புதன், 4 ஏப்ரல், 2012

காலணி வடிவமைப்பு




காலணி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் துறை

ஒருவருடைய ஆடையை வைத்து அவரின் தன்மையை அறிவது போலவே அவர் அணிந்திருக்கும் காலணியும் அவரது ஆளுமையை அறிய உதவுவதாக உளவியல் ரீதியான கருத்து ஒன்று தெரிவிக்கிறது.

காலணிகளை வடிவமைப்பது, அவற்றின் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்த துறையை புட்வேர் டெக்னாலஜி என்று கூறுகின்றனர். இத் துறை ஆரம்ப நாட்களில் முறைசாரா தொழிலாளர் தொடர்புடைய துறையாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த நூற்றாண்டு முதலே இத் துறையை தொழில்நுட்பம் சார்ந்த புதிய துறையாக மாற்றிவருகின்றனர். உலகில் அதிக எண்ணிக்கையில் காலணிகளைத் தயாரிப்பதில் இந்தியா சீனாவுக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது. இன்னமும் சில ஆண்டுகளில் இத்துறை 20 முதல் 30 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று கணிக்கப்படுகிறது. இவ்வளவு அபரிமிதமான வளர்ச்சி பெறும் துறை என்பதாலேயே பயிற்சி பெற்ற வல்லுனர்களுக்கு அதிகமான தேவையும் மதிப்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துறைப் பிரிவுகள்
புட்வேர் தொழிலில் வடிவமைப்பு, உற்பத்தி, மார்க்கெட்டிங் ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. வடிவமைப்புப் பிரிவில் புதிய புதிய காலணி வடிவங்களை உருவாக்குவதிலும் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளை அறிவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. பிற துறைகளில் இறுதி வடிவம் கொண்ட பொருளை வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப மாற்றிவிட முடியும் நிலையில் இத் துறையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. துல்லியமான அளவுகளில் பொருளை உற்பத்தி செய்வது இத் துறையின் தலையாயத் தேவையாக உள்ளது. புதிய சிந்தனையுடன் கற்பனையிலேயே வடிவங்களை உருவாக்கி அதற்கு அழகூட்டி பயனுள்ள பொருளாக மாற்ற வேண்டிய திறமை இத் துறையினருக்குத் தேவைப்படுகிறது.

தேவைப்படும் குணாதிசயங்கள்
கடின உழைப்பு, அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த இயந்திரங்கள் மீதான ஆர்வம், கற்பனை மற்றும் ஊக்க சக்தி போன்ற குணாதிசயங்களைப் பெற்றிருப்பவருக்கு இத் துறை மிகவும் பொருத்தமானதாக அமையும்.

படிப்புகள்
புட்வேர் டெக்னாலஜியில் குறுகிய காலப் படிப்புகளுக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது. புட்வேர் டெக்னாலஜி மற்றும் டிசைனிங் படிப்புகளைப் படிக்க பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். புட்வேர் துறையில் மேனேஜ்மென்ட் மற்றும் மேற்பார்வைப் பணிகளில் ஈடுபடவிரும்புபவர்கள் அறிவியல் புலத்தில் பட்டப்படிப்பை முடித்து பயிற்சி மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

புட்வேர் துறையை உள்ளடக்கிய தோல் துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகுந்த தேவை இருக்கிறது. இத் துறைக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் இந்தியாவில் அதிகம் கிடைப்பதாலும் வடிவமைக்கப்பட்ட பொருட்களை நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாலும் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருப்பதாலும் துறையானது வேகமாக வளர்ந்து வருகிறது.

இத்துறையில் பயிற்சி பெற்ற வல்லுனர்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு இந்திய அரசு 1963ம் ஆண்டில் உ.பி., மாநிலத்திலுள்ள ஆக்ராவில் அமைந்துள்ள சென்ட்ரல் புட்வேர் டிரைனிங் சென்டர் என்னும் மையத்தை நிறுவியது. இதே போல 1986ல் நொய்டாவில் புட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பையும் நிறுவியது. இதன் மூலமாக புட்வேர் வடிவமைப்பிற்கும் வளர்ச்சிக்குமான இடைவெளி நீக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு புட்வேர் தொடர்புடைய பல்வேறு படிப்புகளை சர்வதேச தரத்துடன் வழங்குகிறது. இந்த அமைபபுக்கு சர்வதேச அமைப்பான யு.என்.டி.பி., மூலமாகவும தேசிய தோல் பொருள் வளர்ச்சித் திட்டம் (என்.எல்.டி.பி.,) மூலமாகவும் சிறப்புப் பயிற்சிகள் தரப்படுகின்றன. எப்.டி.டி.ஐ., நடத்தும் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் என்ற 3 நிலைகள் உள்ளன. அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஆங்கில மொழி வாயிலான நுழைவுத் தேர்வில் கணிதம், ஆங்கிலம், பொது அறிவு ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. எப்.டி.டி.ஐ., முதுநிலை டிப்ளமோ, டிப்ளமோ போன்ற படிப்புகளைத் தருவது குறிப்பிடத்தக்கது.

வேலைகள்

இத்துறையில் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தவர்கள் மேனேஜ்மென்ட் டிரெய்னி, உதவி மேலாளர், மேலாளர் போன்ற பணிகளை புட்வேர் தொடர்புடைய உற்பத்தி, திட்டமிடல், கொள்முதல், விற்பனை, மார்க்கெட்டிங், மெர்க்கன்டைசிங், மெட்டீரியல் சோர்சிங் போன்ற ஒன்றில் பெறமுடியும். இவை பொதுவாக ஏற்றுமதி நிறுவனங்கள் அல்லது சர்வதேச நுகர்பொருள் அமைப்புகளிலேயே இருக்கின்றன. புதிய வடிவங்களை உருவாக்குவது, எதிர்காலத்தின் தேவைக்கேற்ப புதிய காலணிகளை வடிவமைப்பது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர். தாமாகவே புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் இவர்களுக்குக் கிடைக்கின்றன. இவை தவிர காலணி உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனங்களான ரீபோக், அடிடாஸ், நைக், பாடா, லிபர்டி, லகானி, டாடா, மிர்சா, பாவா, லீ கூப்பர் போன்ற நிறுவனங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

தனிநபரின் திறமை மற்றும் திறனைப் பொறுத்து புட்வேர் வடிவமைப்பாளர்கள் ஆரம்ப நிலையிலேயே மாதம் ரூ. 10 ஆயிரம் வரை வருமானம் பெறலாம். மேற்பார்வைப் பணியில் ஈடுபடுபவர்கள் ஆரம்பத்தில் மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்து 50 வரை பெறலாம்.மேலாளர்களாகப் பணியில் சேருபவர்கள் ஆரம்பத்தில் மாதம் ரூ. 6 ஆயிரத்து 500 முதல் ரூ.9 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம்.

மக்கள்தொகை பெருகிக்கொண்டே போவதால் இத் துறைக்கான எதிர்காலம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இது 40 கோடி ரூபாய் மதிப்பை எட்டும் என கணிக்கப்படுகிறது.

காலணி வடிவமைப்பு கல்வி நிறுவனங்கள்:

A patronized member of Textile Institute, U.K
C4142 Site C Industrial Area, Sikandra Agra
Uttar Pradesh
Email: info@cftiagra.org.in , cftiagra@indiatimes.com
Website: www.cftiagra.org.in

Central Footwear Training Centre,
Department of Industrial Training & Vocational Education, Haryana, (Haryana),

Anna University, Guindy,
Chennai 600 02, Tamil Nadu
Website: www.annauniv.edu

Bharat Institute of Science Technology,
173, Agharam Road, Selaiyur PO,
Chennai 600 073, Tamil Nadu.

College of Engineering, Guindy,
Chennai 600 025, TN.

College of Leather
LBBlock, Sector III, Salt Lake City,
Calcutta 700 091.

Dr. B.R. Ambedkhar Regional Engineering College,
P.O. REC, Jalandhar144 011.

Footwear Design and Development Institute,
D2, Sector 10, NOIDA201 301, Uttar Pradesh.

Harcourt Butler Technological Institute,
Kanpur.

Institute of Government Leather Working School,
Kherwadi, Bandra (E), Mumbai 400 051.

Muzaffarpur Institute of Technology,
Muzaffarpur 842 003.

National Institute of Fashion Technology (NIFT), Hauz Khas, New Delhi 110 016.

The National Small Industries Corporation Ltd.
B24, Guindy Industrial Estate;
Ekkaduthungal (P.O.),
Chennai 600 097, Tamil Nadu.

Priyadarshini Engineering College,
Anna Salai, Konamedu, Vaniyambadi 635 751.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக