புதன், 4 ஏப்ரல், 2012

பேசும் பயிற்சி சிகிச்சை (ஸ்பீச் தெரபி)






பேசுவதும் கேட்பதும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளாகவும் திறன்களாகவும் உள்ளன. சாதாரண மனிதருக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. என்றாலும் உலகில் இந்தக் குறைபாடுடையவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.

தடுமாற்றம் மிக்க பேச்சு, உளறும் பேச்சு, திக்கிப் பேசுவது போன்ற பகுதிக் குறைபாடு உள்ளவர்களும் பேச்சுத் திறன் முற்றிலுமற்றவர்களும் உள்ளனர். கேட்கும் குறைபாடுடைய மனிதர்களின் பேசும் திறனும் பாதிக்கப்படுகிறது. மனிதர்களின் இந்தக் குறைபாடுகளைக் களைவதற்கு தொழில் வல்லமையுடன் கூடிய சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது. அதை ஒரு படிப்பாகத் தருவது "ஸ்பீச் தெரபி' எனப்படும் பேசும் பயிற்சி சிகிச்சையாகும்.

இது உடல் நலம் தொடர்பான அறிவியல் ஒரு உட்பிரிவாகவே உள்ளது. இதன் மூலமாக பேசுவதில் உள்ள குறைபாடுகள், குரல் குறைபாடுகள், மொழி ஆகியவற்றைச் சரி செய்து கொள்ளலாம். முறையான படிப்பை இத்துறையில் மேற்கொள்பவர்கள் ஸ்பீச் தெரபிஸ்ட் மற்றும் ஆடீயாலஜிஸ்டுகளாக மாறுகின்றனர். பாராமெடிக்கல் எனப்படும் மருத்துவம் தொடர்பான சார் படிப்புகளில் ஸ்பீச் தெரபி முக்கியப் பங்கு வகிக்கிறது.

பேசுவது மற்றும் ஒலி தொடர்பான குறைபாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுஅதிகரித்துவருவது இத் துறையினருக்கான கிராக்கியையும் தேவையையும் அதிகப்படுத்தியுள்ளது. அன்றாட வாழ்வில் ஸ்பீச் தெரபிஸ்டுகளாகப் பணியாற்றுபவர்கள் பேசுவதில் உள்ள சிரமம், வார்த்தை மற்றும் ஒலியை உருவாக்குவது, காயத்திலிருந்து சிகிச்சை பெறுபவர்களின் வார்த்தை தொடர்பான தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இளவயதில் தாமதமாகப் பேசத் தொடங்குவது, திக்குவாய், பிறவியிலுள்ள நோயினால் பேசுவதில் பாதிப்பு, செரிபரல் பால்ஸி எனப்படும் ஒரு பக்க முகப் பாரிசம், கிளப்ட் பேலட் எனப்படும் வாய்ப் பிளவு போன்ற வியாதிகளும் பேச்சுக் குறைபாட்டை உருவாக்குகின்றன. பேசும் குறைபாடுடையவர்களுக்கு கேட்பதிலும் குறைபாடு இருப்பதால் இவர்களை உளவியல் மற்றும் உடலியல் ரீதியாகக் குணப்படுத்தும் சிறப்புத் துறையாக ஸ்பீச் தெரபி துறை மாறியுள்ளது.

குறியீட்டு மொழி, வார்த்தை மேம்பாடு, லிப் ரீடிங் போன்ற பல்வேறு உத்திகளைக் கையாளுவதன் மூலமாக ஸ்பீச் தெரபிஸ்டுகள் சிறந்த சிகிச்சையை அளித்து
வருகின்றனர்.

படிப்புகள்
பேசுவது மற்றும் கேட்பதிலுள்ள குறைபாடுகளை சிகிச்சை செய்து சரிப்படுத்துவது தொடர்பான சிறப்புப் படிப்புகளை இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் தற்போது தந்து வருகின்றன. இந்தப் பிரிவில் அடிப்படைப் படிப்புகளாக பி.எஸ்சி., ஸ்பீச் ஹியரிங், பி.எஸ்சி., ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லாங்வேஜ் போன்ற பட்டப்படிப்புகளும் பட்ட மேற்படிப்பாக எம்.எஸ்சி., ஸ்பீச் பேதாலஜி அண்ட் ஆடியாலஜி படிப்புகளும் நடத்தப்படுகின்றன. சில டிப்ளமோ
படிப்புகளும் இத்துறையில் நடத்தப்படுகின்றன.

தகுதி
டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளில் சேர பிளஸ் 2 தகுதி தேவைப்படுகிறது. பட்டப்படிப்பில் சேர அறிவியல் பிரிவில் பிளஸ் 2வை முடித்திருக்க வேண்டும். குறைந்தது 50 முதல் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு படிக்கக் கூடிய எம்.எஸ்சி.,யைப் படிக்க இத்துறையில் பட்டப்படிப்பு முடித்திருப்பது அவசியம்.

வாய்ப்புகள்
மனித சமூகத்தில் பலருக்கு பேசுவது, கேட்பது தொடர்பான குறைபாடுகள் உள்ளன. ஸ்பீச் தெரபிஸ்டாக மாறுவதன் மூலமாக சமூகத்திற்குத் தேவைப்படும் மன நிறைவைத் தரும் பணியை செய்யும் வாய்ப்பை நாம் பெறுகிறோம். பேசாத மற்றும் காது கேட்காத மனிதர்களைப் பேச வைத்துப் பார்க்கும் நிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை அல்லவா?

இத்துறையினருக்கான தேவை உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் உடல் நல மையங்களில் இவர்களுக்குக் கடுமையான தேவை இருக்கிறது. சமூகப் பாதுகாப்பு மையங்களிலும் ஏராளமான ஸ்பீச் தெரபிஸ்டுகள் தேவைப்படுகின்றனர். சிலர் பல்கலைக்கழகங்களிலும் அரசு ஏஜன்சிக்களிலும் பணி புரிகின்றனர். பேசுவது தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கேட்கும் திறன் பற்றிய நிகழ்ச்சிகளிலும் நிர்வாகிகளாக ஸ்பீச் தெரபிஸ்டுகள் பணிபுரிகின்றனர்.

ஸ்பீச் பேதாலஜிஸ்டுகளாகப் பணியாற்றும் பலர் தனியாகப் பயிற்சி செய்கின்றனர். அலுவலகங்கள், மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் கன்சல்டன்டுகளாகவும் இவர்கள் பணி புரிகின்றனர். ஆடியாலஜிஸ்டுகள் உடல்நலம் தொடர்பான அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் கூட பணி புரிகின்றனர். துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெறுபவர்கள் மாதம் 20 ஆயிரம் முதல் சம்பளம் பெறுகின்றனர். தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் இவர்களுக்கு சிறப்பான சம்பளம் தரப்படுகிறது.

வெளிநாடுகளில் ஸ்பீச் தெரபிஸ்டாகப் பணியாற்றுபவர்கள் மிக மிக அதிகமான சம்பளம் பெறுகின்றனர். குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இவர்களுக்குக் கடுமையான மதிப்பும் தேவையும் உள்ளது.

கல்வி நிறுவனங்கள்

Postgraduate Institute of Medical Education and Research
Sector 12 Chandigarh 160012
Course: B.Sc Audiology and Speech & Language

All India Institute of Medical Sciences
Ansari Nagar,
New Delhi 110029
Course: BSc Speech Therapy and Hearing, MSc Speech Pathology and Audiology

Gujarat University
Navrangpura, Ahmedabad 880009, Gujarat
Course: Diploma in Audiology and Speech Therapy

University of Bombay
Ali Yavar Jung National Institutefor the Hearing Handicapped
Kishen Chansd Marg,
Bandra (West) Mumbai 400050
Course: B.Sc. Hearing & Language M.Sc Hearing Speech and Language

TN Medical College
BYL Nair Charitable Hospital
Mumbai 400008
Course: BSc Speech & Hearing M.Sc

Osmania University
Hyderabad, Andhra Pradesh
Course: BSc Hearing Lang. & speech

University of Chennai
Centenary Building Chepauk
Chennai 600005
Course: BSc Speech & Hearing M.Sc Audiology & Speech Therapy

University of Mysore
Karya Saudha, Crawford Hall,
PB No. 17, Mysore 570005, Karnataka
Course: BSc (Speech Pathology or audiology), MSc speech & Hearing

Kasturba Gandhi Medical College
Manipal, Karnataka
Course: BSc Speech & Hearing

Institute of Speech & Hearing
Hannur Road, Bangalore
Course: BSc Hearing Lang. & speech

Institute of Nursing
A.B Shetty Marg, Mangalore
Course: BSc Hearing Lang. & speech

All India Institute & Special Hearing
Mansazangolhri, Mysore 576006
Course: B.Sc Hearing Lang. & speech M.Sc

JM Institute of Speech & Hearing
Inderpuri, Keshrinagar
Patna 800023
Course: Dip. in Hearing Language & Speech

Indian Institute of Health Education
Near Control Jail Berur
Patna 800002
Course: B.Sc Hearing Language & Speech

Medical Trust Hospital
MG Road Cochin 582016
Course: Dip. in Hearing Language Speech

Sri Rama Chandra Medical Institute
Porur, Chennai 600010
Course: B.Sc Hearing Lang. & Speech
(DOU01122007)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக