புதன், 4 ஏப்ரல், 2012

விளையாட்டு வடிவமைப்புத் துறை




இன்றைக்கு மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் பத்துவருடங்களுக்கு முன்பிருந்ததைப்போல கிராமத்து விளையாட்டுக்களை தினசரி விளையாடுவது என்ற நிலை இல்லை. காரணம் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காலமாற்றத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கும் , சிறுவர்களுக்கும் பொழுதைகழிக்க பல்வேறு விளையாட்டுகள் நவீன வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகள் வீடியோ கேம்ஸ்கள். அவைகள் பல்வேறு வகை டிவி, கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று பள்ளிவாகனங்ளகில் பயணிக்கும் போதோ, வீட்டில் கணிணி பார்க்கும் போதோ என இடத்திற்கு தகுந்தாற்போல பொழுதைக்கழிப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அத்ததைய வடிவமைப்புக்கென்று படிப்புகளும் இருக்கின்றன. அது கேம்ஸ் டிசைனிங் எனப்படும் விளையாட்டு வடிவமைப்புத்துறை.

இந்தப்படிப்பானது விளையாட்டை எப்படியெல்லாம் வடிவமைப்பது, அதற்கான விதிகள் என யாவற்றையும் மிகவிரிவாகவும், நவீன தொழில் நுட்பவளர்ச்சிக்கு ஏற்பவும் சொல்லித் தருகின்றன. அதோடு பல புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன. இதில் விளையாட்டு வடிவமைப்பு துறையும் ஒன்று. ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் உள்ளடக்கம் மற்றும் அதற்கான விதிகளின்படி அதை வடிவமைப்பது விளையாட்டு வடிவனமைப்பாக கருதப்படுகிறது. சாப்ட்வேர் டெவலப்மென்ட் பிரிவில் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தும் பணி இது.

கேம்ஸ்டிசைனிங்கில் மொத்தமாக ஒரு விளையாட்டை வடிவமைப்பதுடன், அதனை விளக்கும் வகையில் அந்த கேமுடன் வழங்கப்படும் "டாகுமென்டேஷனை' தயார் செய்வதும் அடங்கும். பெரும்பாலும் போர்டுகேம்கள், வீடியோ கேம்கள், கார்டு கேம்கள் பாணியில் தான் கம்ப்யூட்டர் கேம்கள் அமைக்கப்படுகின்றன. சில விளையாட்டுக்களை வேறுவகையாகவும் அமைக்கிறார்கள்.
கம்ப்யூட்டர் கேம்கள் பொழுதுபோக்குக்கும், சில குறிப்பிட்ட பயிற்சிகளை வழங்குவதற்கும் மற்றும் கல்வியை கற்ப்பிப்பது போன்ற நோக்கங்களுக்காக வடிவமைக்கப்படுகின்றன.ஷுட்டிங், ரேசிங், எஸ்கேப்பிங்,ஸ்டன்ட்ஸ், டிரேடிங், பைண்டிங் போன்ற வகைகளில் கம்ப்யூட்டர் கேம்கள் உள்ளன.
சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித்தரும் துறையாக விளையாட்டு வடிவமைப்புத்துறை இருக்கிறது.

விளையாட்டு வடிவமைப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இது சிறந்த பணியாகவும் கருதப்படுகிறது. இந்தியாவில் விளையாட்டு வடிவமைப்பில் ஈடுபட்டிருக்கும் முக்கிய நிறுவனங்களாக சினாப்ஸ்,ஸ்மக்கால், இஷிர்இன்போடெக்,ஷார்க்ஸ் போன்ற நிறுவனங்கள் இருக்கின்றன. இவை வீடியோ விளையாட்டு மட்டுமின்றி இன்டர்நெட்டில் விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டு, மொபைல் போன்களுக்கான விளையாட்டுகளையும் வடிவமைக்கின்றன. செக்கர்ஸ், செஸ் போன்ற போர்டு விளையாட்டுகள், சிறிய புதிர்கள், வார்த்தை விளையாட்டுகள் மொபைல்களுக்காக வடிவமைக்கப்படுகின்றன.
சீட்டு விளையாட்டு , குறுக்கெழுத்து புதிர்கள்,ரேசிங், ஷுட்டிங், கேசினோ, ஆர்கேட் போன்றவை ஆன்லைன் விளையாட்டுகளாக வடிவமைக்கப்படுகின்றன. இதில் ஒருவர் மட்டும் விளையாடுவது , இருவர் விளையாடுவது , பலருடன் குழுவாக விளøயாடுவது போன்ற பல வகைகள் இருக்கின்றன.

விளையாட்டு வடிவமைப்பில் நுழைய அதுபற்றி படித்திருக்க வேண்டும். விளையாட்டு வடிமைப்புத்துறையில் உள்ள சில படிப்புகள்.
அட்வான்ஸ்டு டிப்ளமோ இன் கேம் டிசைனிங்
டிப்ளமோ இன் கேம் டிசைனிங் அண்டு கேமிங்
வீடியோ கேம் டிசைன் அண்டு டெவலப்மென்ட்
இத்தகைய படிப்புகளை வழங்கும் இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்கள்
அனிமேஷன் டிரைனிங் சென்டர்,ஐதாராபாத்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப்டிசைன், ஆமதாபாத்
டிஜிட்டல் அகாடமி பிலிம் ஸ்கூல், மும்பை
இமேஜ் காலேஜ்ஆப் ஆர்ட்ஸ், அனிமேஷன் டெக்னாலஜி,சென்னை
ஏசியன் அகாடமி ஆப் பிலிம் அண்டு டெலிவிஷன், உத்தரபிரதேசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக