புதன், 4 ஏப்ரல், 2012

*நாட்டுப்புறவியல் படிக்கலாம்






இந்தியாவில் நாட்டுப்புற கலைகளின் செல்வாக்கு குறைந்து வருகிறது. அதன் பெருமையை மங்காமல் பார்த்துக் கொள்ளும் வகையில், சென்னையில் தேசிய நாட்டுப்புறவியல் ஆதரவு மையம் செயல்பட்டு வருகிறது.



இம்மையத்தின் திட்ட அலுவலர் மலர்விழி, நாட்டுப்புறவியல் கல்வி மற்றும் மாணவர் எதிர்காலம் பற்றி தினமலர் கல்விமலருக்கு தெரிவித்து:

நாட்டுப்புற கலைகள் நாட்டுப்புறவியலையும் பதிவு செய்வதுதான் இம்மையத்தின் முக்கிய பணி. இங்கு இத்துறையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது; பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் பகுதிகளிலும், கேரளா, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களிலும் இம்மையம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு சமுதாயத்தைப் பற்றி, அச்சமுதாயத்தின் கலையைப் பற்றி இங்கு பதிவு செய்கிறோம். அரவாணிகள் பெண்களின் கலைகள், வழக்காடுகள் பற்றியும் இங்கு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

நாட்டுப்புறவியலில் ஒரு கலை பழையதாகவோ அல்லது புதியதாகவோ இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை சேர்ந்தது மட்டும்தான் நாட்டுப்புறவியல் என்று கருத முடியாது. பொதுமக்களிடம் நாட்டுப்புற கலைகள் விழிப்புணர்வு இல்லை. தெருக்கூத்து இன்னும் சில இடங்களில் உயிருடன் உள்ளது. உயிருள்ள கலைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.

கேரளாவில் சில இடங்களில் திருவிழாக்களில் நாட்டுப்புற கலை ஓர் அங்கமாக நடத்தப்படுகிறது. கேரளாவில் ஒரு தோல்ப்பாவை கூத்துக்காரர் எங்களிடம் தெரிவித்த போது, ஒரு சில இடங்களில் எங்களுக்கு கூட்டம் வருகிறது. சில நேரங்களில் வருவதில்லை என்கிறார். சிலர் தோல்ப் பாவைகளை செய்து விற்கின்றனர். பொம்மைகளை அலங்காரம் செய்து விற்கின்றனர்.

இத்துறைகளில் கல்வி பயில வருவோர் அழிவிலிருக்கும் கலையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகிறார்கள். ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் படித்துவிட்டு, கலைஞர்களுடன் செல்கின்றனர். அரசு சாரா அமைப்புகளிலும் வேலைக்கு சேர்கின்றனர். அவர்களுக்கு உள்ள ஈடுபாடு பாராட்டத்தக்கது.

பல மாணவர்கள், ஆய்வுக்காக வெளிநாடு செல்கின்றனர். வெளிநாடுகளில் பலருக்கு இந்திய கலாசாரத்தை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கின்றன. இந்தியா வந்து ஆய்வு செய்வோரும் இருக்கின்றனர். ஜெர்மனியை சேர்ந்த ஓர் ஆய்வாளர், கன்னியாகுமரி அருகே முப்பந்தல் பகுதியில் கூறப்படும் இசக்கியம்மனின் கதையை தமிழ் மற்றும் ஆங்கில புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு உள்ள வசதிகள் மற்றும் வாய்ப்புகளைவிட, அமெரிக்காவில் தரம் நன்றாக இருக்கிறது. உயர்கல்விக்கான படிப்புகள், நூலகங்கள் மாற்றியமைக்கப்படும் தேவை உள்ளது.

யுனெஸ்கோ பழங்கால கலை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் விவசாய முறைகள். மருத்துவ முறைகள் உள்ளிட்டவற்றுக்கும் அவர்கள் சர்வதேச முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாட்டுப்புற கலை பற்றிய அறிவு மாறிக் கொண்டிருக்கிறது. இன்டர்நெட்டில் செகண்ட் லைப் எனும் ஓர் இணையதளத்தில் உள்ள கதாபாத்திரங்கள் பற்றி கூட தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தில், தஞ்சாவூர், மதுரை, சென்னை பல்கலைக்கழகங்களில் இத்துறையில் மாணவர்கள் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., ஆய்வுகள் மேற்கொள்ளலாம். பாளையங் கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியிலும், கேரளாவில் கள்ளிக்கோட்டை பல்கலை.,யிலும் எம்.ஏ., நாட்டுப்புறவியல் பயிலலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்வாறு மலர்விழி தெரிவித்தார்.

மையம் தொடர்பான கூடுதல் விபரங்களைப் பெற: http://indianfolklore.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக