புதன், 4 ஏப்ரல், 2012

வனம் மற்றும் வன விலங்கு







அனைத்து நாடுகளிலும், இயற்கை வளங்களை அளிப்பதில் காடுகளின் பங்கு முக்கியமாக உள்ளது.

மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணற்ற மூலிகைகள், ஒப்பனைப்பொருட்கள் மற்றும் பல மதிப்புள்ள விளைபொருட்கள் ஆகியவற்றையும் காடுகள் அளிக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், காடுகளின் பங்கு கணிசமான அளவில் உள்ளது.

ஒவ்வொரு காடுகளிலும், காட்டுயிர்களின் எண்ணிக்கை முழுமையாக இருக்கிறது. "பாரஸ்டிரி மற்றும் வைல்டு லைப்' உள்ளிட்ட படிப்புகள், இவற்றை திறம்பட கையாள உதவுகிறது. நாம் பயன்படுத்தும் காட்டு வளங்களின் சூழ்நிலையை சமநிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இந்த பணியைச் முழுமையாக செய்வதற்கு, சிறந்த பயிற்சி பெற்ற வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். வனவியல் வல்லுனர்களுக்கு, ஆய்வுக் கூடங்கள், அலுவலகங்கள் மற்றும் வெளிப்புறங்களிலும் வேலை பார்க்கும் சூழ்நிலைகள் ஏற்படும்.

காடுகளின் வளத்தை தவறாக பயன்படுத்துவதால் தான், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேராபத்துக்கள் ஏற்படுகின்றன. தற்போது இவற்றை தடுக்கவும், காட்டு விலங்குகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்ந்த படிப்புகள் உதவுகின்றன. இந்தியாவில் பயிற்றுவிக்கப்படும் வனத்துறை சார்ந்த படிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இளநிலை படிப்பு
பி.எஸ்சி., பாரஸ்டிரி (வனம்)
பி.எஸ்சி., வைல்டு லைப் (வனவிலங்கு)
தகுதிகள்: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது வேளாண்மை பாடங்களை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.
கால அளவு 34 வருடம்.

முதுநிலை படிப்பு
எம்.எஸ்சி., பாரஸ்டிரி
எம்.எஸ்சி., வைல்டு லைப்
எம்.எஸ்சி., உட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி

தகுதிகள்: இளநிலை படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்,கணிதம் மற்றும் நிலவியல் உள்ளிடவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும் அல்லது இளநிலை வேளாண்மை அல்லது இளநிலை பாரஸ்டிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். கால அளவு 2 வருடம். இந்தியாவில், இள நிலை மற்றும் முதுநிலைக்கான "பாராஸ்டிரி மற்றும் வைல்டு லைப் படிப்புகள்' கீழ்க்கண்ட நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

1. இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் ஜெனிட்டிக்ஸ் அண்டு டிரீ பிரீடிங், கோவை.
2. இன்ஸ்டிடியூட் ஆப் உட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, பெங்களூரு.
3. பாரஸ்ட் ரிசர்ச் சென்டர், ஐதராபாத்.
4. பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், டேராடூன்.
5. பிர்ஸா அக்ரிகல்ச்சர் யுனிவர்சிட்டி, ராஞ்சி.
6.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட், நேரு நகர், போபால்.
7.ஒரிசா யுனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்ச்சர் அண்டு டெக்னாலஜி, புவனேஷ்வர்.
8.வைல்டு லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, டேராடூன்.
9.மணிப்பூர் யுனிவர்சிட்டி,இம்பால்.
10. இமாலயன் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சிம்லா.

வேலைவாய்ப்பு
வனத்துறைச் சார்ந்த படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு இந்திய அரசு, வனக்காவலர்,மர ஆய்வாளர், பூச்சிகளை ஆய்வு செய்பவர், விலங்குகளின் நடத்தையை ஆய்வு செய்பவர், மரங்களை வளர்த்து பாதுகாப்பவர், வனச்சரக அலுவலர் மற்றும் மிருகங்களை பாதுகாப்பவர் உள்ளிட்ட பிரிவுகளில் பணி வாய்ப்பை வழங்குகிறது.

இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்களில் போதிய அளவில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. இது தவிர வெளிநாடுகளிலும் குறிப்பாக கம்போடியா, வியட்நாம், தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில், அதிக அளவு இந்தியர்களை வேலைக்கு தேர்வு செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக