புதன், 4 ஏப்ரல், 2012

வாழ்க்கைக்கு உதவும் ஐடிஐ படிப்புகள்




கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்! கவலை உனக்கில்லை ஒத்துக் கொள். என்கிற பழமொழிக்கேற்ப பாரம்பரியமாய் அப்பா செய்கிற அதே தொழிலையே மகனும் செய்ய வேண்டும் என்று தலைமுறை தலைமுறையாய் ஒரே தொழிலையே செய்கிற நிலை மாறி, இன்று வாழ்க்கையின் அடிப்படையே முதலில் படிப்பு. அதற்குப் பிறகு தொழில் என்று வந்துவிட்ட நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் அதிக சதவிகிதம் பேர் தேர்வில் வெற்றி பெறுகின்ற போதும், பலரும் குறைவான மதிப்பெண்களையே எடுக்கிறார்கள். அதாவது 80சதவிகிதத்திற்கும் குறைவான மதிப்பெண்களை எடுக்கிறார்கள். மேற்கொண்டு படிக்க ஆர்வம் கொண்டவர்களாகவும், அதேசமயம் பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க ஆர்வமாக இருந்தும் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் சதவிகித்தத்தைப் பொறுத்து அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களோடு சதவிகித அடிப்படையில் தான் சேரவிரும்பும் பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கோர்சில் அவர்களால் சேர முடியாமலும், கல்லுõரியில் படிக்க விருப்பம் இல்லாமலும், ஏதாவது ஒரு வேலைக்கு போகலாமா என்று யோசிப்பவர்களுக்காகவே மத்திய அரசாங்கத்தால் (ஐணஞீதண்tணூடிச்டூ கூணூச்டிணடிணஞ் ஐணண்tடிtதtஞுண்ஐகூஐ ) அகில இந்திய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகின்றன.இதுதவிர தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் வாழ்க்கைக்கு தொழில் அடிப்படை என்ற நோக்கில் ஒவ்வொருவரும் சுயமாக வாழக்கையில் ஒரு தொழிலைக்கற்றுக் கொண்டு முன்னேறும் விதமாக அதற்கேற்ப தொழில்களை வகைப்படுத்தி அதற்கான பயிற்சிகளை இந்த நிறுவனங்கள் அளிக்கின்றன. அப்படி வாழ்க்கைக்கு உதவும் படிப்புகளாக வடிவமைத்து அதில் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
பிளஸ்2 வில் இருக்கிற பல்வேறு குரூப்புகளுடன் வொக்கேஷனல் டிரேடு எனப்படுகிற தொழிற்பயிற்சி படிப்புகளும் அகில இந்திய அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மிக விரிவாகவே கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இதற்கான சேர்க்கைகள் ஒரு ஆண்டு பயிற்சிக்கு பிப்ரவரி மாதத்திலும், இரண்டு ஆண்டு பயிற்சிகள் ஆகஸ்டு மாதத்திலும் தொடங்கப் படுகின்றன. இந்த நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கான கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் பட்டப்படிப்பு என கல்வித் தகுதிகளை நிர்ணயித்திருக்கின்றன.


இந்தப் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் தொழில் உற்பத்தியாளர்களுக் கான தகுதியை வளர்த்துக் கொள்வதோடு, தொழிற் சாலைகளுக்கு தேவையான திறன் படைத்த தொழிலாளர்களையும், உற்பத்தி பெருக்கத்திற்கான வழிமுறைகளையும், தொழிற்சாலை சார்ந்த பணிகளையும் கற்றுத் தருகின்றன. அப்படி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பல்வேறு தொழிற்பயிற்சிகளை வழங்குகின்றன. அவைகள் கற்றுத்தரும் தொழில் பாடப்பிரிவுகளாக கடைசலர், இயந்திரவேலையாள், எலக்ட்ரீசியன், பிட்டர், டர்னர், மோல்டர் என 280க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சிகள் பிரிவு வாரியாக இருக்கின்றன. இதில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பயின்று பயிற்சி பெற்றுக் கொள்ளும்படியான வாய்ப்புகளை அரசு பயிற்சி நிறுவனங்கள் வழங்குகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக