வியாழன், 5 ஏப்ரல், 2012

காவல் துறை பணி





சமூகத்தில் முக்கியப் பணியாற்றும் காவல் துறையில் சேர்ந்திட விரும்புபவரா நீங்கள்? இத்துறை தொடர்புடைய சில தகவல்களை உங்களுக்காகத் தருகிறோம்...

ஒரு நாட்டுக்கும் அந்நாட்டின் மக்களுக்குமான சேவை புரியும் பணியே மிக நல்ல பணி என்று கருதப்படுகிறது. இது மாதிரியான சேவை புரிய நாட்டின் பாதுகாப்புப் படை, காவல் துறை ஆகியவற்றுடன் மத்தியக் காவல் படை அல்லது துணை ராணுவப் படை, இந்திய கரையோரப் படையும் மிக நல்ல பணித் துறைகளாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பணிகளில் வாழ்க்கையை பணயம் வைக்கும் சவால்களும் உண்டு. நாடு தழுவிய அளவில் இப்பணிகள் இருப்பதால் பல்வேறுபட்ட மனிதர்கள், கலாசார மாண்புகள் போன்றவற்றை அறியும் வாய்ப்புகள் உள்ளன.

மத்தியக் காவல் படையைப் பொறுத்தவரை மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி. எப்.,), கரையோரக் காவல் படை(பி.எஸ்.எப்.,), மத்திய
நிறுவனப் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,), இந்தோதிபெத்திய எல்லையோரக் காவல் (ஐ.டி.பி.பி.,), தற்போது 'சகஸ்ட்ர சர்விஸ் பீரோ" என்று வழங்கப்படும் ஸ்பெஷல் சர்விஸ் பீரோ ஆகியவை அடங்கும்.

முப்படைகளின் கூட்டாக செயல்படுவதுதான் இந்திய எல்லைக் காவல் படையின் பணியாகும். இது இந்தியக் கடற்படை மற்றும் இந்திய கஸ்டம்ஸ் அமைப்புகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றுகிறது. கடல், நதித் துவாரங்கள் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள காஷ்மீரின் நதிகள் ஆகிய பகுதிகளை இது தீவீரமாக கண்காணிக்கின்றது. இப்பணியில் தொடர்புடைய டூட்டி அதிகாரிகளும் நேவிகேட்டர்களும் விமான தளங்கள் மற்றும் கப்பலில் பணியாற்றுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக