புதன், 4 ஏப்ரல், 2012




டீ மேனேஜ்மென்ட் படிப்பு **********
உலகத்தில் உள்ள மக்களில் பெரும்பான்மையானோர் அருந்தும் பானங்களில் ""டீ'' யும் ஒன்று. நம் உடலுக்கு புத்துணர்வு ஊட்டக் கூடியதாகும். தேயிலைச் செடியின் இலைகளிலிருந்து டீ தயாரிக்கப்படுகிறது. உலக அளவில் இந்தியா தான் அதிக அளவு தேயிலையை உற்பத்தியும், ஏற்றுமதியும் செய்கிறது. அது மட்டுமில்லாமல் இந்தியாவில் தான் அதிகமான ஆட்கள் டீயை குடிக்கின்றனர்.

ஆசிய நாடுகள் தான் தேயிலை உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், நம் நாட்டை விட மேற்கத்திய நாடுகளில், இதன் புகழ் மேலோங்கி உள்ளது. நம் நாட்டிற்கு அன்னிய பணம் கிடைப்பதில் டீ தொழிலின் பங்கு முக்கியமாக உள்ளது. தேயிலைத் தொழிலை பொறுத்த வரையில் எல்லா மட்டங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் பயிற்றுவிக்கப்படும் டீ மேனேஜ்மென்ட் படிப்புகள், வாழ்க்கையை வெற்றிக்கரமாக அமைத்துக் கொள்ள உதவுகிறது.

படிப்புகள்:
1) சர்டிபிகேட் கோர்ஸ் ஆப் டீ டேஸ்டிங்: டீ சுவை தேர்வாளர் படிப்புக்கு 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தகுதி போதுமானது. சில பயிற்சி நிறுவனங்களில் கல்வித் தகுதிகள் மாறுபடலாம். தேயிலையை அடையாளம் காணுதல் மற்றும் தோற்றம் குறித்தும் கற்றுத்தரப்படுகிறது. வேலைவாய்ப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. உதாரணமாக, டார்ஜிலிங் டீ ஆராய்ச்சி நிறுவனம், இப்படிப்பை 3 மாதம் கற்றுக் கொடுக்கிறது. ரூ. 30 ஆயிரம் தொகையை பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கிறது. ஆனால் இந்நிறுவனத்தில் பயில்வதற்கு, ஏதேனும் இளநிலை படிப்பை தேர்வு செய்து படித்து முடித்திருக்க வேண்டும். டீ தொழிலில் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டும் கல்வித் தகுதியில் சலுகை உண்டு.

2) டீ மேனேஜ்மென்ட்: டீத் தூள் தயாரிப்பு, செயல்முறைகள், பண முதலீடு, விளம்பரப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியன குறித்து டீ மேனேஜ்மென்ட் படிப்பில் கற்றுத் தரப்படுகிறது. டீயின் சுவையை தேர்வு செய்வதும் பாடப்பகுதியின் முக்கியமான ஒன்றாகும். இப்படிப்புக்கு ஏதேனும் இளநிலை பட்டத்தை முடித்திருக்க வேண்டும். பி.எஸ்சி., தாவரவியல்/உணவு அறிவியல்/தோட்டக்கலை/விவசாயம் படித்தவர்கள், இப்படிப்பை தேர்வு செய்து படித்தால் சிறப்பாக இருக்கும். மேலும் டீத் துறை சம்பந்தமான பல்வேறு வகையான படிப்புகள் இந்தியாவில் கற்றுத் தரப்படுகின்றன. இதற்கு குறிப்பிட்ட கல்வித் தகுதியை அந்தந்த கல்வி நிறுவனங்கள் நிர்ணயித்திருக்கின்றன. இந்தியாவில் கீழ்க்கண்ட நிறுவனங்களில் ""டீ'' சம்பந்தமான படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

1) அசாம் அக்ரிகல்சுரல் யுனிவர்சிட்டி, அசாம்.

http://www.aau.ac.in/index.html




2) என்.ஐ.டி.எம்., டார்ஜிலிங் டீ ரிசர்ச் அண்டு மேனேஜ்மென்ட் அசோசியேஷன், மேற்கு வங்காளம். http://nitm.in/index.htm




3) இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளான்டேஷன் மேனேஜ்மென்ட், பெங்களூரு.

http://www.iipmb.edu.in/





4) யு.பி.ஏ.எஸ்.ஐ., டீ ரிசர்ச் பவுண்டேஷன், வால்பாறை.

http://www.upasitearesearch.org/


5) பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் பியூச்சர்ஸ்டிக் ஸ்டடிஸ், கோல்கட்டா.

http://www.bifsmgmt.org/index.php


6) தி டீ டேஸ்டர்ஸ் அகாடமி, குன்னூர்.

வேலைவாய்ப்பு:
டீ மேனேஜ்மென்ட் படிப்புக்கு வேலைவாய்ப்பு குறைவாக இருந்தாலும் முற்றிலும் சுவாரசியமான துறையாக இருக்கிறது. வேலைவாய்ப்பு உள்ள டீ மேனேஜ்மென்ட் படிப்பானது, மிகவும் லாபகரமான துறையாகவும் இருக்கிறது. இந்தியாவில் இப்படிப்பை புதிதாக முடித்தவர்கள், இந்திய டீ போர்டு, தேயிலை தோட்டம் மற்றும் டீ கழகம் உள்ளிட்டவற்றில் பணி புரியலாம். அனுபவம் உள்ள ஊழியர்கள் டீ ஆராய்ச்சி மையத்தில் பணிக்கு சேரலாம். மேலும், டீ சம்பந்தமான ஆலோசனை மையத்தை அமைத்தல் மற்றும் தரகுத் தொழிலிலும் ஈடுபடலாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பானது, குறிப்பிட்டு சொல்லும்படி இப்படிப்புக்கு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக