புதன், 4 ஏப்ரல், 2012

அடுத்து என்ன படிக்கலாம்..



பத்தாம் வகுப்பு பாஸ் ! அடுத்து என்ன படிக்கலாம்..

பத்தாம் வகுப்பு முடித்ததும் அடுத்தது பிளஸ் 1ல் சேர்ந்து படித்தால் அடுத்த இரண்டு வருடத்தில் ஆங்கிலம் நன்றாக பேசுவதும், எழுதுவதும் சுலபமாக வரும் என்பார்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்வது ஒருபக்கம் இருந்தாலும் பிளஸ் 1ல் என்ன குரூப் எடுத்து படிக்கிறோமோ அதற்கேற்பவே அடுத்து டிகிரியோ, இன்ஜினியரிங் படிப்பையோ தொடரமுடியும். அதை சரியாக தீர்மானித்துவிட்டால் சரியான விருப்பமான படிப்பைத் தொடரமுடியும். தவறான முடிவெடுத்துவிட்டால் பின்னர் அதிலிருந்து மீள முடியாது.
நம்முடைய கனவு என்னவாக இருக்கிறது. எதிர்காலத்தில் நாம் என்னவாகப்போகிறோம் என்கிற
தெளிவு தான் நம்மை வழிநடத்தும். எல்லாக்கனவுகளும் நிறைவேற சாத்தியம் குறைவு எனினும் விருப்பங்களின் அடிப்படையில் எந்தப்பிரிவில் சேர்வது என்பதை முடிவு செய்யலாம்.
இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களை கொண்ட அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு கிடைக்கும் மேற்படிப்புக்கான வாய்ப்புகள்.
மருத்துவம் ,நர்சிங், பிசியோதெரபி,விவசாயம், மீன்வளம், கால்நடை அறிவியல், ஆயுர்வேதம், ஓமியோபதி, சித்தா உள்ளிட்டவை.
இயற்பியல் ,வேதியியல், பயோகெமிஸ்ட்ரி, கணிதம், ஸ்டாடிஸ்டிக்ஸ்
விலங்கியல், தாவரவியல், மைக்ரோ பயாலஜி
இன்ஜினியரிங், தொழில்நுட்பம்.

இதில் கணிதம் அல்லது உயிரியலுக்குப்பதிலாக கம்ப்யூட்டர் சயின்சை தேர்வு செய்யும் மாணவர்கள் பல்வேறு வாய்ப்புகளை இழக்கின்றனர். கம்ப்யூட்டரை பள்ளிக்கு வெளியேயும் படித்துக்கொள்ள முடியும். ஆனால், கணிதம், உயிரியலை இவ்வாறு படிப்பது அவ்வளவு சுலபமில்லை. மாணவர்கள் வெகுசிலர் அறிவியல் பாடங்கள் என்றாலே மிகவும் கஷ்டமான பாடம் என்று பயந்து விடுகிறார்கள். இந்தபயம் தேவையே இல்லாதது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அறிவியல் பிரிவில் சேர்ந்து வெற்றிகரமாக உயர்நிலைக்கலவ்டயை படித்து பாடங்களை நிறைவு செய்கிறார்கள். அதேப்போல உயர்நிலை படிப்புகளில் கணிதத்தை படிப்பதும் பின்னால் வேலைக்கான போட்டித்தேர்வுகளில் கணிதத்தை சுலபமாக அணுகுவதற்கு உதவியாக இருக்கும்.
நியுமெரிக்கல் எபிலிட்டி , குவான்டிடேட்டிவ், ஆப்டிடியூட், மேத்மெடிக்கல் காம்ப்ரிஹென்சன் போன்று பல பிரிவுகளில் கணிதம் தொடர்பான கேள்விகள் இடம் பெறுகின்றன. பைலட்டாக விரும்புபவர்கள் பிளஸ்2ல் கணிதமும், இயற்பியலும் படித்திருக்கவேண்டியது மிகமிக அவசியம். உயிரியல் ,மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளில் எனக்கு படிக்க விருப்பமில்லை என ஒரு மாணவர் முடிவு செய்து விட்டால் கம்ப்யூட்டர் சயின்சை தேர்வு செய்வதில் தவறு இல்லை.

பிளஸ்2ல் அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள் பி.ஏ.,வரலாற்றையும், பொருளாதாரத்தையும் கல்லுõரியில் படிக்க முடியும். ஆனால், பிளஸ்2ல் வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களை படிக்கும் போது கல்லுõரியில் அவர்கள் காமர்ஸ் பிரிவில் சேர்ந்து படித்தால் படித்து முடித்த பிறகு அவர்கள் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வேலை தேடும் போது அங்கு அவர்கள் படித்த படிப்புக்கு முன்னுரிமை கிடைக்கும் என்றே பலர் நினைக்கிறார்கள். இது தவறானது. காமர்ஸ் பிரிவு மாணவர்கள் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் தொடர்பாக படித்தாலும் பெரும்பாலும் வங்கிகளும் , இன்சூரன்ஸ் நிறுவனங்களும் அவர்களுக்காக எந்த முன்னுரிமைச் சலுகைகளையும் வழங்குவ தில்லை.

புரோபேஷனரி ஆபீசர் தேர்வில் ரீசனிங், குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட் , ஜெனரல் அவேர்னஸ், கம்ப்யூட்டர் லிட்ரசி, ஆங்கிலம் போன்ற பிரிவுகளில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. இன்சூரன்ஸ் ஆபீசர்களுக்கான தேர்வில் நடப்பு நிகழ்வுகள், பொதுஅறிவு, ரீசனிங் எபிலிட்டி, ஆங்கிலம் ,இன்சூரன்ஸ் õகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
எனினும் இன்சூரன்ஸ் பிரிவில் கேள்விகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கிளரிக்கல் தேர்வில் பொதுஅறிவு, பொது ஆங்கிலம் , கிளரிக்கல் ஆப்டிடியூட், நியூமெரிக்கல் எபிலிட்டி, ரீசனிங் எபிலிட்டி , மார்க்கெட்டிங் ஆப்டிடியூட், கம்ப்யூட்டர் நாலட்ஜ், போன்ற பிரிவில் கேள்விகள் இடம் பெறுகின்றன. வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பாடங்களுக்கு போட்டி தேர்வில் பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப் படுவதில்லை.
ஆனாலும், இப்போது சில தனியார் வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் காமர்ஸ் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. சி.ஏ., கம்பெனி செகரட்டரிஷிப் போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் காமர்ஸ் பிரிவைத் தேர்வு செய்யலாம். பெரும்பாலும் மாணவர்களும் , பெற்றோர்களும் படிப்பை முடித்தவுடன் வேலைகிடைக்கும் வகையிலான படிப்பைகளையே தேர்வு செய்கின்றனர். ஆனால், ஒவ்வொரு படிப்பும் , ஒவ்வொரு பிரிவும் ஏதோ ஒரு வகையில் சிறப்பானது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக