புதன், 4 ஏப்ரல், 2012

நடனக்கலை






பண்டைக்கால வரலாற்று சுவடிகளை புரட்டிபார்த்தால் மூதாதையர்கள் நடனத்திற்கு கொடுத்து வந்த முக்கியத்துவமும், இதற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மங்கையரையும், அவர்களுக்காக நாடுகளை துறந்த மன்னர்களையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஆதாரங்கள் நம்மை பிரமிக்கவைப்பதோடு, உயர்ந்த, உன்னதமான கலைகளுக்கு நம் முன்னோர்கள் கொடுத்த வந்த மரியாதை நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடும்.

அற்புதமான நாட்டியத்திற்கு நம்மை படைத்த தெய்வங்களும் விதிவிலக்கல்ல என்று கூறும் அளவிற்கு அவர்களையும் நடனக்கலை ஆட்டிபடைத்ததை புராணங்கள், இதிகாசங்கள் மூலமாக நம் முன்னோர்கள் அழிக்கமுடியாத காவியங்களாக நமக்கு உருவாக்கி தந்துள்ளனர். மனிதனின் பிறப்பிலிருந்து இறப்புவரை அவனை ஆட்டுவிக்கும் நடனஅசைவுகளுக்கு உயிர்கொடுத்து வாழ்வித்துக் கொண்டிருக்கும் பணியினை பண்டைக்காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு தரப்பினர் குழுக்களாகவும், தனி முயற்சியாகவும் செய்து வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரிய நடனம் உருவாக்கப் பட்டு தனிச்சிறப்போடு உலகம் முழுவதும் மேடையேற்றப்பட்டு பார்வையாளர்களை அதிசயிக்க வைப்பதோடு நம் கலையின் பாரம்பரியத்தை அனைத்து தரப்பினரும் உணர்ந்து கொள்ளச் செய்யும் முயற்சிகள் இதன்மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகநாடுகளில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பரதம், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரிசாவின் ஒடிசி, எந்த நாட்டினரும் இதுபோன்று வேடமணிந்து போட்டியிட முடியாத கேரளாவின் கதகளி, அரங்கத்தில் உள்ள அனைவரையும் எழுந்து நின்று ஆடவைக்கும் ஆந்திராவின் குச்சிபுடி, ஆடல்கலைகளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கதக் என்று நாட்டியத்தில் தனி முத்திரை பதிக்கும் எண்ணற்ற சிறப்பம்சங்களுடன் இந்தகலை இந்தியாவின் மூலை முடுக்குகளில் வாழும் மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரிய நடனம் அமைந்திருப்பதை போன்று அந்தந்த மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களின் இயல்பிற்கேற்ப நாடோடி பாடல்களை மையமாக கொண்டு நடனங்களை உருவாக்கி அவற்றை அரங்கேற்றம் செய்து அசத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக டிவி சேனல்களின் ஆதிக்கத்தினால் நடனம் ஆடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு அதை கற்றுக்கொடுப்பதற்கான பள்ளிகளும் ஏராளமாக உருவெடுத்துள்ளன. நடனக்கலைகளில் ஈடுபடுபவர்களுக்கு அழகான தோற்றப்பொலிவு, பயிற்சி, இசைக் கேற்ப அசைவுகளை நளினமாக வெளிப்படுத்தும் விதம், அபிநயம், பாடல் வரிகளுக்கேற்ப உணர்ச்சிகளை முகத்தில் வெளிக்கொணரும் சாதுர்யம் என்று பல்வேறு தனித்திறமைகள் தேவைப்படும். பெரும்பாலான பெண்கள் தங்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்வதற்காக சிறுவயதிலிருந்து நடனத்தை கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தொழில் ரீதியாக

நடனத்தை தேர்வு செய்பவர்கள் சினிமா, மற்றும் கலை குழுக்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி அதற்கான சன்மானத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நடனத்திற்கென்று பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய குருகுல பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். பெரும்பாலான பள்ளிகளில் இதற்கென்று முழுநேரம் பணியாற்றும் நடன ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர நடனத்திற்கென்று தனி கல்லூரிகளும், பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் விபரம் வருமாறு:

கதக் கேந்திரா, பகவல்பூர் ஹவுஸ், பகவான்தாஸ் ரோடு, நியூ டில்லி110001.
பகுதி நேர 4 ஆண்டு பவுண்டேஷன் கோர்ஸ். 9 லிருந்து 14 வயது வரை உள்ளவர்களுக்கு.
பகுதி நேர மூன்று ஆண்டு டிப்ளமோ கோர்ஸ் 13 லிருந்து 22 வயது வரை உள்ளவர்களுக்கு.
மூன்று ஆண்டு டிப்ளமோ (ஆனர்ஸ்) கோர்ஸ், 16 லிருந்து 24 வயது வரை.
இரண்டு ஆண்டு போஸ்ட் டிப்ளமோ கோர்ஸ், 19 லிருந்து 26 வயது வரை.
ஜவஹர்லால் நேரு, மணிப்பூர் டான்ஸ் அகாடமி, இம்பால், மணிப்பூர் 795001.
மூன்று ஆண்டு பவுண்டேஷன் கோர்ஸ், 10 லிருந்து 14 வயது வரை.
மூன்று ஆண்டு டிப்ளமோ கோர்ஸ், 14 லிருந்து 18 வயது வரை.
மூன்று ஆண்டு போஸ்ட் டிப்ளமோ கோர்ஸ்.
கலாசேத்ரா பவுண்டேஷன், ருக்மினி தேவி கல்லூரி ஆப் பைன் ஆர்ட்ஸ், திருவான்மியூர், சென்னை600041.
டிப்ளமோ கோர்ஸ்பரதநாட்டியம். தகுதி10 ம் வகுப்பு தேர்ச்சி, 20 வயதிற்குட்பட்டவர்கள்.
இரண்டு ஆண்டு போஸ்ட் டிப்ளமோ
நாலந்தா டான்ஸ் ரிசர்ச் சென்டர், நாலந்தா நித்ய கலா மகா வித்யாலயா,(மும்பை பல்கலை) சாய் பிரசாத், பிளாட் ஏ7/1, என்.எஸ்.ரோடு எண்.10, ஜே.வி.பி..ஸ்கீம், வைல் பார்லே(மேற்கு) மும்பை400049.
பள்ளி குழந்தைகளுக்காக மாலை நேர வகுப்புகள் ஏழு ஆண்டுகள் வரை நடத்தப்படும். முதல் நான்கு ஆண்டுகளில் சிறப்பாக நடனம் ஆடும் குழந்தைகளுக்கு பாரம்பிகா என்ற விருதும் அதற்கு அடுத்துள்ள மூன்று ஆண்டுகளில் சிறப்பாக கற்று தேர்ந்துள்ள குழந்தைகளுக்கு கோவிதா என்ற விருதுகள் இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும்.

பேச்சுலர் ஆப் பைன் ஆர்ட்ஸ் (டான்ஸ்) ஐந்து ஆண்டு கோர்ஸ்.
மாஸ்டர் ஆப் பைன் ஆர்ட்ஸ் (டான்ஸ்) இரண்டு ஆண்டு கோர்ஸ்.
பிஎச்.டி.,(டான்ஸ்)

நாலந்தா டான்ஸ் ரிசர்ஸ்
சென்டரில் பரத நாட்டியம், மோகினி ஆட்டம், கதகளி நடனங்கள் கற்றுக்கொடுக்கப்படும்.
விஸ்வபாரதி, சங்கீத பவனம், (இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் மியூசிக் அண்ட் டான்ஸ்), சாந்தி நிகேதன்731235.
நான்கு ஆண்டு டிகிரி கோர்ஸ், (மணிப்புரி டான்ஸ், கதகளி டான்ஸ்).
இரண்டு ஆண்டு டிகிரி கோர்ஸ், டான்ஸ்சில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றவர்கள் இதில் சேர அனுமதிக்கப்படுவர்.
ரவிந்திரா பாரதி யூனிவர்சிட்டி,
எமரால்டு பவர் கேம்பஸ், 56/ஏ, பி.டி.ரோடு, கோல்கட்டா700050.
பி.ஏ.(ஆனர்ஸ்) எம்.ஏ., (டான்ஸ்).

இந்திர கலா சங்கீத விஸ்வா வித்யாலயா, கைராகர்491881.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்படும்.

மூன்று ஆண்டு டிப்ளமோ பயிற்சி (கதக், ஒடிசி டான்ஸ்)
ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ், பொட்டி ஸ்ரீராமுலு தெலுகு யூனிவர்சிட்டி, லலித கலாசேத்ரம், சரூபா, பப்ளிக் கார்டன், நம்பள்ளி ஹைதராபாத்500004.

பி.ஏ., எம்.ஏ., (குச்சிப்புடி டான்ஸ்).
ஸ்ரீசங்கராச்சார்யா யூனிவர்சிட்டி ஆப் சான்ஸ்கிரிட், ஸ்ரீசங்கராபுரம், காலடி, 683574.
எஸ்.எஸ்.எல்.சி., முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டு பவுண்டேசன் இன் டான்ஸ்.
மூன்று ஆண்டு பி.ஏ.,(டிகிரி கோர்ஸ்).
ஸ்ரீராம் பாரதிய கலா கேந்திரா, காலேஜ் ஆப் மியூசிக் அண்ட் டான்ஸ், நியூ டில்லி110001.

டிப்ளமோ, போஸ்ட் டிப்ளமோ (கதக், பரதநாட்டியம், ஒடிசி).
நடனக்கலைகளை கற்று தேர்ந்தவர்களில் வெகு சிலரே பிரபலங்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். நடனக்கலையை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் இதன்மூலம் அதிக வருவாயை எதிர்பார்க்க முடியாது. இந்த கலையை பொறுத்தவரை இதன்மீது ஈடுபாடும், அர்ப்பண உணர்வும் கொண்டவர்களால் மட்டுமே சாதிக்க முடியும். குறுகிய காலத்திற்குள்

நடனக்கலையை ஒருவரால் கற்று தேர்ச்சி பெற முடியும். இவர்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள குழந்தைகளுக்கு வகுப்புகள் நடத்துவதன் மூலம் ஓரளவிற்கு வருவாய் ஈட்ட முடியும். நடனத்தை முழு நேர தொழிலாக கொண்டவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாகவோ அல்லது சினிமாக்களில் நடனம் கற்றுக் கொடுப்பவராகவோ மாறினால் மட்டுமே தங்கள் வாழ்க்கையை வளமாக்கிகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக