேன். இவை எல்லாம் என் சிறியவயதிலேயே நடந்ததால், இந்த வயதில் ஆன்மிக சொற்பொழிவு செய்யமுடிகிறது.
உங்கள் கன்னிப் பேச்சு எங்கே அரங்கேற்றம்?
அப்போது 6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். மதுரை எல்ஐசி காலனியில் இருக்கும் சக்தி விநாயகர் கோயிலில் மார்கழி மாசம் 30 நாளும் வெவ்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு செய்தேன்.என் சொற்பொழிவை பலரும் பாராட்டினார்கள். இதனால், பலர் கோயில்களுக்கு என்னை சொற்பொழிவு செய்ய அழைத்தனர். நானும் மறுக்காமல் செய்து வருகிறேன்.
குட்டிவாரியர் என்ற அடைமொழி கிடைத்தது எப்படி?
என் சொற்பொழிவை ரசித்துக்கேட்ட ஒரு மூதாட்டி, என்னிடம் வந்து,"நீ நல்லா பேசுகிறார். அப்படியே கிருபானந்தவாரியர் பேசுவது போல இருக்கிறது. அவர் மறைந்தப்பிறகு, உன் பேச்சில் தான் அவரின் பேச்சு சாயலைக்கண்டேன். என்று பாராட்டி,"நீ வாரியாரின் வாரிசு! இனிமேல் நீதான் குட்டிவாரியார்' என்றார். அவர் வாயாறழைத்த அந்த அடைமொழியே என் பெயருக்கு முன்னதாக அமைந்து விட்டது.
இதுவரை எத்தனை முறை மேடையில் ஆன்மிக சொற்பொழிவு செய்திருக்கிறீர்கள்?
பேசிய மேடைகளையும், ஊர்களையும் அவ்வளவாக நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் 500 மேடைக்குமேல் சொற்பொழிவு செய்திருப்பேன்.
படிப்பில் எப்படி?
அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள் என்பதால் அவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டுக்கொள்வேன். 80 சதவீதம் மார்க் எடுத்துவிடுவேன். மற்றபடி படிப்புக்கு எந்தவிதத்திலும் என் சொற்பொழிவு தொந்தரவாக இருந்ததில்லை.
எதிர்கால லட்சியம்?
எம்பிஏ படிக்க வேண்டும் என்பது என் லட்சியமாக இருக்கிறது. படித்து முடித்துவிட்டு ஷேர்மார்க்ககெட் செய்யவேண்டும் என்பது என் எண்ணம். அத்துடன், தொடர்ந்து இந்த ஆன்மிக சொற்பொழிவையும் தொடரவேண்டும் .
வேறு எதில் நாட்டம்?
பொழுது போக்கு என்பது எனக்கு இசையை ரசிப்பது தான். அப்புறம் கம்யூட்டர் மீது ஆர்வம் உண்டு. மிருதங்கம், கிடார், கீபோர்டு, வயலின், வாய்ப்பாட்டு வாசிப்பேன். அடிப்படையில் இருந்து கற்றும் வருகிறேன்.

பின்னணி குரலில் பின்னி எடுக்கும் யாமினிப் பிரியா!



நாம் பார்க்கும் திரைப்படங்களில், தொலைக்காட்சி தொடர்களில் நடிகர், நடிகை, குழந்தை நட்சத்திரங்கள் எல்லாருமே தங்கள் சொந்தக்குரலில் பேசி நடிப்பதில்லை. அவர்களுக்காக நல்ல குரல் வளமுள்ள டப்பிங்  கலைஞர்குரல்கொடுப்பார்கள்.  டப்பிங் கலைஞர்கள் தங்கள் குரல்வளத்தால் நடிகர்களின் நடிப்பு, உதட்டசைவுக்கு ஏற்ப,குரல் நடிப்பு செய்வார்கள். இந்த டப்பிங் துறையில் 8வயதிலேயே காலடி வைத்து, 60 க்கும் மேலான படங்கள், தொடர்கள், கார்ட்டூன் படங்களில் டப்பிங்கில் அசத்திக்கொண்டிருப்பவர் யாமினி பிரியா!  அவர் சிறுவர் மலர் குட்டீஸ்களுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
உங்களைப் பற்றி சொல்லுங்களேன்...?
நான் இப்ப 11வது படிக்கிறேன். அம்மா சங்கரி, அப்பா வாசுதேவன். இருவருமே தனியார் வங்கியில் பணிபுரிகிறார்கள். எனக்கு ஒரு செல்லமான தங்கை உண்டு. அவள் பெயர் பாக்யலட்சுமி. அவளும் என்னைப்போலவே டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருக்கிறாள்.
டப்பிங் துறைக்கு எப்படி வந்தீங்க?
அது 8 ஆண்டுக்கு முன்பு நடந்த விஷயம்.  குழந்தை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தேவைன்னு ஒரு விளம்பரம் வந்தது. அதை பார்த்து நான் விண்ணப்பித்தேன். அதை சீனியர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஹேமமாலினி கொடுத்திருந்தாங்க. நேரில் போய் பார்த்தேன். அவங்க தான் எனக்கு குருவாக இருந்து 6 மாதம் டப்பிங் கொடுப்பதில் இருக்கும் பல நுட்பங்களை சொல்லிக்கொடுத்தாங்க. அவங்க கற்றுதந்த பாடமும்,நடிகர்.ராதாரவி சார் கொடுத்த ஒத்துழைப்பும் தான் இன்று என்னை ஒரு நல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் நிலைக்கு கொண்டுவந்திருக்கு.
நீங்க டப்பிங் கொடுத்த படங்கள், சீரியல்கள் பற்றி...?
புதியகீதை, சச்சின், ஜில்லுன்னு ஒரு காதல் இப்படி பல படங்களும்,
குறும்படங்களுக்கும் டப்பிங் கொடுக்கிறேன்.  "தேவிதரிசனம்' "அய்யப்பன்'  "ராஜராஜேஸ்வரி' "வேப்பிலைக்காரி' "மைடியர் பூதம்' இப்படி பல டி.வி.சீரியல்களில் வரும் குழந்தை கதாபாத்திரங்களுக்கு  டப்பிங் குரல் கொடுத்து வருகிறேன்.
டப்பிங்கில் இருப்பதால் படிப்பு எப்படி இருக்கிறது?
நன்றாகதான் படித்து வருகிறேன். முதலில் கொஞ்சம் நேரங்கள் சரிபடாமல் இருந்தது. இப்போது அந்தப் பிரச்னையே இல்லை. எனக்கு கிடைக்கும் நேரத்தில் டப்பிங் கொடுத்துவர சவுகரியமாக இருக்கிறது. அதனால் படிப்புக்கு அது தடையாக இருப்பதில்லை.
நீங்கள் குரல் கொடுத்து, நல்ல பெயர் வாங்கித்தந்த கதாபாத்திரம் எது?
எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த கேரக்டர் டோரா! அந்த டோரா கேரக்டருக்கு நான் டப்பிங் குரல்கொடுத்ததால் குழந்தைகள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
எதிர்காலத்தில் என்னவாக ஆசை?
எடிட்டிங், டப்பிங்கில் விருப்பம் இருக்கிறது. கலாமாஸ்டரிடம் டான்ஸ் கற்றுகிட்டு வருகிறேன். நல்ல ரோல் கிடைத்தால் நடிக்கவும் விரும்புகிறேன்.
 தேவராஜன்

பரதத்தில் கலக்கும் சகோதரிகள்



சென்னை கேகே நகரைச் சேர்ந்த  இரண்டு சுட்டிச் சகோதரிகள் இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தில் கலக்கி வருகிறார்கள். அக்கா மிருதுளா ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.தங்கை மிருணாளினி யுகேஜி படிக்கிறாள். மிருதுளா, பூ படத்தில் வரும் சூ..சூ..மாரி பாடலை பாடியிருக்கிறாள்.
இவருடைய அப்பா சிவக்குமார் அம்பத்துõர்ல ஒரு பிரைவேட் கம்பெனில சீனியர் அக்கவுண்டண்டு . அம்மா கவுரி வீட்ல இருக்காங்க. அப்பறம் பாட்டி ராஜி.
பரதம் பயில விருப்பம் வந்தது எப்படி?
என்னுடையமூணாவதுவயசுல நான் பரதம் ஆட ஆரம்பிச்சேன். என்தங்கை  ஒன்பதாவது மாதத்திலேயே பரதம் ஆடஆரம்பிச்சிட்டா.நாங்கள் நடனத்தின் மீது கொண்டு விருப்பத்தை அறிந்து, என் பெற்றோர்  ஸ்ரீமதி ஷீலா உன்னிகிருஷ்ணஜ் மற்றும் ஸ்ரீதேவி நித்யாலயாவிலும் முறைபடி நடனம் பயில விட்டார்கள். முறையாக அடிப்படையில் இருந்து நடனம் கற்றுக்கொண்டு தொடர்ந்து நடனம் ஆடி வருகிறேன்.
நடனம் தவிர வேறு எதிலாவது நாட்டம் உண்டா?
உண்டு. சங்கீதத்தில் நல்ல விருப்பம் இருக்கிறது. ஆதலால், சங்கீதத்தை முறைபடியும் கற்றுவருகிறேன். சமீபத்தில் வெளியான "பூ' திரைப்படத்தில்கூட குழந்தைகள் குரலுக்கான "சூச்சூ மாரி' பாடலைப் பாடி இருக்கேன்.

இதுவரை வாங்கின விருதுகள்?
ஜெயாடிவியில இரண்டு முறை தகதிமிதா நிகழ்ச்சியில 2005,07 ஜெயிச்சிருக்கேன்.துõர்தர்ஷன் கொஞ்சும் சலங்கை நிகழ்ச்சியில கலந்துகிட்டிருக்கேன்.2008 ம்ஆண்டு பெங்களூருவில் நடந்த அகில இந்திய பரதநாட்டிய போட்டியில முதல் பரிசு. தேசிய அளவிலான நாட்டிய போட்டியில்  ஐதாராபாத்தில் 2008,09ம்ஆண்டு முதல்பரிசும் வாங்கியிருக்கேன். மகாபலிபுரத்தில் நடக்கிற நாட்டியவிழாக்களில் கலந்து கொண்டிருக்கி றேன்.ஜவஹர் சிறுவர் மன்றம் நடத்திய நாட்டியவிழாவில் முதல்பரிசுவாங்கியிருக்கேன். என் தங்கை புனேவில் நடந்த குரூப் நடனத்தில் முதல்பரிசு வாங்கியிருக்கா.
உங்கள் லட்சியம்?
பரதத்தில் பெரிய அளவில் வரணும் என்பது தான் என் லட்சியமாக உள்ளது. நாட்டிய தாரகை பத்மா சுப்ரமணியன் போல நானும் வளர்ந்து முன்னேறணும்.

பொழுதுபோக்கு ?
எனக்கு நாட்டியம் தவிர, நிறைய பாட்டு, மியூசிக் கேட்பேன். படிப்பிலும் முதல்இடத்துக்கு வந்திடுவேன். அக்கா சொல்லிக்கொண்டிருக்கும் போதே தங்கை மிருணாளினி தன்னுடைய பொழுதுபோக்கு டிவிபார்ப்பது என்கிறாள்.

- selvakumar.g

ஆந்திர முதல்வர்பாராட்டிய சகலகலா வல்லவர்!



சமீபத்தில் பட்டி,தொட்டி, சிட்டிகளில் குழந்தைகள் அதிகமாய் முணுமுணுத்த பாடல் "சூச்சூ மாரி'. "பூ' படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலைப் பாடியவர்
சென்னை அசோக்நகரைச்  சேர்ந்த எஸ். பார்த்தசாரதி. இவர், ஜி.ஆர்.டி மகாலட்சுமி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். படித்துக் கொண்டே பல சாதனைகளையும் , திறமைகளையும் தனக்குள்ளே வளர்த்துக்கொண்டு, வளர்ந்து வருகிறார்.
இசை ஆர்வம் வந்தது எப்படி?
சின்னவயசில இருந்தே பாடுவேன். எந்தப் பாட்டைக் கேட்டாலும் திரும்பி பாடிப் பார்ப்பேன். அப்படிஇசையில  ஆர்வம் வந்தது.பிறகு
அதுக்கான பயிற்சியை  மேண்டலின்  முத்து, டிரம்ஸ் கோபால், இந்துஸ்தாணி இசைக்கலைஞர் வீரேஷ் மாதுரிகிட்ட இசையை கத்துக்கிட்டேன்.
திரைப்பட பாடல்பாட வாய்ப்புஎப்படி வந்தது?
பிரபல டி.வி. ஒண்ணுல இசைநிகழ்ச்சி போட்டி  நடந்தது.அதுல நிறைய பேர் கலந்துக்கிட்டு பாடினாங்க. நான் நல்லா பாடினதைப்பார்த்த  இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் எனக்கு  பூ படத்தில “ ச்சூ ச்சூ மாரி பாட்டுக்கு  வாய்ப்பு கொடுத்தார்.தவிர
பள்ளிகள்ல  நடந்த இசைப்போட்டிகள்லேயும் பாடி நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். அப்பறம் , இசைமொட்டுகள்ங்கற இன்னிசை குழுவுல சேர்ந்து நுõத்துக்கணக்குல  பாடல்களை பாடியிருக்கேன்.
இசைதவிர வேற திறமைகள்?
 அபாகஸ்ங்கற  எளிய முறையில் கணக்குகள் செய்ற வித்தையும் கத்துக்கிட்டிருக்கேன். சில ஆண்டுகளுக்கு முன்னே  ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்னால  மிக கஷ்டமான  அபாகஸ் கணக்குகளை செஞ்சு காட்டி பாராட்டு வாங்கினேன். கணிதமேதை சகுந்தலா தேவியைப் போல நீ கணிதத்தில் சாதனை படைக்கணும்னு  பாராட்டினார்.
பாடல்களை பாடறதோட , கம்போசிங் செய்ற பயிற்சியையும் செஞ்சுக்கிட்டு வர்றேன்.
பொழுது போக்கு?
பொழுது போக்குன்னு சொல்லணும்னா செஸ், கேரம், சட்டில்டு, தபால் தலைகள் சேகரிக்கறது . ஒரு நாள் காலையில் டியூசன் முடிச்சுட்டு  வரும் போது மரத்திலிருந்து ஒரு நாரைப்பறவை  அடிபட்டு விழந்துடுச்சு உடனே புளூகிராஸ்க்கு தெரியப்படுத்தி காப்பாத்திட்டேன். அந்தப்பறவை சரியாகற வரை என்னால சாப்பிட முடியலை. மனுசு கனத்துப்போச்சு .
உங்க வீட்டைப் பற்றி சொல்லுங்களேன்?
எங்க வீட்ல நான்மட்டும் தான். அதனால ஒரு அனாதை இல்லத்திலிருந்து ஒரு பெண்ணை தத்தெடுத்து, அவளை என் தங்கையாக பாவித்து, அவள் படிப்புக்கு உதவிசெய்தேன். என்றார் பார்த்தசாரதி.அவரது திறமைகள் வளரட்டும் என்று வாழ்த்திவிட்டு வந்தோம்.
செல்வகுமார்

மாணவ மாணவிகள் தனித்தன்மையுடன் இருந்தால்தான் சாதனை படைக்க முடியும் - அப்துல்கலாம்



திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள எஸ்.ஆர்.சி. கல்லூரியில் 60வது ஆண்டு விழா நடந்தது. விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேச்சு


மாணவ மாணவிகள் தனித்தன்மை பெற்று இருக்க வேண்டும். தனித்தன்மையுடன் இருந்தால்தான் சாதனைகள் படைக்க முடியும். மின்சார பல்பை கண்டுபிடித்த தனித்தன்மை உடையவர் எடிசன். விமானத்தை கண்டுபிடித்தது ரைட் சகோதரர் களின் தனித்தன்மை.

 சர்.சி.வி. ராமனின் தனித்தன்மை ஒளிச்சிதறலை கண்டு பிடித்தது. காந்திக்கு அகிம்சை தனித்தன்மை. இதனால்தான் அவர்களால் வரலாற்றில் இடம் பிடிக்க முடிந்தது. எனவே மாணவ மாணவிகள் தனித்தன்மையை வளர்த்து கொண்டால் வரலாற்றில் இடம் கிடைக்கும்.
மாணவிகளுடன் அப்துல் கலாம் கலந்துரையாடினார். அப்போது ஹேமலதா என்ற 10ம் வகுப்பு மாணவி குழந்தைகள் முதல் விஞ்ஞானி. அவர்கள் 90சதவீதம். 10 சதவீதம் தான் கடவுள் என்று கூறியுள்ளீர்கள். ஏன் அப்படி கூறினீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அப்துல்கலாம். குழந்தைகள் தான் அதிகமான கேள்விகள் கேட்கிறார்கள்.

2 வயது முதலே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். கேள்வி கேட்பவர்களால்தான் படைப்பை உருவாக்க முடியும்.எனவே குழந்தைகள்தான் முதல் விஞ்ஞானிகள் என்றார்.   இன்னொரு மாணவி வேற்று கிரகங்களில் மனிதர்கள் வசிக்க முடியுமாற என்று கேட்டார். அதற்கு ள்பால்வெளி மண்டலத்தில் ஏராளமான நட்சத்திர கிரககூட்டங்கள் உள்ளது. எதிர்காலத்தில் அது சாத்தியமாகும் என்று அப்துல்கலாம் கூறினார்.

இயற்கை சீற்றததை முன்பே கண்டறிந்து மக்களை காப்பாற்ற முடியாதா? என்ற இன்னொரு மாணவியின் கேள்விக்கு பதில் அளித்த அப்துல்கலாம் பூகம்பத்தை தவிர மற்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கண்டறிய வசதி உள்ளது. பூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய இன்னும் 10 ஆண்டுக்குள் விஞ்ஞானம் வளர்ந்து விடும் என்று கூறினார்.

விழாவில் கலந்து கொண்ட அப்துல் கலாம் காலணியை நிகழ்ச்சி முடிந்ததும் அணிய சென்றார். அப்போது ஒரு காலணி புரண்டு கிடந்தது. உடனே அவரது பாதுகாப்பு அதிகாரி அந்த காலணியை எடுத்து கொடுத்து அவருக்கு உதவ முயன்றார்.

அவரை தடுத்த அப்துல்கலாம் தானே காலணியை எடுத்து அணிந்து கொண்டார். இதை பார்த்த மாணவர்கள் மற்றும் விழாக்குழுவினர் அவரது எளிமையை, பண்பை வியந்து பாராட்டினர்.
THANKS TO DINAMALAR

யோகாடாக்டராகணும்!' சபரிதா



யோகாவில் சர்வதேச சாம்பியன் பட்டம் வென்றுள்ள சபரிதா: சிறு வயதில், எனக்கு இதயத் துடிப்பு அதிகமாக இருந்தது. அதை யோகா மூலம் சீராக்கலாம் என்ற மருத்துவரின் ஆலோசனையினால், யோகா பயிற்சிக்கு சென்றேன்.யோகா சென்டரில் நிறைய குழந்தைகள் இருப்பர், அங்கு சென்றால் விளையாடலாம் என்பதே, என் ஆர்வமாக இருந்தது. ஆனால், யோகா போட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்த போதுதான், இது விளையாட்டல்ல, சாதிக்க வேண்டிய களம் என்று புரிந்தது.ஏழு வயதிலேயே, மாநில அளவிலான போட்டிகளில், முதல் பரிசு வாங்கினேன். மாவட்டம், மாநிலம், தேசிய, சர்வதேச அளவில் என வெற்றிகள், தொடர்கின்றன. நான் வீட்டில் இருப்பதை விட, யோகா சென்டரில் இருக்கும் நேரம் தான் அதிகம். தினமும் காலை, மாலை பயிற்சி எடுப்பேன்.இதில், எனக்கு இவ்வளவு ஆர்வம் ஏற்பட, என் பயிற்சியாளர், மாதவன் சார் தான் காரணம். பல சிரமமான ஆசனங்களை அவர் செய்யும்போது, அனைவரும் ஆச்சர்யமாகப் பேசுவர்.

அதே போல, என்னையும் பேச வேண்டும் என ஆசைப்பட்டு, பயிற்சிகள் எடுத்தேன்; இப்போது பேசுகின்றனர்.புதுச்சேரியில் நடந்த சர்வதேச போட்டியில், 19 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் நான் சாம்பியன் ஆனேன். பின், சீனா, ரஷ்யா, ஹாங்காங் என, நடந்த கடுமையான போட்டிகளிலும், சாம்பியன் பட்டம் வென்றேன். இதுவரை, மாநில அளவில், 15 தங்கம், தேசிய அளவில், 10 தங்கம், தெற்கு ஆசிய நாடுகள் அளவில் இரண்டு தங்கம், சர்வதேச அளவில் ஒரு தங்கம் பெற்றிருக்கிறேன். யோகாவில் நேச்சுரோபதி படித்து, யோகா டாக்டராக வேண்டும் என்பதே என் ஆசை.இப்போதே, என் நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம், இடுப்பு வலி, கை, கால் வலி நீங்க, யோகா சொல்லிக் கொடுத்து, குணம் பண்ணிவிடுகிறேன்.
THANKS TO DINAMALAR

சுருள் வாளைச் சுழற்றும் அருவி!


வெட்டுக்கத்தி, சுருள்வாள், சுழற்றும் கம்பு என சூறாவளியாய்ச் சுற்றி வருகிறார் தமிழருவி.

சுருள்வாளில் மிக ஆபத்தான இரட்டைச்சுருள்வாளைச்

சுழற்றுவதில் வல்லவர். திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடாம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

சுருள்வாள் போட்டிகளில் மட்டுமின்றி, சிலம்பம், தேக்வாண்டோ உள்ளிட்ட போட்டிகளிலும் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்து வரும் தமிழ்அருவி, விளையாட்டு நுணுக்கங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டவை..

""என் தந்தை திருமாறன் ஒரு சிலம்ப வீரர் என்பதால், எனக்குச் சிறுவயதிலேயே சிலம்பத்தைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார். பாலசுப்பிரமணியன், ஜான்பாவா, அருணாசலம் எனப் பலபேரிடம் பயின்றாலும், சுருள்வாள் வித்தையையும், நுணுக்கங்களையும் திறம்பட கற்றுக்கொண்டது தென்காசி அருகே உள்ள கடபோகத்தி பேச்சிமுத்து என்பவரிடம்தான்.

முதலில் சாதாரண கயிறு, பின் சைக்கிள் டியூப் எனத் தொடங்கி, பின் கூர்மையான சுருள்வாள்களைக் சுழற்றக் கற்றுக் கொண்டேன். தமிழகத்தில் எங்கு போட்டி நடந்தாலும் அங்கு என் பங்களிப்பு இருக்க வேண்டும் எனக் கருதி செல்வதுண்டு.

தமிழகக் காவல்துறை முன்னாள் தலைவர் தேவாரம், திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயணராவ், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் எங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது அவர்கள் முன்னிலையிலும், சென்னை சங்கமம் நிகழ்ச்சியின்போது, தமிழக முதல்வர் முன்னிலையிலும் சுருள்வாளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளேன்.

தேக்வாண்டோ கலையில் முதல்நிலை கருப்புப்பட்டை பெற்றுள்ளேன். பல்வேறு அமைப்புகள் சார்பில் சுருள் வாளரசி, கலைமதி, கலைஜீவன், இளம் சாதனையாளர் விருது போன்ற எண்ணற்ற விருதுகள் மற்றும் பட்டங்கள் பெற்றுள்ளேன். தொடர்ந்து பலமணிநேரம் சுருள்வாள்களைச் சுழற்றி, கின்னஸ் சாதனை, லிம்கா சாதனை, குளோபல் ரெக்கார்டு ஆகியவற்றில் இடம்பெற வேண்டும். மேலும் மருத்துவம் படித்து கிராமப்புற ஏழைகளுக்குச் சேவைபுரிய வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்'' என்றார் சுருள் வாளை விர்ரென்று சுற்றியபடி, தமிழ்அருவி!
வை.இராமச்சந்திரன் (THANKS TO: DINAMANI.COM)

சிலம்பாட்டம்: மாணவி பூஜா மோகன்.

சிலம்பாட்டம் இல்லாத கிராமத்துச் சினிமா அபூர்வம். இது எம்.ஜி.ஆர். காலத்து ஃபார்முலாவாக இருந்தாலும் இப்போதும் மக்களின் ஆர்வத்துக்குத் தீனிபோடும் காட்சிகளாக இருக்கின்றன. ஆண்களின் விளையாட்டாகக் கருதப்படும் இந்தச் சிலம்பத்தைப் பெண்களாலும் விளையாட முடியும் என்பது மட்டுமின்றி தேசிய அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் திண்டுக்கல் புனித வளனார் மெட்ரிக் பள்ளியில் தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பூஜா மோகன்.

சிலம்பம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது எப்போது?

அப்பா மோகன் கராத்தே மாஸ்டராகவும் சிலம்பம் பயிற்சியாளராகவும் இருப்பதனால் 5 வயது குழந்தையாக இருந்த போதே சிலம்பம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இதனால் முதல் வகுப்பு மாணவியாக இருந்தபோது நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் கிடைத்தது. தொடர்ந்து மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்றேன். வேலூரில் 2005 ம் ஆண்டில் நடைபெற்ற ஐந்தாவது தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் கிடைத்தது. 2009ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற 6வது தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் தங்கம் வென்றேன்.  2010ஆம் ஆண்டில் திருவள்ளூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் முதலிடம் கிடைத்தது. ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் கடந்த மே மாதம் நடைபெற்ற எட்டாவது தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றதைத் தொடர்ந்து மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான தகுதி கிடைத்துள்ளது.

சிலம்பாட்டத்தில் எத்தனை வகைகள் உள்ளன?

அலங்காரச் சிலம்பம், போர் சிலம்பம், குறவஞ்சி சிலம்பம், பனையேறி மல்லு, துலுக்கானா, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு எனப் பலவகைகள் உள்ளன. அலங்காரச் சிலம்பம் என்பது அரசர் காலத்தில் திருவிழாக்கள் மற்றும் கேளிக்கைகளுக்காக விளையாடப்படுவது. போர் சிலம்பம் வன விலங்குகள் மற்றும், எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆடப்படுவது. இதைத் தவிர ஒவ்வொரு வட்டாரத்திலும் விளையாடப்படும் வகைகளைக் கொண்டு குறவஞ்சி, பனையேறி மல்லு எனப் பெயர் வந்தது.

சிலம்பம் கற்பதனால் என்ன பயன்?

கம்பு எடுத்து சுழற்றும்போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட உடல் பயிற்சியை ஒருவர் குறிப்பிட்ட வயது வரை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால் சிலம்பாட்டம் கற்றவர் 85, 90 வயதானாலும் விளையாடுவதால் இறுதி வரை அவர் உடல் பயிற்சி செய்பவராக ஆகிறார். இதைத் தவிர சிலம்பம் ஒரு தற்காப்பு கலை. கம்பை எட்டு திசைகளிலும் சுழட்டும்போது நமது உடம்பைச் சுற்றி ஒரு வேலியை உருவாக்கிட முடியும். ஒரே ஓர் ஆயுதத்தைக் கொண்டு வேலி அமைப்பது என்றால் அது சிலம்பத்தினால் மட்டுமே முடியும். இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும்.

மற்ற விளையாட்டுக்களைப் போல இந்த விளையாட்டுக்கும் அரசு சலுகை உள்ளதா?

தற்போது மாநில அளவில் பள்ளிகளில் புதிய விளையாட்டு எனச் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. உயர்நிலைக் கல்வி சேர்க்கையிலும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலும் 5 சதவீதம் இடஒதுக்கீடு இந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது.

கண்ணகியின் கால் சிலம்பால் மதுரை நகர் அழிந்ததாகக் காப்பியங்கள் கூறுகின்றன. கால் சிலம்புக்கு உள்ள வலிமையைவிட கை சிலம்புக்கு அதிக வலிமை உள்ளது என்பதை நிரூபிக்கும் போட்டியாக மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

 வி.ரவிச்சந்திரன் (THANKS TO: DINAMANI.COM)

இனிய குரலில் கலக்கும் சவுந்தர்யா




கடுகு சிறதென்றாலும் காரம் குறையாது என்பார்கள். அப்படி இத்தனை சிறுவயதில் தன் மழலை குரலால் குழந்தைகளுக்கான பாடல்களைப் பாடி சினிமாபாடல்கள் மூலம் மற்றவர்கள் மனதை கொள்ளையடிப்பதோடு, தன் இனியை குரலால் பலரையும் கவரந்து வருகிறார் சவுந்தர்யா. அவரை சந்தித்தோம். 
*உங்களைப்பற்றி?
அப்பா ரமேஷ் ஆர்கெஸ்டிரா வைத்திருக்கிறார். அம்மா கீதா பாடகி. ஆர்கெஸ்ட்ராக்கள்ல பி.சுசிலாகுரல்ல பாடுவாங்க. அண்ணன் சக்திவேல், திருவாரூர் அரசு இசைப்பள்ளியில வயலின் கத்துக்கிறார். இன்னொரு அண்ணன் மோகன்ராஜ் பிளஸ் 2 படிக்கிறார். அப்பா தபேலா வாசிப்பார். ராகரஞ்சனின்னு ஆர்கெஸ்ட்ரா வெச்சிருக்கார். நான் லட்சுடம நாராயணன் மிருதங்கம், வாய்ப்பாட்டு கலைஞர்க்கிட்ட பாட்டு கத்துக்கிறேன்.
நான் இந்தவருசம் ஆறாம்வகுப்பு துõய அகுஸ்தினார் நடுநிலைப்பள்ளி,கும்பகோணத்தில படிக்கிறேன். கர்நாடக சங்கீதத்தில பெயர் வாங்கினவங்கள்ல கும்பகோணம் காந்தா என்னோடப்பாட்டி.எங்கதாத்தா சாமிநாதன் தபேலா இசைக்கலைஞர். மொத்தத்தில எங்க குடும்பம் ஒரு இசைக்குடும்பம் னு சொல்லலாம்.


* உங்களுடைய வேறுதிறமைகள்?
நாலுவயதிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, கள்ல பள்ளி அளவிலங மாவட்டஅளவில  லயன்ஸ்கிளப்  நடத்தின போட்டிகள்ல நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்.   
 விளையாட்டில ஆர்வம் இருந்தாலும் அம்மா கலந்துக்க வேண்டாம்னு சொல்லுவாங்க. காரணம் விளையாடற அளவுக்கான  உடம்புவாகு எனக்குக் கிடையாதுனு விளையாட்டுப்போட்டிகள், பயிற்சிகள்ல கலந்துக்க வேண்டாம்னு சொன்னாங்க.

*உங்களுடைய பாடும் திறமை?
குழந்தைகள் பாடல்கள் எல்லாம் பாடுவேன். விழிப்புணர்வு பாடல்கள், கும்பகோணம்  தீவிபத்தில குழந்தைகள் இறந்தது அப்போ நடத்தின நினைவுதின விழாவுல குழந்தைகளுக்காக பாடல் பாடி அனைவரோட பாராட்டையும் வாங்கினேன். கும்பகோணத்தில வழக்கறிஞர் சுகுமாரன்னு அவர் மூலமாக சட்டம் சம்பந்தமாக தகவல்களை பாடல்கள் மூலமாக பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திக்கிட்டிருக்கேன். இந்தியன் படத்தில பொம்மலாட்ட காட்சிவரும் அதுக்காக எங்க அப்பா அம்மா ஆர்கெஸ்ட்ரா குரூப் படத்துக்காக செய்திருக்காங்க

சிலம்பம் சுழற்றும் சவுபர்ணிகா



ஆண்கள் மட்டுமே சாதிக்கும் துறை என்று எண்ணும் நிலையில் பலரும் சிலம்பம் சுழற்றும் போது கண்ணில் பட்டுவிடுமோ, தலையை தட்டிவிடுமோ என்று பயந்து நடுங்கும் நிலையில் சமையலுக்கு கரண்டி மட்டுமே பிடிப்பவர்கள் என்பதை பொய்ப்பிக்கும் விதமாக இத்தனை சிறுவதில் தன்னை விட உயரமான சிலம்பத்தை சுழற்றி தேசிய போட்டிகளிலும் பங்கேற்று தங்கமெடல்களை குவித்து வருகிறார் வீரத்திற்கு பேர் போன திருநெல்வேலியைச் சேர்ந்த சவுபர்ணிகா. சிலம்பம் சுழற்றும் அவரிடம் பேசியதிலிருந்து ..
*உங்களுடைய குடும்பம் பற்றி சொல்லுங்க?
எனக்கு சொந்தஊர் திருநெல்வேலி தான். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இருக்கிற பெல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நான் ஆறாம் வகுப்பு (இப்போது பாஸாகி ஏழாம் வகுப்பு உயர்வு பெற்றிருக்கிறார்)  படிக்கிறேன். அப்பா ஜி. நெல்லையப்பன் பஸ் கண்டக்டர்.மதுரை திருநெல்வேலி ரூட்டில் போய்க்கிட்டிருக்காரு. அம்மா என் .சிவகாமி இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்ல சப்த்ரியாக வேலைப்பார்க்கிறாங்க. நான் ஒரே பொண்ணு.

*சிலம்பாட்டத்தில் நீங்கள் சுழற்றி பறித்த பதக்கங்கள்?
  பிப்ரவரி மாதம் பாண்டிச்சேரி மாநிலத்தில் நடந்த சிலம்பாட்டப் போட்டியின்  ஜீனியர் பிரிவில் கலந்து க்கிட்டு தங்கப் பதக்கம் ஜெயிச்சேன். தொடர்ந்து ஆசிய உலகளவிலான போட்டியில பங்கெடுத்துக்கிட்டு தங்கப்பதக்கம் ஜெயிச்சேன். இந்தப்போட்டி  டில்லியில நடந்தது. மொத்தம் ஆறு நாடுகள்ல இருந்து ஒரு நாட்டுக்கு ஒருத்தர் வீதமா கலந்துக்கிட்டாங்க. எல்லாரும் பத்துவயசு தகுதி அளவில கலந்துக்கிட்டாங்க.இது தவிர மாவட்ட அளவிலான போட்டிகள் தென்காசி, மேலப்பாளையம், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகள்ல நடந்தது.அதிலும் பல பதக்கங்கள் ஜெயிச்சிருக்கேன்.

*சிலம்பாட்டத்தில  ஆர்வம் வந்ததெப்படி?
ஐந்து வயசில  இருந்து எனக்கு சிலம்பாட்டத்தில ஆர்வம். எங்க ஊர்  கோயிலில்  தசரா திருவிழா சமயத்தில சிலம்பாட்டம்  நடக்கும். அப்பாக்கூட சிலம்பாட்டத்தை வேடிக்கை பார்க்கப்போனேன். சின்னப்பசங்க நிறையபேர் ரொம்ப நேரம் சிலம்பம் சுத்தறதைப்  பார்த்ததும் , எனக்கும்  சிலம்பம் சுத்தணும்னு  ஆசையாக இருந்தது. உடனே அப்பாக்கிட்ட கேட்டேன். அவரும் சேர்த்து விட்டாரு.
அப்படி விளையாட்டாக தொடங்கின ஆர்வம் இப்போ திருநெல்வேலி மாவட்டம் முழுக்க எனக்கு பேர் வாங்கிக் கொடுத்திருக்கு.  இது தவிர  பேஷ்கட் பால் விளையாடுவேன்.அப்பாவும் கல்லுõரி அளவில பேஷ்கட் பால் விளையாடியிருக்கிறார். இப்போ பேஷ்கட் பால் விளையாட்டு நடக்கிற இடங்களுக்கு அம்பையராக போயி கலந்துக்குவாரு. 14 வயசுக்குள்ளே இருக்கிற சிலம்பாட்டத்தில  நான் தான் பர்ஸ்ட் என்கிறார் பெருமøயாக. இதுதவிர வீட்ல மியூசிக் போட்டுவிட்டு ஆடறது பிடிக்கும், பாடுவேன். பெயிண்டிங்கும் வரைவேன். என்னுடைய சிலம்பாட்ட குரு ஆதிசுந்தரி. இந்திய அளவிலான போட்டிகள்ல நிறைய ஜெயிச்சிருக்காங்க. அவங்களுடைய அப்பா ஏ.சுந்தரம் அவரும் அகில உலக அளவிலான போட்டிகள்ல கலந்துக்கிட்டு ஜெயிச்சிருக்கார். இப்போ நடுவராக பல போட்டிகள்ல கலந்துக்கிறாரு.

செல்வகுமார்

விணையிலும், மிருதங்கத்திலும் கலக்கும் சகேதாரிகள்


சென்னை நங்கநல்லுõரைச் சேர்ந்த எஸ்.அஞ்சனி, எஸ்.அஸ்வினி என்கிற இரு சகோதரிகளும் வீணை மற்றும் மிருதங்கம் வாத்தியங்களை இசைப்பதில் இத்தனை சிறிய வயதிலேயே மிகவும் பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் மாலை நேரத்தில் அவர்களது இல்லத்தில் வைத்து சகோதரிகளை சந்தித்தோம்.

*உங்களைப் பற்றி?
அப்பா சீனிவாசன் பிசினஸ் செய்கிறார். அம்மா ரமா சீனிவாசன் வாய்ப்பாட்டு ஆசிரியையாக சொல்லித்தந்தாங்க. இப்போ எங்களுக்கு உதவியாக இருக்காங்க. நாங்க இரண்டு பேரும் ராஜ்குமார்சுலோசனா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில அஞ்சனி பத்தாம் வகுப்பு போகப்போறா, நான் எட்டாம் வகுப்பு போகப்போற÷ன் .
 
*உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது? உங்களின் குரு?
என்னுடைய சிறிய வயதில அம்மா மத்தபசங்களுக்கு வாய்ப்பாட்டு சங்கீதம் சொல்லிக்கொடுத்திட்டு இருந்தாங்க. அப்போன்னு பார்த்து கேள்வி ஞானத்தால நானே ஒரு டப்பாவை எடுத்து தட்ட ஆரம்பிச்சேன். நான் நல்லா ஜதியோட தாளம் தப்பாம அடிச்சதைப்பார்த்த அம்மா முறையாக கத்துக்க ஒரு டோலக் வாங்கிக் கொடுத்தாங்க. அப்படி தாளம் அடிச்சதைப்பார்த்த எங்க குடும்ப நண்பர் சேஷாகலாராமன் சார்  டி.கே.மூர்த்தி சார்க்கிட்ட சேர்த்து விட்டாங்க.என்கிறார் எஸ்.அஷ்வினி. தங்கை சொல்லிமுடிக்கவும் அக்கா அஸ்வினி தன் டசை ஆர்வம் பற்றி சொல்லத்தொடங்கினார். என்னுடைய விணை ஆர்வம் நாங்க குடும்பத்தோட முன்னே வேற வீட்ல வாடகைக்கு குடியிருந்தோம். அப்பபோ அவங்க வீட்ல வீணை இருந்தது. அதுபழசாகி லேசாக சிறு குறைகளோட இருந்தது. அதை என்கிட்ட கொடுத்திட்டு போயிட்டாங்க. அப்பறம் அப்பா அதை சரி செய்து கொடுத்தார். என் தங்கை கேள்வி ஞானத்ததால மிருதங்கம் வாசிக்க ஆரம்பிச்சது மாதிரி நானும் வீணை இயல்பாக வாசிக்க ஆரம்பிச்சிட்டேன். எங்க குடும்ப நண்பரோட உதவியால வீணை காயத்ரி மேடம் கிட்ட வாசிச்சு காட்டினேன். அப்பறம் வீணை காயத்திரியோட அம்மா கமலா அஸ்வத்தாமா என்னுடைய குரு.
*எத்தனை கச்ஙசரிகள் வாசிச்சிருப்பீங்க?
இதுவரை நானுõரு கச்சேரிகள் இருக்கும். பிலாஸ்பூர், ஐதாராபாத், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு  எங்களுடைய ராகவேந்திரா மந்திராலயம் மூலமாக போய் வாசிச்சிட்டிருக்கோம். சிங்கப்பூர் தான் நாங்க முதன்முதல்ல போயிட்டு வந்த வெளிநாடு.

*பாராட்டுக்கள்?
மதுரை தமிழ்இசைச்சங்கம் விருது கொடுடுத்தது,  ரோட்டரி கிளப் மூலமாக சைல்டு பிராடிஜி,ரிலையன்ஸ் இளையராகம் மியூசிக் அகாடமி, இப்படி சபாக்களும், அகாடமிகளும் எங்களை வாழ்த்தியிருக்கின்றன.
* எதிர்கால ஆசை?
விணை காயத்ரி மாதிரி பெரிய ஸ்டாராகணும், என்று அஞ்சனா சொல்ல, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா கூட டி.கே.மூர்த்தி சார் ஐ.நா சபையில மிருதங்கள் வாசிச்ச மாதிரி நானும் அதே சபையில மிருதங்கம் வாசிக்கணும். என்று சொல்லும் அஸ்வினி மேடைக் கச்சேரிகளுக்கு போகும் இடங்களுக்கெல்லாம் அவருடைய அப்பா தான் ஏழு கிலோவிற்கும் அதிகமான எடை உள்ள மிருதங்கத்தை துõக்கி செல்வாராம்.
அதேப்போல இரண்டு , மூன்றுமணிநேரம் வாசித்தாலும் கைவிரல்கள் வலிக்காது அதற்காக பயிற்சி செய்கிறோம்.கலையை விடாம வளர்க்கணும்  என்கிறார்கள்  உற்சாகமாக சகோதரிகள் இருவரும்.
செல்வகுமார்

யங் ஜீனியர்ஸ்


பிரியதர்சினியை அடையாளப்படுத்த ஒரு முகம் என்றாலும் அவரது திறமைகளை பறைசாற்ற பன்முகத்திறமைகள் அவருக்குள் ஒளிந்திருக்கின்றன. தனது திறமையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் மற்ற சிறுமிகளுக்கு ஒரு முன் உதாரணமாய் விளங்குகிறார் . அவரது திறமைகளும், சாதனைகளும் இங்கே..

* உங்களைப்பற்றி?
என் பெயர் பிரியதர்சினி. நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். மவுன்சியான் மெட்ரிக்குலேசன் ஹையர்செகண்ட்ரி ஸ்கூல்ல படிக்கிறேன். அப்பா எஸ்.மூர்த்தி சிவில் சப்ளையில வேலைப்பார்க்கிறார். அம்மா புவனேஸ்வரி வீட்டிலிருந்து எங்களை ப்பார்த்திருக்கிறாங்க. தாத்தா உமாமகேஸ்வரன் . வீட்ல அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு.
* உங்க கிட்ட பலதிறளைகள் இருக்கிறதா சொல்கிறாங்களே?
பரதநாட்டியம், சிலம்பாட்டம், கராத்தே, பேச்சுப்போட்டின்னு எல்லாத்திலயும் வெளுத்து வாங்குவேன். பரதநாட்டியம் சமீபத்தில தஞ்சாவூர் பெரியகோயில்ல நடந்தது.அதில கலந்துக்கிட்டேன். பரதநாட்டிம் எட்டுவயசுல இருந்து கத்துக்கிறேன். ஹேமந்த்குமார் வெங்கட்ரமணன்,சிலம்பு கடந்த ஐந்து வருசமாக கத்துக்கிறேன். இதுவரை முப்பது மேடைகள் கிட்ட ஆடியிருக்கேன். அந்தோணிராஜ் மாஸ்டர்க்கிட்ட கத்தக்கிறேன். சிலம்பத்தில வேலுõர் மாவட்டத்தில நடந்த தேசிய போட்டியில முதல்பரிசு வாங்கினேன். கராத்தே பாலசுப்பிரமணியன் மாஸ்டர்கிட்ட கத்துக்கிறேன். கராத்தேயில பிரவுன் பெல்ட் மூணும் வாங்கிட்டேன். அடுத்து பிளாக் பெல்ட் வாங்கணும்.பேச்சுப்போட்டியில சின்னவயசுல இருந்து கலந்துக்கறேன். அம்மாதான் எனக்கு பேச்சுப்போட்டிக்கான கருத்துக்களை சொல்லிக்கொடுப்பாங்க. அதனால கலந்துக்கற எல்லாப்போட்டிகளிலும் கண்டிப்பாக ஏதாவது ஒருபரிசு வாங்கிட்டு வந்திடுவேன்.
*  இதுவரை வாங்கின விருதுகள்?
திருச்சி மாணவர் சாதனை அரங்கம் "நாட்டியதாரகை'தந்தது. திஷா மாபா பாண்டியராஜன் அறக்கட்டளை 2008ல இளம்சாதனையாளர் விருது கொடுத்தாங்க. மதுரையில  யுவகலாபாரதி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் "வெற்றிச் செல்வி'விருது கொடுத்தாங்க. இந்தவிருதை கொடுத்தது அமைச்சர் ரகுபதி.  என்னுடைய நாட்டியத்தைப்பார்த்த முன்னாள் வீட்டுவசதித் துறை அமைச்சர்  நல்லுச்சாமி மனைவி ராமேஸ்வரியம்மாள்உன்னுடைய நடனம் அற்புதமாக இருக்குன்னு பாராட்டினாங்க. ஸ்ரீராம்சிட்பண்ட் தமிழ்நாடு பேச்சுப்போட்டி நடத்தியது அதிலும் பரிசு வாங்கினேன்.

சனி, 14 ஏப்ரல், 2012

சுட்டியான குட்டி ஓவியர் எம்.எஸ்.சுவேதா



சென்னை கன்னிமாரா நுõலகத்தின் எதிரே அம்பாசிடர் பல்லவா ஓட்டலில் தனது தந்தையுடன் சேர்ந்து தன்னுடைய ஓவியங்களையும் கண்காட்சிக்கு வைத்திருந்தார் ஓவியச்சிறுமி எம்.எஸ். சுவேதா.

*உங்களுடைய குடும்பம்  பற்றி?
அப்பா எஸ்.ஜி.மகாதேவன் பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரி வெச்சிருக்கார். பிளாக்அண்ட் ஒயிட்ல கோட்டோவியங்களும் வரைவார். அம்மா சுதா மகாதேவன்  கர்நாடிக் இசை பாடகர். வீட்டில்  கர்நாடக இசை சொல்லித் தர்றாங்க.  அண்ணன் பாலசுப்பிரமணியன் பிளஸ் டூ படிக்கிறார் . வயலின் கத்துக்கிறார். அப்பறம் தாத்தா சுப்பிரமணியம் ஜோதிடம் பார்க்கிறார்.பாட்டி சுப்புலட்சுமி. அப்பறம் அப்பாவோடு கூடப்பிறந்தவங்கன்னு எல்லோருமா கூட்டு குடும்பமா இருக்கோம். நான் சின்மயா வித்யாலயாவில ஏழாம் வகுப்பு படிக்கிறேன். 
* ஓவியத்தில் சாதித்துக் கொண்டிருப்பது பற்றி ?
 2007ல் தேசிய அளவில்  நடைபெற்ற ஐடிசியின் இளைஞர்களுக்கான ஓவியப் போட்டியில் விருது பெற்றேன்.அது விண்வெளி பற்றிய ஓவியம். மேலும்,  என்னுடைய ஓவியம் ஒன்றுக்கு  லண்டன் பத்திரிகை ஒன்று எனக்கு பரிசாக  இருபது பவுண்டுகள் கேஷ் அவார்டு கொடுத்தார்கள். தமிழ்நாடு வன இலாகா துறை நடத்திய போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் முதல் பரிசு வாங்கினேன். உலக அளவிலான பிடிலைட் ஓவியப்போட்டியிலும், டாபாஸ்யா ஸ்கூல் ஆப் ஆர்ட் நடத்திய போட்டியிலும் முதல்பரிசு கிடைத்தது. மதுரை பாரத் யுவ கேந்திரா டிரஸ்ட்   எனக்கு யுவஸ்ரீகலாபாரதி விருது கொடுத்தார்கள்.  இப்படி அறுபதுக்கும் மேற்ப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு நிறைய பரிசுகளை பெற்றிருக்கிறேன்.

* எப்போதிலிருந்து உங்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வம்?
என்னுடைய மூன்று வயதிலிருந்து நான் வரைந்து வருகிறேன். அந்தச்சிறு வயதிலேயே  வெள்ளைப் பேப்பர்ல கிரேயான்கள் வெச்சுக்கிட்டு படங்களை வரையத்தொடங்கியிருக்கிறேன். காரணம் அப்பாவும் வரைஞ் சுக்கிட்டு இருக்கறதால அதைப்பார்த்து நானும் கிறுக்கிட்டு இருப்பேன். பள்ளியில் நடத்தின ஓவியப்போட்டிகள்ல நிறைய பரிசு வாங்கியிருக்கேன்.   ஓவியபயிற்சியை லாவண்யாங்கற ஓவிய ஆசிரியர்க்கிட்ட கத்துக்கிறேன்.  கிளாஸ் பெயிண்டிங், பேப்ரிக் பெயிண்டிங், ஸ்பாட் பெயிண்டிங் ஆறுவயதில   கத்துக்கிட்டேன். எட்டு வயசுல தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபாவில் இரண்டு இந்தி பரிட்சையிலும் தேர்ச்சி பெற்றிருக்கேன். என்னுடைய ஒன்பதாவது வயதில நான் வரைந்த  போஸ்டர் கலர், வாட்டர் கலர் , ஆயில் பெயிண்டிங்க்ஸ் எல்லாம் காட்சிக்கு வெச்சிருக்கேன். இது தவிர கர்நாடக சங்கீதத்திலும் ஆர்வம் இருக்கு. அதை என்னுடைய அம்மா சுதா மகாதேவன்கிட்ட கத்துக்கிறேன். ஆல்இண்டியா ரேடியோவின் ஓய்வு பெற்ற  பாடகர் சியாமளா வெங்கட்ராமன்கிட்ட அம்மா கத்துக்கிட்டாங்க. செஸ் விளையாட்டிலும் போட்டியிட்டு பள்ளி அளவிலான போட்டிகளில்  வெற்றி பெற்றிருக்கிறேன். எங்கள்  குடும்பம்  கூட்டுக் குடும்பம்ங்கறதால் எல்லோரும்  என்னை ஊக்கு விக்கிறார்கள். இது தவிர பள்ளியிலும் ஆசிரியர்கள், என்னை ஊக்கப்படுத்தறாங்க.  

வியாழன், 12 ஏப்ரல், 2012

நல்ல எதிர்காலமும், லட்சியக் கனவுகளும்




 
 என் பிள்ளைக்கு வேண்டியதை தட்டாமல் வாங்கிக் கொடுக்கிறேன். ஆனாலும் அவன் மற்றவர்களைப்  போல் படிப்பதில்லை. மனநல மருத்துவரிடமும் சோதித்து விட்டேன்" எந்த குறையும் இல்லை என்றே  சொல்லுகிறார். ஆனாலும் வீட்டிற்கு வந்தால் சற்று நேரம் டிவி பார்க்கிறான். படி என்று  சொன்னபிறகு புத்தகத்தை எடுத்து விரித்து வைத்துக் கொள்கிறான். ஆனால், மார்க் என்னவோ  குறைவாக  இருக்கிறது. இவனை விட வசதி குறைவான மாணவர்கள் எல்லாரும் நன்றாகவே  படிக்கிறார்கள். இவனுக்கு மட்டும் படிப்பு மந்தமாகவே இருக்கிறது. இவனால் மற்ற சொந்தக்காரர்கள்  முன் என்னால் தலைக்காட்டவே முடியவில்லை.என்று புலம்பும் பெற்றோர்களின் மத்தியில்  பிள்ளைகள்  பெற்றோர்களின் சில அஜாக்ரதையின் காரணமாகவும், சில வற்புறுத்தல்களின்  காரணமாகவும் அவர்கள் தேர்வில் தோல்வியை தழுவுகிறார்கள். இதன் முடிவு வாழ்க்கையை  எதிர்கொள்ளும் தைரியமின்றி வாழ்க்கையை முடித்துக்கொள்ள தீர்மானிக்கிறார்கள்.விளைவு  தற்கொலையில் கொண்டு போய் தள்ளி விடுகிறது.
மாணவர்களுக்கு என்ன பிரச்சினை? வாழ்க்கையில் அவர்களை அச்சுறுத்துவது எது? ஏன்  வாழ்க்கையை எதிர்கொள்ள மனமின்றி ஓடி ஒளிந்து கொள்ள முயல்கிறார்கள். அடிப்படையில் எங்கே  தவறு நிகழ்ந்தது?இது ஆரம்பித்தது எப்போது? ஏன்?
இப்படி சில கேள்விகளுக்கு விடை காணமுற்பட்டால் இதற்குக்  காரணம் வளர்க்கும் முறையில்  திடீரென ஏற்ப்பட்ட தலைகீழ் மாற்றம் தான் என்பது தெளிவாகிறது. குழந்தைகள் எது கேட்டாலும்  மறுநிமிடம் வாங்கிக்கொடுக்கும் இயல்பு  இப்போதைய பெற்றோரிடம் இருக்கிறது.  இது  குழுந்தைகளுக்கு அடைய முடியாத எதுவும் இருக்கக்கூடாது என்று எண்ண வைத்திருக்கிறது.  என்ன  தவறு செய்தாலும் கண்டிக்கும் வழக்கமோ, தண்டிக்கும் பழக்கமோ கிடையாது. இதனால்,  குழந்தைகளுக்கு பிறர் கண்டித்தால் தாங்கிக் கொள்ளும் மனநிலை இல்லாமல் போய்விடுகிறது.
முன்பெல்லாம் என்பிள்ளை . உங்கள் பிள்ளை மாதிரி எப்படியாவது இவனை நல்வழிப் படுத்துங்கள்   என்று ஆசிரியர்களிடம் சொல்லிப் போவார்கள். இப்போதெல்லாம் ஆசிரியர் கொஞ்சம்  அதட்டிப்பேசினாலும் , ""என்பிள்ளை மன அழுத்தத்தில் இருக்கிறான். அவனை ஏன் சார் திட்டறீங்க ''  என்று மாறுநாளே வந்து கேட்டு நிற்கிற பெற்றோர்கள் தான் அதிகம்.
நீ கேட்டதெல்லாம் தட்டாமல் வாங்கி கொடுத்து விடுகிறேன்.  எது வேண்டுமானாலும் செய்து கொள்  மார்க் மட்டும் வாங்கு என்று  அந்தக்குழந்தையின் திறமைக்கு மீறி எதிர்ப்பார்க்கும்  பெற்றோர்களின்  மனநிலை தான் குழந்தைகளை இப்படி வாழ்க்கையிலிருந்து  வெளியை விட்டுத் துரத்துகிறது. பெற்றோர்களின்  அதிகமான நேரம் சுயவாழ்க்கையின் தேவைக்கே அதிகமாக பங்கு போட்டுவிடப்படுவதால்   குழந்தைகள் தங்களின் மனத்தாங்கல்களை வெளியே காட்டிக்கொள்ளாமல் அடைத்து வைத்துத் ஒரு  கட்டத்தில் சுதந்திரபறவைகளாய் வீட்டைவிட்டு ஓட முயற்சிக்கிறார்கள். அப்படி ஓடி மீண்டும் வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிற போது மீண்டும் பழைய சூழ்நிலையை எதிர்கொள்ள பயந்து  தற்கொலைக்கும்  முயல்கிறார்கள்.
இன்னும் சில பெற்றோர்கள் எப்போதும் ""அவனைப்போல் படி , இவனைப்போல நீச்சலடி.  அவனைப்போல் விளையாடு என்று மற்ற வர்களை உதாரணம் காட்டியே தங்கள் குழந்தைகளை  மட்டம் தட்டுவது போலவே நடந்து கொள்கிறார்கள். அத்துடன் மார்க் குறைஞ்சு  வாங்கிடாதேடா.அம்மா வெளில தலைகாட்ட முடியாதுடா. என்கிறார்கள்.  இது  அவனது மன அழுத்தத்தை  அதிகப் படுத்தவே செய்யும். 
 பெற்றோர்கள் தான் அதிகம் படிக்க வில்லை, பிள்ளைகளாவது  நன்றாக படிக்கட்டும்  என்று  ஆசைப்படும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நல்ல பள்ளிகளில்,   இன்ஜினியரிங்  கல்லுõரிகளுக்கு செய்யும் செலவுகளுக்கு ஈடாக செலவு செய்து  படிக்க வைத்து ,பரிட்சை முடிவுகளை  எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  நம் பிள்ளை என்ன மார்க் எடுப்பான் ? அடுத்து  என்ன படிக்க  வைக்கலாம் ?  எவ்வளவு  செலவாகும்  என்று  மனக்கணக்கு போட்டு, கனவுகண்டு  எதிர்பார்த்தும்  காத்திருக்கையில் தங்கள்  பிள்ளைகள் மார்க் எடுக்க வில்லை. பரிட்சையிலும் தேர்ச்சி  அடையவில்லை என்றால் , எந்த ஒரு  பெற்றோருக்கும் கோபம் வரவே செய்யும். அப்படி வருகிற  கோபத்தாலும், அதன் விளைவுகளை பெற்றோர்களும்,  பிள்ளைகளும்  உணராததால் பல  விளைவுகளைச்சந்திக்கவே செய்கிறார்கள். அப்படி பெற்றோர்களுக்கு கோபம் வரும் போது அவர்கள்   இவ்வளவு செலவு செஞ்சு படிக்கவெஞ்சு என்ன பிரயோசனம், எடுத்திருக்கிற மார்க்கை பாரு  வெளியே தலைகாட்ட முடியுதா? எதுக்காச்சும் துப்பிருக்கா? என்று தலையில் அடித்து  தள்ளிவிடுகிறார்கள். பிள்ளைகள் மீது வெறுப்பு மனோபாவத்தையே காட்டுகிறார்கள். இதனால்  அவர்கள் மனம் உடைந்து இனி பெற்றோர்களும் நமக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். நமக்கு இனி  ஆதரவாக யாரும் இல்லை என்கிற மனோபாவத்தில் பெற்றோர்கள் திட்டும்போது அதற்காக மனம்  வருந்தி , மனம் குழம்பி  பல மாணவ, மாணவிகள்  எடுக்கும் முடிவுகள் தற்கொலை .
கடந்த ஆண்டில் மட்டும்  இந்திய அளவில் 259பேரும் , தமிழ்நாட்டில் மட்டும் 59 பேர்  இறந்திருக்கிறார்கள்.

பள்ளித்தேர்வில்  தோல்வியடைந்ததும்  அப்பா  சொல்லும்  முதல் வார்த்தை  " நீ என்ன லட்சணத்தில  படிச்சேன்னு  எனக்கு தெரியாது. இதான் பெயிலாகிட்டியே பேசாம எனக்குத் தெரிஞ்ச மெக்கானிக்  செட்டில சொல்லி விடுறேன்.சேர்ந்து வேலை கத்துக்கிட்டு நாலுகாசு சம்பாதிச்சு பிழைக்கற  வழியப்பாரு, பின்னாடி நீயே சொந்தமா தொழில் செய்! என்பதுதான்.    என் பிள்ளை, என் பிள்ளை னு  தலையில துõக்கி வெச்சிக்கிட்டு ஆடினே.  இப்ப வாங்கிட்டு  வந்திருக்கிற மார்க் பாரு. நீ தான்  மெச்சிக்கணும்.  இன்னைக்கு வந்திருக்கிற  பேப்பர் பாரு புரோட்டாக் கடையில  வேலை பார்த்தவன்  முன்னுக்கு வந்து நல்லமார்க்  எடுத்திருக்கிறான். நீ என்னத்தை கிழிச்சிருக்கே. என்னால  காலேஜ்க்கு   லட்சம் லட்சமா பணம் கட்டி  உன்னை படிக்க வெக்க முடியாது.என்பார்கள்.

பரிட்சையில் பெயில், மார்க் குறைவு, நான் என்ன குறை வைத்தேன்  என்று ஆதங்கப்படும்  பெற்றோர்கள் என்றைக்கேனும் அதற்குரிய  தீர்வு என்ன?  காரணம் என்ன  என்று  யோசித்திருக்கிறார்களா? வீட்டில் கேபிளையும் , வெளியூர் செல்வதையும் குறைத்துக்கொண்டு   விட்டால் தீரும் பிரச்சினைகளா இவை. பிள்ளைகளின்  மதிப்பெண் ஆண்டு இறுதித்தேர்வில் மட்டும்  குறைந்து விடவில்லை. அதற்கு முந்தைய கால், அரையாண்டுத் தேர்வுகள், மற்றும் மாதிரித்  தேர்வுகளிலும்  குறைந்து தான் இருந்தது. என் பிள்ளை என்று தட்டிக் கொடுத்து, செல்லம் கொடுத்தே  அவர்களை கெடுத்து வைத்து இருக்கிறார்கள். அதேப்போல  ரேங்க் கார்டுகளில்  அடுத்த தேர்விலாவது  நல்லமார்க் எடு என்று கையெழுத்து போடுவதோடு  மறந்துவிடுகிறார்கள் பெற்றோர்கள். மகன்  தொடர்ந்து நன்றாக படிக்கிறானா? என்ன செய்யலாம் என்று யோசிப்பதில்லை. பரிட்சையில்  அதிகமார்க் எடுக்க, நன்றாக படிக்க பல டிப்ஸ்களை ஊடகங்களும், பள்ளிகளும்  தருகின்றன.  அப்படியிருந்தும் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? என்று அறிந்து  கொள்ள, முதலில்  சில மாணவர்களை சந்தித்தோம்.  படிப்பது கஷ்டமாக இருக்கிறதா ? என்றோம்.

 விஜய், இஸ்மாயில் , ஐதர் அலி, ராஜா, ஞான கந்தன், சுரேஷ், சுடர்வண்ணன். என்கிற  மாணவர்களை  சந்தித்து கேட்டோம்."படிப்புங்கறது கஷ்டமா இல்லை, சமயங்கள்ல பாட வகுப்புகள்  போரிங்கா  இருக்கு . இடைவெளி  இல்லாத  வகுப்புகள் சமயத்தில டீச்சர் சொல்லித் தர்றது புரியலை, சில  பாடங்களுக்கு உபகரணங்களை வெச்சு சொல்லித் தரணும் , வெறுமனே பார்த்து படிச்சு ஒப்பிக்கறது  சலிப்பாக இருக்கு. பிராக்டிக்கல்னு பேரு, சில உபகரணங்களை தொடக்கூட விடறதில்லை.  காட்டிட்டு பத்திரப்படுத்திடறாங்க. புரியலைன்னு திரும்பக் கேட்டா  எரிஞ்சு விழறாங்க. அவங்க  வீட்டுல, ஆபீஸ்ல , பள்ளிகூடத்தில  உள்ள கோபத்தை எங்க மேல காட்டறாங்க. இங்கே  பள்ளிக்கூடத்தில எல்லா பசங்களும் நல்லா படிக்கறவங்க இல்லை. வெவ்வேற விதமான புரிஞ்சுக்கிற  தன்மை இருக்கு. அதை டீச்சர்ஸ் புரிங்சுக்கிறது  கிடையாது. அறுபது மாணவர்கள் ஒரு கிளாஸ்ல  இருக்காங்கன்னா எல்லோருக்கும் பொதுவா கிளாஸ் எடுத்தா  எப்படி? கடைசி பெஞ்சிலயும் படிக்கிற  பசங்க இருக்காங்க.ஆனா, அவங்களை படிக்காதவங்க லிஸ்டல் சேர்த்திடறாங்க.  ஹோம் ஒர்க்ங்கற  பேர்ல இருபது முறை எழுதச் சொல்றாங்க.புரியாமல் படிக்கிற பாடத்தை இருபது முறை  எழுதறதில   என்ன புரிஞ்சிக்க  முடியும். டீச்சர் சொல்லித்தர்றது புரியலைங்கறப்போ,  இம் போசிசன் எழுதி  மொட்டை மனப்பாடம் பண்றதுல என்ன பிரயோஜனம்.அது எங்களுக்கு தண்டனையாக இருக்கு.   காலையில அஞ்சு மணிக்கு எழுந்திருச்சு, ராத்திரி  ஏழரை மணிவரையிலும் படிக்க வேண்டியிருக்கு.  அதுல காலையில எட்டு மணில இருந்து, மதியம் மூணு மணிவரைக்கும் ஸ்கூல். அப்பறம் அஞ்சு  மணிவரை ஸ்பெஷல் கிளாஸ்,அப்பறம் டியூசன். இதுல டியூசன்லயும் ஹோம் ஒர்க்,ஸ்கூல்லயும்  ஹோம்  ஒர்க்' அதே மாதிரி தனிப்பட்ட ஒரு பையனை பிடிக்கலைன்னா அவனை  மட்டுமே தினசரி  திட்டறது' . என்று தங்கள் மனக்குறைகளை கொட்டினார்கள்.

 பரிட்சை நெருங்கிய சமயத்தில்  தலைமை ஆசிரியர் ஒருவரை சந்திக்க காத்திருந்த   வேளையில்  சில  மாணவ, மாணவிகளை கண்டித்துக் கொண்டிருந்தார் . காரணம் ,"பரிட்சை நெருங்கிக்  கொண்டிருக்கிறது என்கிற பயமோ, அக்கறையோ இல்லாமல்  விளையாட்டுத் தனமாகவே  இருக்கிறார்கள்.  பரிட்சை பற்றிய , விழிப்புணர்வோ, மார்க் பற்றிய பயமோ இல்லாமல்  சினிமா,  கிரிக்கெட் நாயகர்களைப் பற்றி மெய்மறந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.கிராமங்களில் அதிகம்  படிக்காத பெற்றோர்கள்  பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை.  கண்டு கொள்வதில்லை,  அதே சமயம் ஆசிரியர்கள்  மாணவர்களை  பாசாக்கி விட்டால் போதும் என்று எங்கள் தலையில் கட்டி  விடுகிறார்கள். என்று குறைபட்டுக் கொண்டார்.

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும்  ஒரேவகையிலான திறமைகள் இருப்பதில்லை.  ஒவ்வொருவருக்கும் ஞாபக சக்திகளில் அதன் விகித அளவுகளில் மாற்றங்கள் இருக்கிறது. அது  படிப்பின்  தரத்தை நிர்ணயிக்கும் முக்கிய பங்காக இருக்கிறது. இது போன்ற குறைகளை சரி செய்ய   பள்ளிகளிலோ,  வீடுகளிலோ சிறப்பான முயற்சிகள் எதுவும் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.  பள்ளிக்கு அனுப்பிவிட்டால் ஆசிரியர் பார்த்துக்கொள்வார் என்று பெற்றோர்கள் தங்கள் பொறுப்பை  தட்டிக்கழித்து விடுகிறார்கள். அதிகமான ஞாபக சக்தியை வளர்ப்பதற்கு மாணவர்களுக்கு பயிற்சி  கொடுக்க  இம்போசிசன் என்கிற பெயரில் தரப்படும் பாடங்களை திரும்ப திரும்ப அதை ஒரு  கஷ்டமான வேலையாக நினைத்து மாணவர்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால்  படிப்பில் மந்தம்.இரண்டாவது காரணம் மாணவர்களுக்கு  படிப்பதும், எழுதுவதும் கசக்கும்  வேப்பங்காயாக இருக்கிறது. அதிகமான விளையாட்டிலும், வீடியோ கேமிலும் , செல் போன்  விளையாட்டுகளிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.  அறுபது பேருக்கு ஒரு ஆசிரிய ர் என்கிற போது  தனிப்பட்ட ஒருத்தருக்கு ஆசிரியர் சிறப்புச்சலுகையை தரமுடியாது.அதே ஆசிரியர் படிக்கும்  மாணவர்களை கொண்டு குழு வகுப்புகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்து  அதன் மூலம் படிக்கும்  மாணவர்கள் வழிகாட்டுதலில் மற்றமாணவர்கள் நன்றாக படிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம்.

எல்லாம் சரி,மரணத்தை தேடிக்கொள்ளும் மாணவர்களுக்கும் , அதிகமாக பெயிலாகும்மாணவர்களின்  சதவிகிதத்தைகுறைக்க வேண்டும்.படிப்பைக்கூட மீண்டும் தொடர்ந்து படித்து தேர்ச்சி  பெற்றுவிடலாம். படிப்புக்காக போன உயிரை மீட்க முடியாதில்லையா?என்பதற்கு  மனநல நிபுணர்  டாக்டர்  ருத்ரன் " தற்கொலை என்பது தோல்வியின் உந்துதல் . தோற்றவர்களிடம் பரிதாபம் அல்லது  கோபம் நமக்கு வரும் . இனியும் நாம் இருந்தால் நம்மை தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள். என்பதால் சட்டென அந்தமுடிவுக்கு ஆளாகிறார்கள். பல குழந்தைகள் ஏதாவது சிறு தவறு செய்திருக்கும். பள்ளியில் தண்டிப்பார்கள் அல்லது கண்டிப்பார்கள். மறுநாள், அதேபள்ளியில் அதே ஆசிரியர் மாணவர்களை எப்படி எதிர்கொள்வது, அவர்கள் கேலி கிண்டல் செய்வார்களே என்று அவமானத்திற்கு பயந்தும் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க நினைப்பார்கள். இதையும் பெற்றோர்களைப்பார்த்து கற்றுக்கொள்வது தான். இப்படிப்பட்ட கொடுமையை அனுபவிக்கறதுக்கு பேசாம மருந்து குடிச்சு செத்திடலாம். என்று வாழ்க்கையை பற்றிய பயத்தை வாழும் அவர்களே தன்னிடம் இருந்து பிள்ளைகளுக்கும் வளர காரணமாகிறார்கள். தற்கொலை  அந்தக்கணநேர முடிவு என்றாலும் மனச்சோர்வு அதற்கு முன்பே துõக்க மின்மை , நாட்டமின்மை  போல மெல்ல வெளித் தெரியும். அப்படிச் சோர்வுற்ற நபரை ஆறுதலாக தேற்றுவதே தற்கொலையைத்  தடுக்கும். இனி வாழ்ந்து  பயனில்லை என்று என்று நினைப்பவர்களிடம் இனி, வாழ்வதால் என்ன  என்ன சாத்தியங்கள் உண்டு. படிப்பதால் என்ன பயன்? தோல்வியுற்ற பாடங்களை அப்போதே  கவனமாக படிக்காததால் எவ்வளவு நேரம், காலம் விரயம்.  அடுத்த முறை மீண்டும் படிக்கிற போது  தன்னோடு படிக்கிற மற்ற மாணவர்கள் அடுத்த வகுப்புகளை தாண்டியிருப்பார்கள். என்று புரிய  வைக்க வேண்டும். அதே சமயம் கேட்டதை யெல்லாம் வாங்கித்தந்து குழந்தைகளை கெடுத்து விடவும் கூடாது.  வாழ்க்கையை பற்றிய நல்ல நம்பிக்கைகளை அவர்களுக்கு ஏ ற்படுத்தவேண்டும். படிக்காத பலர்  இங்கே சாதித்திருக்கிறார்கள்.ஆனால், அவர்களும் படிக்காததற்காக வருத்தப்பட்டிருக்கிறார்கள். என்று நம்பிக்கையாக சொல்லும் போது மாணவர்களுக்குள் தன்னம்பிக்கை  பிறக்கும்.என்றார்.

" சிநேகா' என்கிற தற்கொலை தடுப்பு நிறுவனத்தின் இயக்குனர் சாந்தியை சந்தித்தோம் .   மாணவப்பருவத்தில் பல பிரச்சினைகள் , பல குழப்பங்கள் எழும்,இதில் பருவத்திற்கான குழப்பம்,  பள்ளிப்பாடங்களில் புரியாமை, பள்ளிகளில், வகுப்புகளில், ஆசிரியர்கள் , சக நண்பர்கள் தரும் மன  நெருக்கடிகள் என்று ஒரு மாணவனது உணர்ச்சிகளை யாரும் புரிந்து கொள்வதில்லை, அவர்களிடம்  மனம் விட்டு பேசவும்முயற்சிப்பதில்லை, பிள்ளைகளின் பிரச்சினைகளை ஆறுதலாக கேட்டு  பல  பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆறுதலாகவும்  இருப்பதில்லை என்பதை .எங்களுக்கு வரும் அதிகமான (044 2464 0050)   போன் கால்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது என்கிறார்.  பிள்ளைகள் நன்றாக படிப்பதற்காக  பூஜைகள் செய்கிறோம், ஆரோக்கியத்திற்காக  உணவுகளை தேடித்தேடித் தருகிறோம் . விரும்பியதை  வாங்கித்தரும் பெற்றோர்கள் நிச்சயம் பிள்ளைகள் தேர்வில் தோல்வியுறுவதற்கும்,  கொஞ்சம்  பொறுப்பேற்று, அடுத்து   பிள்ளைகளை எப்படி வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கலாம்  என்று  யோசிக்க வேண்டும் என்கிறார்.

சிறு புள்ளிவிபரம்:

இந்தியாவில் 2007ம்ஆண்டு 259பேரும் சென்னையில் மட்டும் 59 பேர் இறந்திருந்தனர். இந்தியாவில்  இதுவரை மாணவ,மாணவிகள்  தற்கொலை செய்து கொள்வதில் மேற்கு வங்கம் முதலிடத்தில்  இருந்தது. 2006 ம் ஆண்டு சென்னையில் மட்டும் நாற்பது பேரும், தமிழநாட்டில் 1043 பேரும், இந்திய  அளவில் 2283 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்  .

பெற்றோருக்கு சில  ஆலோசனைகள் :

* பள்ளிப்பருவத்தை  கடந்து வந்த பல பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் அந்த பருவத்தில் இருக்கும்  போது , அவர்களிடம் வெளிப்படையாக பேசி வாழ்க்கையை பற்றியும், படிப்பின் அவசியம் பற்றியும்  , அருகிலிருந்து பேச நேரமில்லை. அவர்களுக்கு அதிகமான வேலை இருக்கிறது.என்று காரணம் சொல்லி தப்பிக்கிறார்கள். இது மாற வேண்டும்.
* மனஅழுத்தம் , மோசமான மனநிலை, நான் எதற்கும் பிரயோஜமில்லை, சுய வெறுப்பு போன்றவை  தன்னம்பிக்கை குறைவிற்கு  காரணமாக அமைகின்றன.இதற்கு தினசரி பெற்றோர்கள் பிள்ளைகளிடம்  பேசுவது நல்லது. அவர்களிடம் தயக்கமில்லாமல், கூச்சமில்லாமல் பேசி எது பற்றியும் விவாதிப்பதன்  மூலம்  தயக்கத்தை உடைத்து  பிள்ளைகளுக்கு நம்மிடம் நம்பிக்கை  வளர்க்கலாம்.
*மரணத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் , எல்லா பிரச்சினைகளிலிருந்து  விடுபடலாம்  என்று   நினைக்கிறார்கள் . மரணம் தவறான முடிவு.வீட்டிற்கு எந்நவகையில் மாணவர்கள், பிள்ளைகள்  குடும்பத்திற்கு  எவ்வளவு முக்கியமானவர்கள்  என்பதை உணரவைக்க வேண்டும் .
* தன்னோடு ஒன்றாக படித்து சுற்றித்திரிந்த சக மாணவன் தேர்ச்சி பெற்று மேற்படிப்பிற்குச்செல்லும்  போது அதைப் பார்த்து பெற்றோர்கள் சொல்லும் போது தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் இருப்பதால்  பிள்ளைகள் அதற்கு குற்றஉணர்ச்சி அடைந்து விரக்தி அடைகிறார்கள்.இதற்கு ஆறுதல் ஒன்று தான் வழி. மீண்டும் தேர்வெழுத படிக்கும்   காலத்தில் கணிணி போன்ற வேறு சில சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது என்பதை புரிய வைக்கலாம். படிப்பு சம்மந்தமான விசயங்களை அதில் எப்படி தேடலாம் என்று சொல்லித் தரலாம். 
* மாணவர்களுக்கு அன்றாடம் பிடித்தது பிடிக்காதது பற்றி பெற்றோர்கள் சுதந்திரமாக  பேசவேண்டும்.
* தேர்வு பயம் போன்ற குறிப்பிட்ட  பிரச்சினைகளை  பற்றி பேசி , பயம், அதிக மார்க் வாங்க என்ன  செய்யலாம், பல பெற்றோர்கள் நன்றாக படிக்கும் மாணவர்களுடன் தங்கள்  பிள்ளைகளை   கொண்டுவிட்டு படிப்பில் ஆர்வம் ஏற்படுத்துகின்றனர்.
* நேரம் கிடைக்கும் போது பெற்றோர்கள் டிவிகளில் ஆழ்ந்து விடாமல் பிள்ளைகளுடன் அமர்ந்து படிப்பதற்கு உதவி செய்யலாம்.


வியாழன், 5 ஏப்ரல், 2012

பரதத்தில் அசத்தும் வினிஷாகதிரவன்







சமீபத்தில் தான் வினிஷாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. ஆனால், பல வருடங்களாக தொடர்ந்து ஆடி புதிதாக ஒரு கதையின் வர்ணத்திற்கு ஆடியவரைப் போல தன்னுடைய முதல் அரங்கேற்றத்திலேயே வந்திருந்த அத்தனை பார்வையாளர்களையும், பிரபலங்களையும் தன்னுடைய அபிநயங்களால் மெய்மறக்க வைத்திருந்தார் வினிஷாகதிரவன். அவருடன் ஒரு சந்திப்பு.

*உங்களுடைய குடும்ப பிண்ணனி பற்றி சொல்லுங்க?
நான் வித்யாலயா ஸ்கூல்ல படிக்கிறேன். அப்பா கதிரவன் வினிஷா விஷன்னு விளம்பர கம்பெனி வெச்சிருக்கார். அம்மா ஜெயசுதா வீட்டிலிருந்து எங்களை கவனிச்சுக்கறாங்க. ஒரே ஒரு தம்பி ரோகித் ஐந்தாம் வகுப்பு சின்மயா ஸ்கூல்லயே படிக்கறான். வீட்ல எனக்கும் சரி தம்பிக்கும் சரி அப்பா எங்களை முழுமையாக எதிலும் ஈடுபட அனுமதிப்பார். தம்பி கீ போர்டு கத்துக்கறான்.

* உங்களுடைய பரதநாட்டிய அரங்கேற்றம் பற்றி சொல்லுங்க?
பரதத்தில என்னுடைய குரு ஊர்மிளா சத்யநாராயணன். நான் யுகேஜி படிச்சதிலேயிருந்து இதுவரைக்கும் ஒன்பது வருசமா பரதம் கத்துக்கிட்டு வர்றேன். இதுதவிர சங்கீதமும் கத்துக்கிறேன். என்னுடைய சங்கீதகுரு லட்சுமி. என்னுடைய பரதநாட்டிய அரங்கேற்றத்திற்காக மூன்று வாரங்கள் தொடர்ந்து ராமர்கதைக்காக பயிற்சி எடுத்துக்கிட்டேன். அரங்கேற்றத்தில டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா கம்போஸ் பண்ணின புஷ்பாஞ்சலிக்கு ஆடினேன். தொடர்ந்து ராமர் கதை"பாவயாமி ரகுராமம்'ங்கற வர்ணத்துக்கு ஆடினேன். இந்த ராமர் கதை 45 நிமிடங்கள் தொடர்ந்து ஆடணும் . ராமர் வில்லை வளைச்சு சீதையை கல்யாணம் பண்ணிக்கறது. கூனியோட வஞ்சகம்.அதனால ராமர் கைகேயி÷ப்சசைக்கேட்டு நாட்டைவிட்டு சீதை,லட்சுமணனோட வனவாசம் போறது . அங்கே சுக்ரீவனை சந்திக்கறது. தொடர்ந்து அனுமனை இலங்கைக்கு அனுப்பறது, ராவணனோட போர் செய்யறது, முடிவுல ராமர் ஜெயிச்சு அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகம் செய்யறவரைக்கும் அத்தனை கதாபாத்திரங்களையும் நான் ஒருத்தியே மேடையில அபிநயத்தோட செய்து ஆடிக் காட்டினேன். என்னை இந்தளவுக்கு வழிநடத்தி சொல்லித்தந்தது என்னுடைய குரு ஊர்மிளா சத்யநாராயணன்.

* பரதம் தவிர வேறெந்த துறைகள்ல உங்களுக்கு ஆர்வம்?
பாடறதில ஆர்வம் . சரணம் ஐய்யப்பா, தன்வந்தரி ஆராதனைங்கற ஆல்பத்திற்காக பாடியிருக்கேன். இததவிர பள்ளிகள்ல நடக்கிற விழாக்கள்ல பாடி நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். விளம்பரங்களுக்கு குரல் கொடுத்திருக் கேன், யோகா செய்வேன்,பள்ளியில நடக்கிற விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்துக்கிட்டு நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்.

*உங்க அரங்கேற்றத்துக்கு வந்த விஐபிகள் என்ன சொல்லி வாழ்த்தினாங்க?
டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, வைஜெயந்திமாலாபாலி, மனோ, மஹதி, உன்னிகிருஷ்ணன், ஓ.எஸ்.அருண், ஜானகி, உமா முரளி கிருஷ்ணன், மதன்பாப், பாண்டு, இசையமைப்பாளர் தேவா சார்ல்லாம் வந்து வாழ்த்தினாங்க. அவங்க வாழ்த்திப்பேசினதில என்னால மறக்க முடியாததுன்னு சொன்னா, கூனியோட அசைவுகள், நடை,உடை பாவனைகள் அவளுடைய வயதான தோற்றம் இந்தசின்ப் பொண்ணோட முகத்தில மேக்கப் இல்லாம உணர்த்தின பாவனைகள்லயே புரிஞ்சுக்கு முடிஞ்சது. " கன்னியாகுமரி அம்மனே வந்து நேர்ல ஆடினது மாதிரி இருந்ததுன்னு பாடகி ஜானகி பாராட்டிச் சொன்னாங்க. " பூர்வஜென்மத்தொடர்பு இருந்தாதாத்தான் இப்படி ஆடி எல்லோரையும் மெய்மறக்க வைக்கமுடியும்னு உமா முரளிகிருஷ்ணா(பாடகி ஜானகியின் மருமகள் ) சொன்னாங்க. இது எனக்கு மோதிரக்கையால் குட்டுபட்டு ஆசிர்வாதம் வாங்கின மாதிரி இருந்தது. என்னுடைய லட்சியம் டாக்டராகணும்.அப்பா அம்மாவினுடைய ஆசையும் அதுதான்.
என்கிறார் பெருமையாக.
செல்வகுமார்

லிங்க் பில்டிங்





இவ்வாறு தொடர்பு படுத்துவதன் மூலமாக இணைய தள டிராபிக்குகளை குறைக்க முடிவதோடு நமது இணைய தளத்தின் சர்ச் இன்ஜினின் தரமும் முன்னேற்றம் பெறுகிறது. இதன் காரணமாக இன்றைய தினம் லிங்க் பில்டிங் பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. குறிப்பாக கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளில் பல்வேறு வேலை வாய்ப்புகளைத் தரும் துறையாக இது மாறி வருகிறது.

ஏற்கனவே இணைய தள சேவை புரிந்து வந்த பல்வேறு இந்திய நிறுவனங்கள் தங்களது தொழிலை லிங்க் பில்டிங் துறையோடு விரிவுபடுத்தி வருகின்றன. கூகுள் போன்ற சர்ச் இன்ஜினை நடத்தி வரும் நிறுவனங்கள் இதற்காக செலவாகும் பணத்தை மிச்சப்படுத்த லிங்க் பில்டிங் மிகவும் உதவும் என்றே நம்புகின்றன. இணைய தள சேவைகள் பொதுவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை மையமாகக் கொண்டு இயங்குவதால் இந்த நாட்டில் இயங்கும் இணைய நிறுவனங்கள் லிங்க் பில்டிங் பணிகளை அவுட்சோர்சிங் செய்ய முடிவெடுத்துள்ளன.

அவுட்சோர்சிங் பணிகளின் தலைமையகமாக விளங்கும் இந்தியாவுக்கே லிங்க் பில்டிங் பணிகள் வெகுவாரியாக தரப்படவுள்ளன. குறைந்த செலவு, அதிக நேரம் பணி புரியும் தன்மை, ஆங்கில மொழியறிவு போன்ற காரணங்களால் இந்தியர்கள் இந்தப் பணிகளைத் தட்டிச் செல்கிறார்கள்.

லிங்க் பில்டிங் பணிகளை அறிவியல், கலை, நிர்வாகம், இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் போன்ற படிப்புகளைப் படித்துள்ள யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். சாப்ட்வேர் துறையுடன் ஒப்பிடுகையில் "லிங்க் பில்டிங்'கைப் படிப்பது மிகவும் எளிதானதாகவே இருக்கிறது. பட்டப்படிப்பு முடித்து நல்ல தகவல் தொடர்புத் திறனும் ஆங்கில அறிவும் கொண்ட யார் வேண்டுமானாலும் இந்தப் பணிகளைச் செய்ய முடியும். இந்தத் தகுதியுடைய இளைஞர்கள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதுடன் குறைந்த செலவில் நிறைவாக இந்தப் பணிகளைச் செய்வார்கள் என்று பன்னாட்டு நிறுவனங்கள் நம்புகின்றன.

லிங்க் பில்டிங் பணிகளை அதற்கான தனி நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தனி நபராகவோ செய்யலாம் என்றாலும் அன்னியச் செலாவணி பிரச்னைகள், பணம் பெறுவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக ஒரு நிறுவனத்தின் வாயிலாக செய்வதே அறிவுறுத்தப்படுகிறது.

மென்பொருள் ஏற்றுமதி, புதிய ஐ.டி. பார்க்குகளுக்கு அனுமதி, கல்வித் தர மேம்பாடு போன்ற அரசின் கொள்கைகளாலும் கூகுள் போன்ற நிறுவனத்தின் அதிகரித்து வரும் செல்வாக்காலும் லிங்க் பில்டிங் துறையானது இன்றைய இளம் இந்தியர்களுக்கு மற்றுமொரு அரிய வாய்ப்பாக மாறக் காத்துள்ளது. இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்றே குறைந்த போதும் அவுட்சோர்சிங்கின் மற்றொரு புதிய பரிமாணமாக மாறவுள்ள லிங்க் பில்டிங் துறையும் பிரமாதமான வளர்ச்சியை எட்டவிருக்கிறது என்றே கூறலாம்.

நூலக அறிவியல்







காலம் காலமாக இருந்து வரும் தகவல் சுரங்கங்களாக நூலகங்கள் திகழ்ந்து வருகின்றன. பொழுதுபோக்காக மட்டுமல்லாது அரிய தகவல்களை அள்ளித் தரும் அங்கமாக இவை விளங்குகின்றன.

அறிவையும் தகவலையும் அனைவருக்கும் எட்டும்படி செய்வது தான் ஒரு நூலகத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. கல்வித் துறை மாபெரும் வளர்ச்சி கண்டு வரும் இந்நாட்களில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இக் கல்வி நிறுவனங்களின் பலத்தையும் சிறப்பையும் தீர்மானிப்பதில் அங்குள்ள நூலகங்களின் பங்கு முக்கியமானது.

இதனால் சிறப்பான நூலகத்தை அமைக்க கல்வி நிறுவனங்கள் பெரும் முனைப்புடன் ஈடுபடுகின்றன. இதனால் ஒரு நூலகத்தை அமைப்பது, பாதுகாப்பது, நிர்வகிப்பது போன்ற பணிகளில் ஈடுபடக் கூடிய திறனாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.

மாணவர்களிடையே புகழ் பெற்று வரும் பல்வேறு துறைகளுக்கு மத்தியில் நூலக அறிவியலும் ஒரு பிரத்யேக துறையாக கடந்த 25 ஆண்டுகளில் எழுச்சி பெற்றுள்ளது. முன்பெல்லாம் நூலகம் என்றால் புத்தகங்களுக்காக என்ற பார்வை மாறி தற்போதைய நவீன நூலகங்கள் புத்தகங்கள், பல்வேறு இதழ்கள், மைக்ரோ பிலிம்கள், வீடியோ கேசட்கள், ஸ்லைடுகள், "சிடி' டி.வி.டி., என பல்வேறு தகவல் ஊடகங்களைக் கொண்டுள்ளன.

நூலக அறிவியல் துறையானது புத்தகங்களை முறைப்படுத்துவது, பராமரிப்பது, பாதுகாப்பது என்னும் 3 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நூலகத்தின் பாதுகாவலராக திகழும் நூலகரானவர் தகவல் பரிமாற்றத்தைப் பலரும் பெற உதவும் முக்கிய அங்கமாக விளங்குகிறார்.

துறை படிப்புகள்
பொதுவாக பிளஸ் 2வுக்கு இணையான படிப்புகளை முடித்தவர்களே இத் துறை படிப்புகளில் சேரலாம். டிப்ளமோ, சான்றிதழ், இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஆய்வுப் படிப்பு என பல படிப்புகள் இத் துறையில் தரப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பில் சேரலாம்.

ஒரு ஆண்டு படிப்பாகும் இது. இதை முடித்தபின் பட்டமேற்படிப்பில் சேரலாம். எம்.பில்., பி.எச்டி., படிப்புகளையும் இதன் பின் படிக்கலாம்.

பாடத் திட்டம் ஒரு பார்வை
நூலக அறிவியல் படிப்பும் அடிப்படையில் புத்தகங்களுடன் தொடர்புடையதுதான். இதை தேர்ந்தெடுப்பவர்கள் புத்தகங்கள் தொடர்புடைய அனைத்து அம்சங்களுடன் நவீன தகவல் பரிமாற்ற சாதனமான கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தையும் படிக்கிறார்கள்.

Library and Information Systems Management, Bibliography, Documentation, Library Management, Research Methodology, Computer Applications, Information Exchange, Archives Management, Indexing, Library Planning ஆகிய பாடங்கள் பொதுவாக இத் துறையின் பாடப் பகுதியில் இடம் பெறுகின்றன.

வேலை வாய்ப்புகள் எங்கு இதில் படிப்பை முடிப்பவர்கள் பொதுவாக அரசு மற்றும் பொது நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், பிற கல்வி நிறுவனங்கள், பத்திரிகைத் துறை, மீடியா பிரிவுகள், தனியார் நூலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், புகைப்படம் மற்றும் புகைப்படச் சுருள் நூலகங்கள், தகவல் மையங்கள், டாகுமெண்டேஷன் மையங்கள், அருங்காட்சியகங்கள், காலரிகள், வர்ச்சுவல் லைப்ரரிகள் ஆகியவற்றில் பணி புரியலாம்.

எதிர்காலம் எப்படி
வேகமாக இயந்திரமயமாகி வரும் தகவல் பரிமாற்ற அமைப்புகளின் காரணமாக லைப்ரரியன்கள் நிர்வாக மற்றும் பட்ஜெட்டிங் பொறுப்புகள், நிதி உதவியைப் பெறுவது, ஆய்வு வேண்டுதல்களை முன்மொழிவது, ஆலோசனை வழங்குவது போன்ற புதிது புதிதான பணிகள் இத் துறையில் உருவாகியுள்ளன. எனவே இந்த தகவல் புரட்சி யுகத்தில் நூலகர்கள் இன்றியமையாதவர்களாக எழுச்சி பெற்றுள்ளனர்.

டேட்டாபேஸ் டெவலப்மெண்ட், ரெபரன்ஸ் டூல் மேனேஜ்மென்ட், தகவல் அமைப்பு, என்டர்பிரனரியல் லைப்ரரியன் போன்ற பணிகளும் இவர்களுக்குக் காத்திருக்கின்றன. சாதாரண லைப்ரரியன் என்னும் நிலையில் துவங்கி பிரீலேன்ஸ் இண்டெக்ஸர் என்பது வரை இவர்களின் பணி இன்று வளர்ச்சி கண்டுள்ளது. இது தவிர இன்பர்மேஷன் புரோக்கரிங் என்னும் தகவல்களை வாங்கி விற்கும் புதிய பணியும் இப்போது கிடைக்கிறது.

அனுபவம் பெற்ற துறையினர் நிர்வாகப் பணியையும் பெறலாம். இணைய தளங்களின் பரிணாம வளர்ச்சிக்குப் பின் நூலகர்கள் இன்றியமையாத முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளனர்.

சம்பளம் எப்படி?
தனிநபரின் தகுதி, நூலகத்தின் தன்மை, அளவு, இடம் ஆகியவற்றைப் பொறுத்து சம்பளம் அமைகிறது. நிர்வாகப் பொறுப்பில் உள்ள நூலகர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள். கல்லூரி நூலகர்கள் விரிவுரையாளர்களுக்குச் சமமான சம்பளம் பெறுகிறார்கள். பள்ளிகளில் இது போன்ற நிலை இன்னமும் வரவில்லை. இன்றையச் சூழலில் நூலக அறிவியல் என்பது வளமான வாழ்க்கைக்கு நம்மை எடுத்துச் செல்லும் துறையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

கமர்ஷியல் பைன் ஆர்ட்ஸ்





அழகியலோடு கூடிய வர்த்தக ரீதியிலான நுண்கலை என்பது ஒரு துறையாகவே வெகுநாட்களுக்குக் கருதப்படவில்லை. ஆனால் அழகுணர்ச்சியுடன் கூடியதாக ஒன்றை உருவாக்குவது என்பது பெரும் நிறைவையும் பொருளாதார ரீதியிலான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது என்பது சமீப காலமாகத் தான் உணரப்படுகிறது.

சித்திரம் வரைவது, பெயிண்டிங், சிற்பக்கலை போன்றவை நுண் கலையாகக் கருதப்படுகின்றன. உலகை அழகுமயமாக்குவதன் மூலமாக இத் துறையினர் புகழ் பெறுகின்றனர். நுண்கலையின் பிரிவுகள் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருகின்றன.

அசல் பெயிண்டிங் மற்றும் சிற்பக்கலைக்கான வாய்ப்புகள் குறைவாகவே அறியப்படுவதால் பிற பிரிவுகளில் தங்களது திறன்களை வளர்த்திடுவதில் பெரும்பாடுபடுகின்றனர்.

வர்த்தக ரீதியாக பயன்படும் விளம்பர வடிவமைப்பு, பில்போர்ட்கள், புத்தக அட்டைகள், விண்டோ டிஸ்பிளே, சினிமா ஸ்லைட்கள், தொழில் ரீதியான அச்சுப் பிரதிகள், பேக்கேஜிங் போன்றவற்றை உள்ளடக்கி வர்த்தகக் கலை புகழ் பெற்று வரும் புதிய துறையாக உருவாகிவருகிறது. இத்துறையில் இணைய விரும்புபவர்கள் கலா ரசனையுடன் இருப்பதோடு விளம்பரம் மற்றும் வணிகத்திலும் ஈடுபடுத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

இத்துறை வெகுவேகமாக விரிவுபட்டு வருவதோடு எண்ணற்ற வாய்ப்புகளையும் தருகிறது. எதையும் மேலும் அழகுபடுத்துவதே இத்துறையினரின் முக்கியப் பணியாகும். புத்தகங்கள், "சிடி'.,க்கள் போன்றவற்றின் அட்டைகளில் வெளியாகும் படம், வடிவமைப்பு போன்றவற்றிற்கும் தற்போது காப்புரிமை வாங்கப்படுவதிலிருந்து கலையின் மரியாதை என்னவென்று அறியலாம்.

என்ன தேவை?
இத்துறையில் இணைய சில அடிப்படை குணநலன்கள் தேவைப்படுகின்றன. கலையின் மீது இயற்கையான ஈடுபாடு இருப்பதுடன் முறையான பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். இத் துறையின் நிபுணர்களுடன் பரிச்சயம் இருப்பது துறையின் எதிர்பார்ப்பை அறிந்து கொள்ள உதவும்.

இதன் மூலமாகவே நம்மிடம் எதிர்பாக்கப்படுவது என்ன என்பதையும் வர்த்தக உலகிற்கு எதை எப்படித் தரவேண்டும் என்பதையும் அறியலாம். உலகமே தற்போது அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியைக் கண்டு வருவதால் இல்லஸ்டிரேஷன், கிராபிக் டிசைன், ஆர்ட் டைரக்டிங் போன்ற திறமைகளும் தேவைப்படுகின்றன. தற்போது கலையும் தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இத்துறையில் சுய ஊக்க சக்தி, சுய சிந்தனை வடிவங்கள், கற்பனைத் திறன் போன்றவை தேவைப்படுகின்றன. தவிர பிரிண்டிங் புரடக்ஷன், கிராபிக் ஆர்ட்ஸ் திறமைகளும் கூடுதலாகத் தேவைப்படுகின்றன.

எதிர்காலம் எப்படி?
இத் துறையில் பரந்து விரிந்துபட்ட உட்பிரிவுகள் உள்ளன. ஆர்ட் ஸ்டுடியோ, விளம்பர நிறுவனங்கள், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், நாகரீக நிறுவனங்கள் என்று பல உள் துறைகளில் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. பிரீலான்ஸ் பணி வாய்ப்புகளும் உள்ளன. இத்துறையுடன் இணைந்து டைரக்ஷன், போட்டோகிராபி, ஆசிரியர், தொலைக்காட்சி, ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் இதழ்களில் ஆர்ட் டைரக்டர், ஆன்லைன் சேவை, சாப்ட்வேர் நிறுவனங்கள், புத்தக வெளியீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், விளம்பரம், பொருள் வடிவமைப்பு போன்றவற்றில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. இவை தவிர இவர்களுக்கு அருங்காட்சியகங்கள், சேவை நிறுவனங்கள், சர்ச்சுகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், கல்லூரிகள், சட்ட நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள், வடிவமைப்பு நிறுவனங்கள், திரைப்பட நிறுவனங்கள் போன்றவற்றிலும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

ஊதியம் எப்படி?
உட்பிரிவுகளைப் பொறுத்து இத் துறையில் ஊதியம் மாறுபடுகிறது. நமது தகுதி, எங்கு பணி புரிகிறோம், எந்த நிலையில் பணி புரிகிறோம் என்பதைப் பொறுத்தும் இத் துறை ஊதியங்கள் மாறுபடுகின்றன. ஆரம்பத்தில் மாதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும் என்ற போதும் அனுபவ அடிப்படையில் கிரியேடிவ் டைரக்டர், டாப் டிசைனர், ஆர்ட் டைரக்டர் என்று வரும்போது மாதம் லட்ச ரூபாய் வரை கூட சம்பாதிக்கலாம் நல்ல திறமையுடன் தானாக தொழில் துவங்கும்போது இந்த இலக்குகளையும் கடந்து சம்பாதிக்க ஏராளமாக வாய்ப்புகள் உள்ளன.

ஓட்டல் மேனேஜ்மென்ட்





நவீனமயமாகி வரும் இன்றைய உலகில் ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை அந்த நாட்டின் விருந்தோம்பல் சேவைத் துறையைக் கொண்டு கணக்கிடுவதைக் காண்கிறோம்.

பண்டைய கலாசாரங்களை தங்களது பிரத்யேகமான அடையாளமாகக் கொண்டுள்ள இந்தியா, சீனா, ஈரான் போன்ற நாடுகளைக் காண உலகச் சுற்றுலாப் பயணிகள் விரும்புவதைக் காண்கிறோம். சுற்றுலாத் துறையின் முக்கியமான அங்கமாக விளங்குவது ஓட்டல் மேனேஜ்மென்ட் தான். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் இத் துறை அபரிமிதமாக வளர்ந்து வருவதோடு அதில் பணியாற்ற எண்ணற்ற வாய்ப்புகளையும் தந்து வருகிறது.

நிர்வாகத் திறன், உணவு மற்றும் பானங்களை பரிமாறும் முறைகள், ஹவுஸ்கீப்பிங் திறன், பிரண்ட் ஆபிஸ் பணித் திறன், மார்க்கெட்டிங் மற்றும் அக்கவுண்டிங் திறன் போன்றவற்றை சரியான விகிதத்தில் கற்றுக் கொடுப்பது இத் துறை தான். எனவே தான் இப் படிப்புகளுக்கு இன்று பெரும் வரவேற்பும் மதிப்பும் கிடைக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு தொடர்ந்து ஓட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில் இத்துறையில் படிப்பும் பயிற்சியும் முடிப்பவர்களுக்கு கிராக்கி உள்ளது. இந்தியாவில் தேசிய ஓட்டல் மேனேஜ்மென்ட் கவுன்சிலின் கீழ் இயங்கிடும் 19 கல்வி நிறுவனங்களிலும் இது தவிர நாட்டில் இயங்கிடும் புகழ் பெற்ற பிற தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களிலும் சேர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

டில்லியிலுள்ள ஓபராய் சென்டர் பார் லேர்னிங் அண்ட் டெவலப்மெண்ட், தாஜ் குழுமத்தின் ஐ.ஐ.எச்.எம்., மணிபாலிலுள்ள வெல்கம் குரூப் கிராஜூவேட் ஓட்டல் மேனேஜ்மென்ட் ஸ்கூல் போன்றறை உலகப் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்கள். தனது 90 சீட்களில் சேருவதற்கு 23 ஆயிரம் விண்ணப்பங்களைப் பெறுகிறது ஓபராய் குழுமம்.

கல்விப் பிரிவுகள்
இத்துறையில் 4 முக்கியப் பிரிவுகளில் படிப்பும் பயிற்சியும் தரப்படுகிறது.

பிரண்ட் ஆபிஸ்
ஹவுஸ் கீப்பிங்
புட் அண்ட் பீவரேஜஸ்
கிச்சன்

ஆகிய துறைகளில் சிறப்புப் படிப்பும் பயிற்சியும் பொதுவாக தரப்படுகின்றன. இது தவிர மாணவர்களுக்கு சட்டம், பொருளாதாரம், அக்கவுண்ட்ஸ், நிர்வாகவியல், வெளிநாட்டு மொழி போன்ற பயிற்சிகளும் உண்டு. இது தவிர சேல்ஸ், மார்க்கெட்டிங், பிராக்டிகல் பயிற்சி ஆகியவற்றை துறைப் படிப்புகள் கொண்டுள்ளன.

பொதுவாக இத்துறையின் படிப்புகளில் சேர 12ம் வகுப்பு தகுதி தேவைப்படுகிறது. தேசிய கவுன்சிலின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளையும் தனியார் கல்வி நிறுவனங்கள் 4 ஆண்டு பட்டப் படிப்புகளையும் நடத்துகின்றன. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், ரீசனிங், பொது அறிவியல், பொது அறிவு ஆகியவற்றில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவையும் இடம் பெறுகின்றன.

இத்துறையில் ஒருவர் மிளிர்ந்து சிறப்பாக செயல்பட அவர் அடிப்படையில் எளிதில் பழகும் குணாதிசயம் உடையவராகவும் தன்னம்பிக்கை மற்றும் நட்பான குணம் பெற்றவராகவும் இருப்பது முக்கியம். படிக்கும் போது கூட இது போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் போதும். கடின உழைப்பு மற்றும் பொறுமை ஆகிய குணங்களும் ஒருவருக்கு அவசியம் தேவை.

வேலைத் துறைகள்
ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், ஏர்லைன் கேட்டரிங் அண்ட் கேபிள் சர்வீஸ், கிளப் மேனேஜ் மென்ட், குரூயிஸ் ஷிப் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிடல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங், ஓட்டல் மற்றும் டூரிசம் நிர்வாகம், வன விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் போன்ற எண்ணற்ற துறைகளில் இத் துறைப் படிப்புகளை முடிப்பவருக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இப்படிப்புகளை முடிப்பவர்கள் தொடக்கத்தில் பயிற்சியாளர்களாக (டிரெய்னி) பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். பயிற்சி முடிந்தவுடன் தொடக்கத்தில் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பளம் தரப்படுகிறது. மிகச் சிறப்பான திறனைப் பெற்றிருப்பவருக்கு நல்ல சம்பளம் கிடைப்பது எளிதாக இருக்கிறது.

எந்த நிறுவனத்தைத் தேர்வு செய்வது?
எத்தனையோ ஓட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் செயல்படுவதால் எதில் சேருவது என்ற குழப்பம் மாணவர்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது. ஆனால் நீங்கள் சேரவிரும்பும் கல்வி நிறுவனமானது அடிப் படை வசதிகளைக் கொண்டதாகவும் சிறப்பான ஆசிரியர்களைக் கொண்டதாகவும் இருப்பது அவசியம். எந்த நிறுவனத்தில் சிறப்பான தகவல் தொடர்புத் திறன்களும் அடிப்படை விருந்தோம்பல் திறன்களும் நல்ல ஆங்கிலத் திறனும் சேர்த்தே கற்றுத் தரப்படுகிறதோ அதுவே நல்ல கல்வி நிறுவனம் என்பதை மாணவர்கள் அறியலாம்.

இதை ஏற்கனவே அந்த நிறுவனத்தில் படித்த மாணவர்களிடம் இருந்து அறியலாம். இந்த அடிப்படையில் முதன்மையானது மதுரையில் இயங்கிடும் சுப்புலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ். பி.எஸ்சி., ஓட்டல் மேனேஜ் மென்ட் மற்றும் கேட்டரிங் சயின்ஸ், சான்றிதழ் படிப்புகளையும் பி.ஜி., டிப்ளமோ படிப்பையும் இது நடத்துகிறது.

குரூமிங் கன்சல்டன்ட்





போட்டிகள் நிறைந்த இன்றைய பணிச் சூழலில் ஒருவரின் தோற்றத்துடன் அவரின் நடத்தை, ஆளுமை மற்றும் நற்பாங்கும் கட்டாயத் தேவையாக மாறியுள்ளது.

ஏற்கனவே இவற்றை நாம் பெற்றிருந்தாலும் தேவைக்கேற்ப அவற்றை முழுமையாக மேம்படுத்திக் கொள்வதும் தேவைப்படுகிறது. இதை மேம்படுத்துக் கொடுப்பவர்கள் குரூமிங் அண்ட் எடிக்வசி கன்சல்டன்டுகள் என அழைக்கப்படுகின்றனர். ஒருவரின் இமேஜ் என்பது எந்த இடத்திலும் மிக மிக முக்கியமானது.

இமேஜைக் கொண்டே இன்று ஒருவர் பல காரியங்களை சாதித்துக் கொள்ள முடிகிறது. வார்ட்ரோப் கன்சல்டன்ட், குரூமிங் அண்ட் எடிக்வசி கன்சல்டன்ட், இமேஜ் கன்சல்டன்ட் போன்றவர்கள் எப்படி ஒரு சிறந்த பதிவை பிறரிடம் ஏற்படுத்த முடியும் என்பதை நன்கு அறிந்தவர்கள். குரல், இலக்கணம், வார்த்தைகள் போன்ற குரல் சார்ந்த தகவல் பரிமாற்றங்களிலும் உடல் சார்ந்த தகவல் பரிமாற்றங்களான கைகொடுத்தல், உட்காரும் நிலை, பார்க்கும் விதம் போன்றவற்றிலும் எடிக்வசி எனப்படும் சமூக நடத்தை முறைகளான உணவுப் பழக்க வழக்கம், தொலைபேசி உரையாடும் விதம் போன்றவற்றிலும் பயிற்சிகளை அளிக்கிறார்கள்.

பொதுவாக பள்ளிகளும், கல்லூரிகளும் கற்றுத்தராத பல்வேறு திறமைகளை இவர்கள் கற்றுத் தருகிறார்கள். உணவு பரிமாறப்படும் மேஜையில் நடந்து கொள்ளும் விதம், ஒருவரை ஒருவர் வாழ்த்தும் விதம், அறிமுகப்படுத்தும் முறை போன்ற பல முறைகளில் இவர்களின் பயிற்சியானது பரந்துபட்டதாக இருக்கிறது.

துறையில் இணைய என்ன தேவை

ஒவ்வொரு மனிதருக்கும் தேவைகளும், விருப்பு வெறுப்புகளும் மாறுபடும் தன்மையுடையதாக இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளும் திறமை இத்துறையின் அடிப்படைத் தேவையாக அமைகிறது. உளவியலை நன்றாக அறிந்திருப்பதும் ஒருவருக்கு உதவுவதன் மூலமாக வாழ்க்கையில் மாறுதலைக் கொண்டு வரும் தன்மையும் நேரான எண்ணங்களும் இத் துறையில் ஒருவர் சிறந்து விளங்கத் தேவைப்படும் அடிப்படைத் தேவைகள்.

சக மனிதருக்கான மனிதராக இருப்பதும் சமூகத் திறமைகளும் உடைகள் பற்றிய சர்வதேச விஷயஞானமும் அவசியம் நாம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பொறுமை, கவனிக்கும் திறன், பரிசீலிக்கும் திறன் மற்றும் சிறந்த தகவல் தொடர்புத் திறனும் கூட அவசியமாக இத் துறையில் தனது எதிர்காலத்தை விரும்பும் ஒருவருக்குத் தேவை.

துறையில் இணையும் முறை

இத்துறையில் இதுவரை டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பாக முறையான படிப்புகள் தரப்படவில்லை. தனிநபர் ஆரோக்கியம், முடி, தோல், அலங்காரம், உடையலங்காரம், சமூக ஒழுங்கு முறை, வேலையிடத்திற்கான ஒழுங்கு முறை, உணவு உண்ணும் முறைகள், தகவல் பரிமாற்றம் என்று பலவாறாக இத்துறையானது பரந்து பட்டு செயல்படுகிறது. எனவே நமது விருப்புக்கேற்ப இவற்றில் நமது பிரிவை துறை சார்ந்த தனி நபர்களிடமிருந்தே கற்றுக்கொள்ளலாம்.

எதிர்காலம் எப்படி

நல்ல படிப்பும், அனுபவமும் மட்டுமே வெற்றியைத் தருவதில்லை. நல்ல பழக்கவழக்கங்களுடனும் நடத்தையுடனும் இவற்றைப் பெற்றிருப்பவர்களே வெற்றியின் விளிம்பை எட்டுகின்றனர். எனவே உயர் மட்டத்திலுள்ளவர்கள் மட்டுமின்றி அனைத்து மட்டங்களிலும் வாழ்பவர்களுக்கான துறையாக இத்துறை வேகமாக மாறி வருகிறது.

அது மட்டுமன்றி மாறுபட்ட சூழ்நிலைகளில் நல்ல விதமாக வார்த்தெடுக்கப்பட்ட மனிதர் களே வெற்றியாளர்களாக மாறுகிறார்கள் என்பதை இத்துறையில் அனுபவபூர்வமாக உணரலாம். நிதிச் சிக்கலில் உலகமே சிக்கி வேலையிழப்புகள் காணப்படும் இன்றைய சூழலிலும் கூட குரூமிங் மற்றும் அழகுக் கலை என்ற 2 துறைகளும் இவற்றினால் சிறிதளவு பாதிப்புக் கூட இல்லாமலிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே நல்ல தகுதிகளுடன் இத்துறையில் பயிற்சியாள
ராகவோ ஆசிரியராகவோ வழிகாட்டியாகவோ ஆலோசகராகவோ பணியில் ஒருவர் தன்னை இணைத்துக் கொண்டால் அது அவருக்குப் பெரிதும் உதவும்.

எங்கு பணி புரியலாம்

இத்துறையினருக்கு பரந்து விரிந்த பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. விமானத் துறை, ஒட்டல்கள், விருந்தோம்பல் துறை, வாடிக்கையாளர் சேவை மையம், கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகள், பொழுதுபோக்குத் துறை, கலாசார அணி வகுப்புகள் போன்றவற்றோடு தொடர்புடைய நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. குரூமிங் தொழில் வல்லுனராகத் தொடங்கி குரூமிங் மேனேஜர் என்று வளர்ந்து தனியாக நடத்தும் குரூமிங் கன்சல்டன்சி என்று தொடர்ந்து முன்னேற்றம் பெறும் வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன.