புதன், 4 ஏப்ரல், 2012

கப்பல் கட்டுமானம்

கப்பல் கட்டுமானப் படிப்பு என்பது கடல் சார்ந்த வாகனங்களான கப்பல்கள், படகுகள் உள்ளிட்டவற்றை வடிவமைத்தல், கட்டுமானம், பாதுகாத்தல் மற்றும் சீரமைப்பு உள்ளிட்டவற்றை படிக்கும் இன்ஜினியரிங் துறையாகும். நம்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கப்பல் கட்டுமானத்துறையில், கடல் சார்ந்த வாகனங்களின் அடிப்படை மற்றும் செயல்முறை சார்ந்த ஆய்வுகள், வடிவமைப்பு மற்றும் மேம்படுத்துதலின் மதிப்பாய்வுகள் போன்றவை பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

பல்லாயிரம் கிலோ எடை கொண்ட சரக்குகளை ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு எடுத்துச் செல்லவும், அங்கிருந்து கொண்டு வரவும் கப்பல் வழி போக்குவரத்து தான் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அண்டைநாடுகளுடனான வணிகம் மேம்படுகின்றது. கப்பல் போக்குவரத்திற்கு நீர் தான் மூலதனமாக திகழ்கிறது.

நிலத்தில் செல்லும் வாகனங்களை விட நீரில் செல்லும் வாகனங்களை வடிவமைப்பது கடினம். நீரில் செல்வதற்கு ஏற்றவாறு கப்பல்களை வடிவமைத்தல், அவற்றின் உந்து விசையை ஆராய்தல், கட்டுமானப்பணிகளை மேற்கொள்தல் போன்றவற்றை இத்துறையில் ஆராய்ந்து படிக்கலாம். என ஆந்திரா இன்ஜினியரிங் பல்கலைக்கழகத்தின் கப்பல் கட்டுமானத்துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

கப்பல் கட்டுமானப் படிப்பு என்பது கடல் சார்ந்த வாகனங்களான கப்பல்கள், படகுகள் உள்ளிட்டவற்றை வடிவமைத்தல், கட்டுமானம், பாதுகாத்தல் மற்றும் சீரமைப்பு உள்ளிட்டவற்றை படிக்கும் இன்ஜினியரிங் துறையாகும். நம்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கப்பல் கட்டுமானத்துறையில், கடல் சார்ந்த வாகனங்களின் அடிப்படை மற்றும் செயல்முறை சார்ந்த ஆய்வுகள், வடிவமைப்பு மற்றும் மேம்படுத்துதலின் மதிப்பாய்வுகள் போன்றவை பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

பல்லாயிரம் கிலோ எடை கொண்ட சரக்குகளை ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு எடுத்துச் செல்லவும், அங்கிருந்து கொண்டு
வரவும் கப்பல் வழி போக்குவரத்து தான் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அண்டைநாடுகளுடனான வணிகம் மேம்படுகின்றது. கப்பல் போக்குவரத்திற்கு நீர் தான் மூலதனமாக திகழ்கிறது.

நிலத்தில் செல்லும் வாகனங்களை விட நீரில் செல்லும் வாகனங்களை வடிவமைப்பது கடினம். நீரில் செல்வதற்கு ஏற்றவாறு கப்பல்களை வடிவமைத்தல், அவற்றின் உந்து விசையை ஆராய்தல், கட்டுமானப்பணிகளை மேற்கொள்தல் போன்றவற்றை இத்துறையில் ஆராய்ந்து படிக்கலாம். என ஆந்திரா இன்ஜினியரிங் பல்கலைக்கழகத்தின் கப்பல் கட்டுமானத்துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

படிப்புகள்:
பி.இ.,/ பி.டெக்., பிரிவில் கப்பல் கட்டுமானம் படிப்புகள் உள்ளன. கப்பல் வடிவமைத்தல், கப்பல் கட்டமைப்பு, கப்பல் கோட்பாடு, கப்பல் பாதுகாப்பு, கப்பல் நீர் இயக்கவியல், நீர்நிலையியல் போன்ற பாடங்களை படிக்கலாம். நான்கு வருட காலம் கொண்ட இந்த படிப்பில் மாணவர்களுக்கு தகுந்த செய்முறைப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

பயிலும் நிறுவனங்கள்:
* ஐ.ஐ.டி.,சென்னை (http://www.iitm.ac.in/)

* ஐ.ஐ.டி., காரக்பூர் (http://www.iitkgp.ac.in/)

* கொச்சின் அறிவியல் மற்றும் டெக்னாலஜி பல்கலைக்கழகம், கொச்சின் (http://cusat.ac.in/)

* ஆந்திரா இன்ஜினியரிங் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் (http://www.andhrauniversity.info/ index.html)

* இன்ஸ்டிடியூட் ஆப் ஷிப் பில்டிங் டெக்னாலஜி, கோவா (http://www.isbt.ac.in/)

வேலைவாய்ப்பு:
சரக்கு கப்பல், பயணிகள் கப்பல் மற்றும் படகுகளை வடிவமைத்தல், எண்ணெய் மற்றும் வாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள், கன்டெய்னர் கொண்ட கப்பல்கள், போர் ரக விமானம் தாங்கிய கப்பல்கள், வானூர்திகள் கொண்ட கப்பல்கள், நீராவிப்படகுகள், மீன் பிடி படகுகள், பாய்மரபடகுகள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து, அவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் கப்பல் கட்டுமான இன்ஜினியரைச் சேரும்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் இத்துறையினருக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அமெரிக்கா, கொரியா, சிங்கப்பூர், லண்டன், நெதர்லாந்து ஆகிய வெளிநாடுகளில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. பட்டம் பெற்றவர்கள் கப்பல் கட்டுமான
பணியில் மட்டுமல்லாமல் அவை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளிலும் ஈடுபடலாம். இத்துறையில் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் மாதம் ரூ.15,000 வரை ஊதியம் பெறலாம். இன்ஜினியரிங் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.25,000 வரை ஊதியம் கிடைக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக