புதன், 4 ஏப்ரல், 2012

என்ன படிப்பு படிக்கலாம்..?





தடயவியல் துறை

தடயஅறியவில் (தடயவியல்) துறையானது , குற்றம் சம்பந்தமான காட்சிகள் உங்களை அச்சமூட்டலாம் அல்லது பயமுறுத்தலாம். இந்தத்துறையின் முக்கிய வேலையே பல்வேறு அறிவியல் சம்பந்தமான வழிமுறைகள் மற்றும் கோட்பாடுகள் மூலம் குற்றங்களை விசாரணை செய்வதாகும். இன்றைய காலகட்டத்தில் கிரிமினல் மற்றும் சிவில் குற்றங்கள் உள்ளிட்ட இரண்டிலும் தடயவியல் நிபுணர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். காரணங்களோடு கூடிய குற்றங்கள் மறைக்கப்படும் போது அவற்றை அக்குவேறு ஆணிவேராக அலசி குற்றங்களை நிரூபிக்கும் துறை ஆகும்.
கிரிமினல் குற்றங்கள்

ஒரு குற்றம் நடந்தால் , குற்றம் தொடர்புள்ள காட்சிகளிலிருந்து அனைத்து தடயங்களையும் சேகரிக்க வேண்டும். பின்னர் தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வகங்களில் சோதனை செய்ய வேண்டும். இறுதியாக பரிசோதித்த முழுமையான ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும். இவற்றில் உடல்சார்ந்த ஆதாரங்களான ரத்தம், உமிழ்நீர், முடி, கைரேகை, கால்தடம், காலணிகள் மற்றும் டயர்களின் அச்சுப்பதிவுகள் உள்ளிட்டவையும் அடங்கும்.
சிவில் குற்றங்கள்

கையெழுத்தின் காலமதிப்பு மற்றும் மோசடி குறித்து நீரூபணம் செய்வதாகும். இன்றைக்கு விசாரணைக்கு வரும் சிக்கலான வழக்குகளை முடிப்பதற்கு போலீசாருக்கு தடயவியல் நிபுணர்கள் மிகவும் உதவியாக இருக்கின்றனர்.
படிப்புகள்

பி.எஸ்.சி., தடயவியல்; எம்.எஸ்.சி., தடயவியல்
தடயவியல் படிக்க தகுதிகள்

* இளநிலை தடயவியல் படிப்புக்கு பிளஸ்2ல் அறிவியல் பிரிவை தேர்வு செய்து படித்து முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் காலஅளவு.
* முதுநிலை தடயவியல் படிப்புக்கு ,இளநிலை படிப்பில் ஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படித்து முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் காலஅளவு.
*எம்.பில்., ஆய்வு படிப்புக்கு முதநிலை தடயவியல் படிப்பில் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
* எம்.பி.பி.எஸ்., படிப்பில் தடயவியல் படிப்பை ஒருபாடமாக படித்திருப்பவர்கள் மருத்துவமனைகளில் பிரேதபரிசோதனை உள்ளிட்ட பணியில்ஈடுபடலாம்.

* தடயஆய்வு தொல்லியல், தடயஆய்வு உளவியல் , தடயஆய்வு உயிரியல், தடயஆய்வு பொருளாதாரம், தடயஆய்வு பொறியியல் , தடயஆய்வு மொழியியல், தடயஆய்வு மானுடவியல் மற்றும் ரத்த வகையை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான உட்பிரிவுகள் தடயவயில் படிப்பில் இருக்கிறது.

இந்தியாவில் கீழ்கண்ட நிறுவனங்களில் தடயவியல் சம்பந்தமான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணனின் தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் துறை நிறுவனம் புதுடில்லி.

சென்னைப்பல்கலைக்கழகம் சென்னை
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை
குற்றவியல் மற்றும் தடயவியல் துறை நிறுவனம் புதுடில்லி
லக்னோ பல்கலைக்கழகம் லக்னோ
மத்திய தடயவில் துறை ஆய்வகம்ஐதாராபாத்
மத்திய தடயவியல் துறை ஆய்வகம்சண்டிகர்
மத்திய தடயவியல் துறை ஆய்வகம்கொல்கத்தா

தடயவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்

இந்தியாவில் தடயவியல் படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு போலீஸ்படையிலும், சட்டத்தை அமலாக்கும் ஏஜன்சிகள் மற்றும் சட்டம் சார்ந்த அமைப்புகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அரசு மற்றும் தனியார் துறையிலும் உள்ளன. தடயவியல் பிரிவில் உட்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவர்களுக்கு அதற்கேற்றவாறு பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் உள்ளன. மருத்துவ ஆய்வாளர், குற்றங்களை பகுத்தாய்வு செய்பவர், குற்றக்காட்சிகளை ஆய்வு செய்பவர், உள்ளிட்ட பிரிவுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் வெளிநாடுகளிலும் இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக