வியாழன், 5 ஏப்ரல், 2012

"ஹேர்ஸ்டைலிஸ்ட்' '






இன்று ஒவ்வொருவரும் முக அழகுக்கும், தலைமுடியின் அழகுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

"முடிவெட்டுதல்' என்பது அதிகம் வளர்ந்த முடியை குறைத்துக் கொள்ளுதல் என்ற நிலை முன்பு இருந்தது. தற்போது, விதவிதமாக வடிமைத்துக் கொள்ளும் கலையாக மாறிவிட்டது. இந்தியாவில் "ஹேர்ஸ்டைலிஸ்ட்' தொடர்பான படிப்புகள் நிறைய தொடங்கப்பட்டுள்ளன.

"ஹேர்ஸ்டைலிஸ்ட்' : "ஹேர்ஸ்டைலிஸ்ட்' பணி என்பது நவீனயுகத்தில் உள்ள பலவகையான ஹேர்ஸ்டைல்ஸ் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை உள்ளடக்கியதாகும். "ஹேர்ஸ்டைலிஸ்ட்' வல்லுனர்கள் "ஹேர்ஸ்டைல்' டெக்னிக்ஸ் பயின்றவராகவும், வாடிக்கையாளர்களின் ஹேர்ஸ்டைலை மெருகேற்றுபவராகவும் இருப்பர்.

பயிற்சி நிறுவனங்கள்:
* மகா பியூட்டி பார்லர் மற்றும் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட், மைலாப்பூர், சென்னை
* எம்.ஆர்.ஹெர்பல் பியூட்டி பார்லர் மற்றும் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட், சென்னை
* ஹபிப் ஹேர் அகாடமி, புதுடில்லி
* வைசாலி மகளிர் பியூட்டி பார்லர் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்மடாலஜி, சென்னை
* சவுத் டில்லி பெண்கள் பாலிடெக்னிக், புதுடில்லி
* மென்ஸ் வேர்ல்டு இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட், புதுடில்லி

சம்பளம்: ஹேர்ஸ்டைல் தொடர்பான நுணுக்கங்களை கற்று சிறந்து விளங்குபவர்கள் இந்த துறையில் அதிகமாக ஊதியம் பெறலாம். சிறந்த "ஹேர்ஸ்டைலிஸ்ட்' மாதம் 16,000 ரூபாய் முதல் 17,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். மூன்று வருட அனுபவம் பெற்றால் 35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
"ஹேர்ஸ்டைலிஸ்ட்' தொடர்பாக இந்தியாவின் தலைசிறந்த "ஹேர்ஸ்டைலிஸ்ட்'களில் ஒருவரும், ஹபிப் ஹேர் அகாடமியின் நிறுவனருமான ஜாவித் ஹபிப் கூறுகையில், ""நேர்த்தியான ஹேர்ஸ்டைலிஸ்ட்கள், முடி குறைவாகவும், குறைபாடோடும் இருப்பவர்களைக் கூட அழகான ஹேர்ஸ்டைல் வைத்திருப்பவர்களாக மாற்றவேண்டும். என்னைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் முடி மகுடமாகும். ஒருவர் சிறந்த நகைகளையும், உடைகளையும் அணிந்து இருந்தாலும் ஹேர்ஸ்டைல் சரியாக இல்லை என்றால் சிறப்பாக இருக்காது.

அந்தக்குறையை ஹேர்ஸ்டைலிஸ்ட் போக்கி மகுடமான முடியை அழகாக்க வேண்டும். எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறையாக இந்த பணியில் இருக்கிறோம். இந்த துறையில் 20 ஆண்டு காலமாக நான் பணிபுரிகிறேன். உலகம் முழுவதும் மொத்தம் 140 நிறுவனங்களை இயக்கி வருகிறேன். நாம் செய்யும் தொழிலில் உண்மையாகவும், தேடல்கள் நிறைந்தவராகவும் விளங்கினால் உயர்வான இலக்கை அடையலாம் '' இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக