புதன், 4 ஏப்ரல், 2012

வானவியல்





வானவியல் எனப்படும் அஸ்ட்ரானமி மிகவும் பழமையானதும் பலரையும் பெரிதும் கவரும் துறையாகவும் விளங்குகிறது.

புவியின் வளிமண்டலத்திற்கு அப்பாலுள்ள ஆகாயம் தொடர்புடைய அம்சங்கள் மற்றும் பொருட்களைப் பற்றி படிப்பதே வானவியல் எனப்படுகிறது. பிரபஞ்சம் தொடர்பான அறிவியல் பிரிவான இத்துறையில் பிரபஞ்சத்தின் இயக்கம், இயற்கை அமைப்புகள், வரலாறு, விண்வெளி தொடர்புடைய சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள், செயற்கைக் கோள்கள், விண்கற்கள், பால் வீதிகள் போன்றவற்றைப் பற்றி படிக்கப்படுகிறது.

இயற்பியலின் ஒரு உபபிரிவாகக் கருதப்படும் வானவியலில் அஸ்ட்ரோபிசிக்ஸ், அஸ்ட்ரோமெட்டீயராலஜி, அஸ்ட்ரோபயாலஜி, அஸ்ட்ரோஜியாலஜி, அஸ்ட்ரோமெட்ரி, காஸ்மாலஜி போன்ற உட்பிரிவுகள் உள்ளன. பிரபஞ்சம் பற்றிய உண்மைகளை வெளிக் கொணர இந்த அனைத்துத் துறைகளும் இணைந்து உதவுகின்றன. பிரபஞ்சம் பற்றிய புதிர்களில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும் இவற்றை விடுவிக்க விரும்புபவர்களுக்குமான நம்பிக்கை தரும் துறையாக வானவியல் திகழ்கிறது.

உலகில் ஒவ்வொரு நாடும் அணு சோதனையில் ஈடுபட்டு வருவதால் வானவியல் துறை வல்லுனர்களுக்கான சார்புத் தேவையும் அதிகரித்து வருகிறது. இத் துறையை தொழில்நுட்ப அளவில் படிக்கும் போது அப்சர்வேஷனல் அஸ்ட்ரானமி, தியரிடிகல் அஸ்ட்ரோபிசிக்ஸ் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.

அப்சர்வேஷனல் அஸ்ட்ரானமியில் டெலஸ்கோப், பைனாகுலர், கேமரா, வெறும் கண்களால் ஆகாயம் தொடர்புடையவற்றைப் பார்த்து அறிந்து தகவல்களைச் சேகரிக்க வேண்டும். இதனை கருவிகளை வடிவமைக்கவும், நிர்வகிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

தியரிடிகல் அஸ்ட்ரானமியில் தகவல்களை கம்ப்யூட்டர் உதவியுடன் அலசி ஆராய்ந்து விளக்கங்களைத் தருகின்றனர். இது முழுக்க முழுக்க ஆராய்ச்சி அம்சங்களுடனும் அலசல்களுடனும் திகழும் துறையாக உள்ளது.

யாருக்குப் பொருந்தும்?
பொது இயற்பியலில் திறனுடையவர்களே இத்துறைக்குப் பொருத்தமானவர்கள். இது ஒரு பரந்து பட்ட துறையாகும். இதில் உபகரணங்களைக் கட்டும் குழுக்கள், கணிதத் திறன் மற்றும் இயற்பியல் சிந்தனை கொண்ட தியரிடிகல் குழுக்கள் என்று பரந்த பணிகள் உள்ளன.

இத் துறையில் ஈடுபட புரொகிராமிங் திறமைகளும் கேள்விகளுக்கான விடைகளை விடாது தேடும் குணமும் கட்டாயம் தேவைப்படும். எந்தப் பிரிவு அஸ்ட்ரானமியில் ஈடுபடுகிறோம் என்பதைப் பொறுத்தே இத் துறையில் பணி எதிர்காலம் உறுதியாகிறது. இன்ஸ்ட்ரூமென்டேஷன் அஸ்ட்ரானமியில் ஈடுபட விரும்புபவர்கள் அஸ்ட்ரானமியில் பொறியியல் புலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தகுதிகள்
இத்துறையில் பொதுவாக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளே அதிகம் என்பதால் முழுமையான வானவியலாளராக உருவாக கட்டாயம் ஆராய்ச்சிப் படிப்பே தேவைப்படுகிறது.

இத்துறையில் இணைந்திட விரும்புபவர்கள் பிளஸ் 2வை அறிவியல் புலத்தில் இயற்பியல் மற்றும் கணிதம் எடுத்துப் படித்திருப்பது அவசியம். தியரிடிகல் அல்லது அப்சர்வேஷனல் அஸ்ட்ரானமி துறையில் இணைய விரும்புபவர்கள் பிளஸ் 2வுக்குப் பின் அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அஸ்ட்ரானமி துறையில் பட்டப்படிப்பை கிட்டத்தட்ட எந்தப் பல்கலைக்கழகமும் தருவதில்லை.

எனவே இயற்பியலில் மேஜர்/ஹானர்ஸ் படிப்பை கணிதத் துணைப் பாடத்துடன் படித்திருக்க வேண்டும். எம்.எஸ்சி., படிப்பை முடித்த பின் பிஎச்.டி., படிப்பைத் தொடருவதன் மூலமாக விண்வெளி ஆய்வில் விண்வெளியாளராகவோ அறிவியலறிஞராகவோ ஆய்வாளராகவோ மாறலாம்.

இன்ஸ்ட்ரூமென்டேஷன் அல்லது எக்ஸ்பெரிமெண்டல் அஸ்ட்ரானமியில் இணைய பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முடித்தவர்கள் ஆராய்ச்சியாளராக இணையலாம்.

அடிப்படையில் இத்துறையில் இணைய விரும்புபவருக்கு துறை மீதான உற்சாகம், ஆர்வம், கவனிக்கும் தன்மை ஆகியவை அவசியம். சராசரிக்கும் அதிகமான புத்திசாலித்தனம், கற்பனை வளம், பொறுமை, பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் திறன்களும் தேவைப்படுகின்றன. நெடுநேரமும் முறையற்ற கால அவகாசத்திலும் பணி புரிய வேண்டியுள்ளது. குழுவாகப் பணியாற்ற நேரிடுவதால் சிறப்பான தகவல் தொடர்புத் திறன்களும் தேவை.

பயணம் செய்வதும் நெடுநேரம் பணி புரிவதும் இதில் தவிர்க்க முடியாது. ஆய்வு தவிர விரிவுரையாளராகப் பணியாற்றுவதும் இதில்
இயலும். அரசு தொடர்புடைய பாதுகாப்புப் படை, விண்வெளி ஆராய்ச்சி, எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. இவை தவிர ஆராய்ச்சி சோதனைக் கூடங்கள், அப்சர்வேடரிகள், கோளகங்கள், அறிவியல்பூங்காக்கள் ஆகியவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன.

ஐ.எஸ்.ஆர்.ஓ., விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், விண்வெளி இயற்பியல் ஆய்வகங்கள் ஆகியவற்றிலும் சவாலான பணிகள் கிடைக்கின்றன.அனுபவம், திறன் ஆகியவற்றைப் பொறுத்து சிறப்பான சம்பளமும் ஒருவர் இதில் பெற முடிகிறது.

துறையின் சிறந்த கல்வி நிறுவனங்கள்

Aryabhatta Research Institute of Observational Sciences (A.R.I.E.S.), Nainital( Uttarakhand )
Manora Peak , Nainital ( Nainital Dist. ) 263129

Cochin University of Science and Technology : Department of Atmospheric Sciences, Kochi ( Kerala )
Cochin University of Science and Technology, Kochi (Ernakulam Dist.) 682022

Harish Chandra Research Institute, Allahabad (Uttar Pradesh)
Chhatnag Road, Jhusi , Allahabad (Allahabad Dist.) 211019

Indian Institute of Astrophysics, Bangalore (Karnataka)
II Block, Koramangala , Bangalore (Bangalore (Bengaluru) Dist.) 560034

Indian Institute of Science (I.I.Sc.) : Department of Physics,
Bangalore (Karnataka)

Indian Institute of Science, Bangalore (Bangalore (Bengaluru) Dist.) 560012

Inter University Centre for Astronomy and Astrophysics (I.U.C.A.A.),
Pune (Maharashtra) Post Bag 4, Ganeshkhind, Pune University Campus,
Pune (Pune Dist.) 411007

National Centre for Radio Astrophysics (N.C.R.A.), Pune (Maharashtra )

Tata Institute of Fundamental Research, Pune University Campus, Post Bag 3, Ganeshkhind , Pune ( Pune Dist. ) 411007

Osmania University: College of Science, Hyderabad (Andhra Pradesh) Osmania University, Administrative Building,
Hyderabad (Hyderabad Dist.) 500007

Physical Research Laboratory (P.R.L.), Ahmedabad (Gujarat)
Navrangpura, Ahmedabad (Ahmedabad Dist.) 380009

Raman Research Institute, Bangalore (Karnataka)
C.V. Raman Avenue, Sadashivanagar,
Bangalore (Bangalore (Bengaluru) Dist.) 560080

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக