புதன், 4 ஏப்ரல், 2012

ஏர் டிக்கெட்டிங்





மாணவர்களிடையே தொழில் துறை சார்ந்த படிப்புகளின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சேவைத் துறைகள் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளன. இதற்கு ஏர் டிக்கெட்டிங் படிப்புகளும் விதி விலக்கல்ல.

உலகில் உள்ள பெரும்பான்மை மக்கள் தங்கள் தேவைக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத் திற்கு விமானம் மூலம் செல்கின்றனர். இவர்களின் தேவையை சிறந்த முறையில் நிறைவேற்றுவதே ஏர்லைன் டிக்கெட்டிங் படிப்பின் நோக்கமாகும்.



விமானங்களின் கால அட்டவணைக்கு ஏற்ப எவ்வாறு டிக்கெட்டுகளை பதிவு செய்ய வேண்டும் மற்றும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்த வழிமுறைகள் இப்படிப்பில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும் பயணிகளின் பயண வழிகள் குறித்த திட்டமிடுதலுக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். இதற்கு தனிப்பயிற்சி திறன் அளிக்கப்படுகிறது. இது தவிர பயணம் சம்பந்தமான தேவையான முன்னேற்பாடுகளையும் செய்து தர வேண்டும்.



இந்தியாவில் ஏர் டிக்கெட்டிங் படிப்புகளுக்கு அருமையான வேலைவாய்ப்புகள் உள்ளன. யாரேனும் ஒருவர் இத்துறையில் மிகச் சிறந்தவராக இருந்தாலும் புகழ்பெற்ற நிறுவனங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பது மிகவும் தேவையானது.

படிப்புகள்:
டிகிரி, டிப்ளமோ, சான்றிதழ் படிப்பு என மூன்று வகைகளில் ஏர்லைன் டிக்கெட்டிங் தொடர்பான படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. ஆர்வமுள்ள மாணவர்கள் இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து படிக்கலாம். மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு ஏற்ப படிப்பின் கால அளவு 2 மாதம் அல்லது 6 மாதம் அல்லது 1 வருடம் ஆக இருக்கும்.

தகுதிகள்:
இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஏர்லைன் டிக்கெட்டிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனாலும் சில குறிப்பிட்ட படிப்புகளுக்கு கல்வித் தகுதி பிளஸ் 2 அல்லது டிகிரி வரை உள்ளது. இது தவிர விண்ணப்பிக்கும் மாணவர்கள் கீழ்க்காணும் பண்பு நலன்களை கூடுதலாக பெற்றிருக்க வேண்டும்.

* மிகச்சிறந்த தொடர்புத்திறன்கள்
* மற்றவர்களிடம் மரியாதை காட்டும்

பண்புநலன்கள்:
* இனிமையாக அணுகும் விதம்
இந்தியாவில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஏர் டிக்கெட்டிங் படிப்புகளை கற்றுக்கொடுக் கின்றன. அவற்றில் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

1) இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் அகாடமி, சென்னை.
2) ஏர்ஹோஸ்டஸ் டிரெய்னிங் அகாடமி, புதுடில்லி.
3) ஏர்ஹோஸ்டஸ் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட், புதுடில்லி.
4) எச்.எம்.இ.,இன்ஸ்டிடியூட் மனக்வல் பிரீட் விகார், லுதியானா (பஞ்சாப்).
5) டிரேடுவிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மென்ட், புதுடில்லி.
6) பசிபிக் ஏர்வேஸ், புதுடில்லி.

வேலைவாய்ப்பு:
ஏர் டிக்கெட்டிங் படிப்பை வெற்றிக்கரமாக முடிப்பவர்களை உலகம் முழுவதும் உள்ள ஏர்லைன் நிறுவனங்கள் மற்றும் எண்ணற்ற டிராவல் ஏஜன்சிகள் பணிக்கு தேர்வு செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக