என் பெயர் ராம்கிஷோர்.
நான் யுகேஜி படிக்கிறேன்.
பிடித்த பொழுதுபோக்கு. பைக் ஓட்டறது. கார் ஓட்டறது. என் தம்பி லட்டு என்கிற அருண்கார்த்திக்கோட சண்டை போடறது.
அப்பறம். பாட்டுப்பாடுவேன்.
பிடிச்ச பாட்டு: ஓட ஓட தூரம் குறையலை..
பிள்ளை நிலா.. இரண்டும் வெள்ளை நிலா..
ஸ்கூல் ரைம்ஸ் எல்லாம் மனப்பாடமா தெரியும்.
வீட்ல சைக்கிள் ஓட்டுவேன். அதில யார் ஓட்டறதுன்னு தம்பி கார்த்திக்குக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும். சண்டையில யார் ஜெயிப்பாங்கன்னா சில சமயம் நான் பல சமயம் கார்த்தி.
செல்லம்மா அவ்வான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். வெங்கடேஷ் தாத்தா அதிகம் பேசமாட்டார். அப்பா வேலைக்கு போயிடுவார். வேலைக்கு போறதுக்கு முன்னே தினம் எங்கரெண்ட பேரையும் பைக்ல ஒரு ரவுண்டு கூட்டிட்டு போயிட்டு வீட்ல விட்டுட்டு போவார். ராஜா சித்தப்பா வீட்ல வேலைக்கு போகாம விட்ல இந்தா என் தம்பியும் நானும் ஒரு வழி பண்ணிடுவோம்.
ஒரு நாளைக்கு 3 தடைவை சினிமா பார்ப்பேன். வீட்டு கம்ப்யூட்டர் படம் பார்க்கறது என் பொழுது போக்கு. சிவாஜி, எந்திரன், எங்கேயும் எப்போதும், பில்லா, கோ படங்களை 300 முறையாவது பார்த்திருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக