புதன், 4 ஏப்ரல், 2012

எந்த குரூப் படித்தால் என்ன கோர்சில் சேரலாம்?




பத்தாம்வகுப்பு முடித்து பதினோராம் செல்லும் மாணவர்கள் எந்தகுரூப்பில் படித்தால் எந்தமாதிரி கோர்சில் சேரலாம் என்பதைப்பார்க்கலாம்.
மாணவர்கள் பத்தாம்வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் உயர்நிலைப்பள்ளி பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும். மாணவர்கள் கலை மற்றும் வணிகம் போன்ற பாடங்களை தேர்ந்தெடுத்தால் அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்புகளோ அறிவியல் சம்பந்தப்பட்ட துறைகளில் உயர்ந்த நிலையையோ அடையமுடியாது. உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் பாடங்களை எடுத்துப்படித்திருந்தால் பிறகு பட்டப்படிப்புகளில் கலை, வணிகம் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
மேல்நிலைப்பள்ளியில் இரண்டு வருடங்கள் படிக்கும்போது பாடங்களுக்கு ஏற்ப உங்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே பிளஸ்2க்கு பிறகு என்னென்ன படிக்கமுடியும் அதற்கேற்ப நாம் எப்படி தயாராகலாம் என்பதைப்பார்க்கலாம். பெரும்பாலான படிப்புகளை மாணவர்கள் இளநிலை, முதுநிலை , எம்.பில்., பி.எச்.டி., என்று தொடர்ந்து படிக்கலாம்.
ஒவ்வொரு முக்கிய பாடக்குழக்களையும் பற்றி பார்க்கலாம்.
எம்.பி.சி., குரூப் கணிதம் , இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களை எம்.பி.சி., குரூப் என்கிறோம்.இவற்றை விருப்பப் பாடங்களாக தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் இன்ஜினியரிங் அல்லது தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சேரலாம். எல்லா மாநிலங்களிலும் பி.டெக்., படித்தவர்களின் தேவை அதிகரித்துள்ளதால் இத்தகைய படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் பொது நுழைவுத்தேர்வை நடத்துகின்றன.
தற்போது தமிழகத்தில் இந்த நுழைவுத்தேர்வு இல்லை. ஆகையால் பி.டெக்.,க்கிற்கு மாணவர்கள் .யர்நிலைப்பள்ளியில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள்.சில மாநிலங்களில் மாணவர்கள் உயர்நிலைப்பள்ளியில் பெறும் மொத்த மதிப்பெண்கள் மற்றும் பொதுநுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் போன்றவற்றை பொறுத்தே பி.டெக்.,கிற்கு மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது. தேசிய அளவில் மாணவர்கள் பெறும் ரேங்கிங்கைப் பொறுத்து சில சிறந்த கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

பி.இ., பி.டெக்., அல்லது இதுபோன்ற வேறுபடிப்புகளை நடத்தும் தேசிய அளவில் சிறந்த நிறுவனங்களை பற்றி பார்க்கலாம்.
ஐ.ஐ.டி., இன்ஜினியரிங்கில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை பொறுத்தவரை மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(ஐ.ஐ.டி.,) திகழ்கிறது.
சென்னை ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி.,டில்லி ஐ.ஐ.டி., கான்பூர் ஐ.ஐ.டி., காரக்பூர்ஐ.ஐ.டி., கவுகாத்தி ஐ.ஐ.டி., மற்றும் ரூர்கி ஐ.ஐ.டி., போன்றவற்றில் மாணவர்கள் படிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
இங்கெல்லாம் தேசிய அளவில் நடைபெறும் ஜாயின்ட் எக்சாமினேஷன்(ஜே.இ.இ.,) தேர்வில் பெறும் மதிப்பெண்களை பொறுத்து இந்த ஐ.ஐ.டி.,களில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
1.ஐ.ஐ.டி.,களில் கல்வித்தரம் உயர்வானது. ஆசிரியர்கள் ,ஆய்வுக்கூடம் , நுõலகம், மாணவர்கள் கல்வி கற்க ஏற்ற சூழல் போன்ற சிறப்பான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை இவை பெற்றுள்ளன.
2. இன்ஜினியரிங் கல்லுõரிகளி ஞூ அரிதாக உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் ,பயோலஜிகல் சயின்ஸ் அண்டு பயோ இன்ஜினியரிங் ,செராமிக் இன்ஜினியரிங் , மானுபாக்சரிங் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் , மெடட்டீரியல் அண்டு மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங், மினரல் இன்ஜினியரிங் , மைனிங் இன்ஜினியரிங் , நேவல் ஆர்க்கிடெக்சர் அண்டு ஓஷன் இன்ஜினியரிங் , பெட்ரோலியம் இன்ஜினியரிங், பல்ப் அண்டு பேப்பர் இன்ஜினியரிங் , டெக்ஸ்டைல் டெக்னாலஜி, பேச்சிலர் ஆப்டிசைன் போன்றவை ஐ.ஐ.டி.,களில் உள்ள படிப்புகளாகும்.
3. பலதுறைகளில் பி.டெக்.,எம்.டெக்., 5ஆண்டு டூயல் டிகிரி படிப்புகள் உள்ளன.
4.ஜியாலஜி, கணிதவியல், அப்ளைடு பிசிக்ஸ், வேதியியல் , பொருளாதாரம், எக்ஸ்புளோரேஷன், ஜியோபிசிக்ஸ், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்டரி, மேத்தமேட்டிக்ஸ் அண்டு கம்ப்யூட்டிங், இயற்பியல் போன்ற பாடத்திட்டங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகள் உள்ளன.
5. ஐ.ஐ.டி., தவிர இரு சிறந்த நிறுவனங்கள் ஜே.இ., மதிப்பெண்களை பொறுத்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அவை.
தி இந்தியன் ஸ்கூல் ஆப் மைன் டெக்னாலஜி(ஐ.எஸ்.எம்.டி.,)தன்பாத்
பானாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் உள்ள தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி.
6. மெர்ச்சன்ட் நேவிபடிப்பில் மாணவர்களுக்கு மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் பயிற்சி அளிக்கின்றன. பொதுவாக டதில் சேர ஜே.இ.இ., ரேங்கிங் பயன்படுத்தப்படுகிறது.
மரைன் இன்ஜினியரிங் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (எம்.இ.ஆர்.ஐ.,)கொல்கத்தா: 4ஆண்டுகள் மரைன் இன்ஜினியரிங் படிப்பு.
டிரெயினிங் சிப் சாணக்யா, நவி மும்பை: 3ஆண்டுளக் பி.எஸ்.சி.,(நாடிகல் சயின்ஸ்)
மரைன் இன்ஜினியரிங் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (எம்.இ.ஆர்.ஐ.,) மும்பை:3ஆண்டுகள் பி.எஸ்சி.,(மரிடைம் சயின்ஸ்
இந்தமூன்று பட்டப்படிப்புகளும் மெர்சன்ட் நேவியில் மாணவர்கள் உயர்ந்த சம்பளத்தில் வேலை பெற்றுத்தருவதில் முன்னிலை வகிக்கின்றன.
7. இஸ்ரோவின் கீழ்இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, திருவனந்தபுரம்
இங்கு பி.டெக்.,க்கில் சிறப்பு படிப்புகளாக ஏவியானிக்ஸ் அல்லது ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கை தேர்வு செய்யலாம்.

அப்ளைடு சயின்ஸ், அஸ்டிராலஜி, அஸ்ட்ரோபிசிக்ஸ், அட்மாஸ்பெரிக் சயின்ஸ்,மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் ரிமோட் சென்சிங் மற்றும் ஜி.ஐ.எஸ்., போன்ற பிரிவுகளில் 5ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுகலைப்படிப்புகளும் உள்ளன.

திருச்சி(சென்னை), கோழிக்கோடு(கேரளா), சூரத்கல்(கர்நாடகா) , வாராங்கல்(ஆந்திரா) .ட்பட 20 இடங்களில் என்.ஐ.டி.,கள் உள்ளன. இவை முதலில் ரூஜனல் இன்ஜினியரிங் காலேஜ் என அழைக்கப்பட்டன. இங்கு ஆல் இந்தியா இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (ஏ.ஐ.இ.இ.இ.,)தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 50 சதவிகித இடங்கள் இந்த நிறுவனங்கள் செயல்படும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
மீதமுள்ள 50சதவிகித காலிஇடங்கள் மற்ற மாநில மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப் படுகின்றன. என்.ஐ.டி.,யைத் தவிர சில நிறுவனங்கள் ஏ.ஐ.இ.இ.இ., தேர்வின் மூலம் மாணவர்களை சேர்க்கின்றன. அதுபோன்ற சில நிறுவனங்கள் கீழே உள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன.
1.ஸ்கூல் ஆப் பிளானிங் அண்டு ஆர்க்கிடெக்சர்,புதுடில்லி.
2. இன்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஐதாராபாத்.
3. பிர்லா இன்ஸ்டிடியூட் ப் டெக்னாலஜி,ராஞ்சி மற்றும் பாட்னா
4. சாஸ்த்ரா பல்கலைக்கழகம் .,தஞ்சாவூர்
5.நேவல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் , லோனாவாலா
6. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கார்பெட் டெக்னாலஜி, சவுரிரோடு, படோஹி , உத்திரபிரதேசம்.
7.திருவனந்தபுரம் ,மொஹாலி, போபால், கொல்கத்தா மற்றும் புனே ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,)நிறுவனங்களில் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வின் மூலமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு தேர்வுகள் மூலமோ ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
8.அணு ஆற்றல் கழகத்தின் கீழ் செயல்படும் புவனேஷ்வர் நேஷனல் இன்ஸ்டிடியூட்ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் (என்.ஐ.எஸ்.இ.ஆர்.,)நிறுவனத்தில் பேசிக் சயின்சில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி., படிப்புக்கு நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீன் டெஸ்ட் (எஜன்.இ.எஸ்.டி.,)மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

ஐந்தாண்டு பி.ஆர்க்., படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் பிளஸ்2 பொதுத்தேர்வில் குறைந்தது 50சதவிகித மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
கணிதம் விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும். தவிர, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இன் ஆர்க்கிடெக்சர் (என்.ஐ.ஏ.எஸ்.ஏ.,) யால் நடத்தப்படுகிற நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்க்கிடெக்சர் தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்றால் ஆர்க்கிடெக்சர் படிப்பில் சேர்ந் சாதிக்கலாம்.
பைலட் பயிற்சி கல்லுõரிகளில் சேருவதற்கு விரும்புகிற மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் இயற்பியல் மற்றும் கணிமத் போன்ற பாடங்களை விருப்பப்பாடங்களாக தேர்ந்தெடுத்துப் படித்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக