வியாழன், 5 ஏப்ரல், 2012

யோகிக் சயின்ஸ்




நேச்சுரோபதி யோகிக் சயின்ஸ்

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சர்வதேச அளவில் மக்களிடம் ஏற்பட்டு வருகிறது. நோய் வராமல் வாழ்வதற்கான வழிமுறைகளை தேடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நோயால் பாதிக்கப்படுபவர்கள் நோய்க்கான சிகிச்சையை தேர்வு செய்யும்முன், அந்த சிகிச்சை முறையால் பக்கவிளைவுகள் ஏற்படுமா, நோய் நிரந்தரமாக குணமடையுமா என்பதை எல்லாம் கருத்தில் கொண்டே சிகிச்சை முறையை தேர்வு செய்கின்றனர். உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வால் நம் நாட்டின் பாரம்பரிய முறையான இயற்கை மருத்துவம் மற்றும் யோகா தெரபி சிகிச்சைக்கு பல நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

நம் நாட்டிலும் இந்த சிகிச்சை முறையை பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகள் நாடி வருகின்றனர். உடலில் ஏற்பட்டுள்ள நோயை நம் உடலினுள் உள்ள எதிர்ப்பு சக்தி, உணவு முறை மற்றும் யோகா உள்ளிட்ட இயற்கை முறைகளின் மூலம் தூண்டி குணப்படுத்துவதே நேச்சுரோபதி மற்றும் யோகிக் சயின்ஸ் எனப்படும் இயற்கை மற்றும் யோக விஞ்ஞான மருத்துவ முறையாகும்.

எம்.பி.பி.எஸ்.,க்கு நிகரான நேச்சுரோபதி சயின்ஸ் மருத்துவப்படிப்பான பி.என்.ஒய்.எஸ்.,(பேச்சுரல் ஆப் நேச்சுரோபதி அண்ட் யோகிக் சயின்ஸ்) கல்வி பயின்ற மருத்துவர்களுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு உள்ளது. நம் நாட்டிலும் பல பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் பி.என்.ஒய்.எஸ்., மருத்துவர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றனர்.

தமிழக அரசும் அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவர்களை பணியில் சேர்த்து வருகிறது. பிரகாசமான வாய்ப்புகளை தரும் பி.என்.ஒய்.எஸ்., படிப்பு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் நேச்சுரோபதி அண்ட் யோகிக்சயின்ஸ் கல்லூரியில் கற்றுத்தரப்படுகிறது. கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ஜெ.எஸ்.எஸ்.மகாவித்யா பீடத்தின் நிர்வாகத்தின்கீழ் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கல்லூரி 100 படுக்கைகளுடன் உள்ள மருத்துவமனையுடன் செயல்பட்டு வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் இந்த கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒரு ஆண்டு மருத்துவமனை நேரடிப்பயிற்சி உட்பட 5 1/2 ஆண்டுகாலம் கொண்ட பி.என்.ஒய்.எஸ்., மருத்துவப்படிப்பிற்கு 12ம் வகுப்பு அல்லது இணையான படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்து படித்து நல்லமதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்கள் அங்கேயே தங்கிப்படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி ஹாஸ்டல் வசதி உள்ளது. கல்லூரியில் மருத்துவப்படிப்பு முடித்த டாக்டர்கள் பலர் வெளிநாடுகளிலும், இந்தியாவின் பிரபல மருத்துவமனைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் விபரங்களுக்கு:
முதல்வர்,
ஜே.எஸ்.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் நேச்சுரோபதி அண்ட் யோகிக் சயின்ஸ்
80, லாங்க் வுட், மைசூர் ரோடு, ஊட்டி 643 001
போன்: 04232444128 (மருத்துவமனை) 2440448 (கல்லூரி),
மொபைல்: 97875 02954, 90473 69126.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக