புதன், 4 ஏப்ரல், 2012

இசை




இசையில் நாட்டம் உள்ளவர்கள், ஓரளவிற்கு இசைகருவிகளைப்பற்றி தாளங்களை தெரிந்து வைத்திருப்பவர்களாகவும், தொழில் நுட்பங்களுக்கேற்ப இசையை வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்க அவசியமானது.


இசையமைப்பாளர்கள் அதற்கென தனி அமைப்புகளுடன் பிரம்மாண்டமான ஸ்டுடியோக்களை உருவாக்கி தங்கள் இசை சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தி வருகின்றனர். போட்டி அதிகம் நிலவும் இத்துறையில் மக்களின் மனங்களை கவர வேண்டும் என்பதற்காக தனி ஆல்பங்களை தயாரிப்பதோடு இசையில் பல புதுமைகளை புகுத்தி திறமையை நிரூபிக்கும் முயற்சிகளை பலர் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.


இசையமைப்பாளர் ரஹ்மானும் ஒலிப்பதிவுக்கு ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றதால், இந்திய இசைத்துறையில் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இசை ஆர்வம் கொண்டவர்களுக்கு அதற்கான
திறமையும், அதிர்ஷ்டமும் இருந்தால் குறுகிய காலத்திற்குள் மக்கள் மத்தியில் புகழ்பெறும் அளவிற்கு வாய்ப்புகள் இசைத்துறையில் குவிந்து கிடக்கின்றன. தனிநபர் திறமைகளை பட்டிதொட்டிகளில் பறைசாற்றும் இசைக்குழுக்களில் இடம்பெற்று தங்கள் திறமையை நிரூபித்த பலர் புகழ்வாய்ந்த சினிமா இசையமைப்பாளர்களின் குழுக்களில் பங்குபெறும் அதிர்ஷ்டத்தை பெற்று தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு
முனையை அடைந்துள்ளனர்.


இசைத்துறையை பொறுத்தவரை தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பும், முக்கியத்துவமும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆடியோ இன்ஜினியரிங்கில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தாங்கள் பங்குபெற்றுள்ள இசைக்குழுவினர் அரங்கேற்றும் நிகழ்ச்சிகளை துல்லியமாகவும், பிசிறு இல்லாமலும், ஒலியில் எந்த இடையூறும் ஏற்படாதவாறு மக்களின் காதுகளுக்கு கொண்டுபோய் சேர்ப்பது மிகப்பெரிய சவாலான வேலையாக கருதப்பட்டு வருகிறது.


பெரும்பாலான பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி பாடல்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் டிகிரி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.



இசையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகள், தங்களுக்கான வாய்ப்பினை ஏதாவது ஒரு இசைக்குழுவின் மூலமாகவோ அல்லது குழந்தைகளுக்கு இசையினை கற்று தரும் ஆசிரியர்களாகவோ பணியாற்றும் வாய்ப்பு இத்துறையில் அதிக அளவில் உள்ளன. இது தவிர ஆடியோ மற்றும் சவுண்ட் ரிக்கார்டிங் தொழில்
நுட்பங்களுக்கான பட்டப்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.


இசையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு மேடை வாய்ப்புகள், டிவி ரேடியா உள்ளிட்ட மீடியா வாய்ப்புகளும் உள்ளன. இந்தியாவில் 40 க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் இசைப்படிப்புகள் நடத்தப்பட்டு
வருகின்றன.


ரபிந்திரா பாரதி யூனிவர்சிட்டி, எமரால்டு பவர் கேம்பஸ், 56/ஏ, பிடி ரோடு, கோல்கட்டா700050
(பி.ஏ.,எம்.ஏ., மியூசிக்)

இன்ஸ்ட்ரூமென்டல் மியூசிக், ரபிந்திரா சங்கீத், வோகல் மியூசிக்.
(ஒரு ஆண்டு ஜூனியர் டிப்ளமோ இன் வோகல் மியூசிக் அண்ட்

இன்ஸ்ட்ரூமென்டல் மியூசிக். இரண்டு ஆண்டு சீனியர் டிப்ளமோ இன் வோகல் மியூசிக் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டல் மியூசிக்.

விஸ்வபாரதி, பி.ஓ.,சாந்திநிகேதன்: 731235, பிர்பும் மாவட்டம், சங்கீத் பவனா (இன்ட்டியூட் ஆப் மியூசிக் அண்ட் டான்ஸ்)
ரபிந்திரா சங்கீத் அண்ட் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் மியூசிக் (வோகல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டல் மியூசிக்)

ஸ்ரீராம் பாரதிய கலா கேந்திரா, காலேஜ் ஆப் மியூசிக் அண்ட் டான்ஸ், 1, கோபர்நிகாஸ் மார்க், நியூ டில்லி110001.
(கிளாசிக்கல், லைட் கிளாசிக்கல், வோகல் அண்ட் தபேலா.

அகில் பாரதிய காந்தர்வா மகாவித்யாலயா மன்டல், மீரஜ், காந்தர்வா நிகேதன், பிரக்மான்புரி, மீரஜ் மாவட்டம், சங்கிலி416410.

ருக்மணி தேவி காலேஜ் ஆப் பைன் ஆர்ட்ஸ், திருவான்மியூர், சென்னை600041.
(டிப்ளமோ கோர்ஸ் இன் கர்நாட்டிக் மியூசிக்)

இந்திர கலா சங்கீத் விஷ்வா வித்யாலயா, கைராகரா:491881
(இரண்டு ஆண்டு மியூசிக் அண்ட் வோகல்)

இசையில் ஆர்வம் உள்ளவர்கள் சிறுவயதிலிருந்தே இசைகருவிகளை இயக்கி பாடல்களை கற்றுதேர்வது சிறப்பு. இசைத்துறையை பொறுத்தவரை திறமையுள்ளவர்களால் மட்டுமே நிலைத்திருக்க முடியும் என்பதால் இதில் நுழைய விரும்புபவர்கள் தங்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். கடின உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்கள் இத்துறையில் புகழ்பெற்று இசையால் மக்களின் மனங்களை ஆட்சி செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக