புதன், 4 ஏப்ரல், 2012

வாழ்க்கைக்கு உதவும் ஐடிஐ படிப்புகள்




அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ஆண்களும், பெண்களும் பயிற்சி பெறும் படியாக ஒரு வருட பயிற்சி, இரண்டு வருட பயிற்சிகளும் இருக்கின்றன. தொழிற்சாலைகளில் கடுமையான பணிகளை மேற்கொள்ளும் படியாக ஆண்களுக்கென வடிவமைக்கப்பட்ட டிரேடுகளும், பெண்களுக்கு என இலகுவாக பயிற்சி பெறும் டிரேடுகளும் இருக்கின்றன.
பெண்கள் வீட்டிலிருந்து கொண்டே குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு வேலைப்பார்ப்பதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளாக துணி வெட்டுதல் மற்றும் தைத்தல், சிகை அலங்காரம் மற்றும் முகபராமரிப்பு, எம்பிராய்டரி, ஆடைகள் வடிவமைப்பு, அழகுக்கலை நிபுணர், புக் பைண்டர்,சமையல் கலை, பூங்காவை பராமரிப்பவர் போன்ற பயிற்சிகள் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. இவைதவிர கட்டிட படவரைவாளர், மோட்டார் மெக்கானிக்,கணிணி சார்ந்த படிப்புகளையும் பெண்கள் ஆர்வமாக கற்றுக் கொள்கிறார்கள். இந்த பயிற்சிகளை ஆண்களும் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்புகள் இருக்கின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை பெண்கள் சேர்ந்து படிப்பதற்கு 7 அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையங்கள் சென்னையில் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்திலும், திருவள்ளூர், கடலுõர், நாகப்பட்டினம், சேலம், தேனி, கன்னியாகுமரி(நாகர்கோவில்) ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையங்கள் தொழிற்சாலைகளைப்போலவே முதலாமாண்டு மாணவர்கள் காலை ஒன்பது மணிக்கும், இரண்டு ஆண்டு மாணவர்கள் காலை ஏழு மணிக்கும் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வந்து பயிறசி பெறும் படியாக அமைத்திருக்கிறார்கள்.
பிளஸ்2, பத்தாம் வகுப்பு பாடங்களைப் போலவே பணிமனைக் கணக்கீடுகள், அறிவியல், குறிப்பிட்ட டிரேடு சம்பந்தமான பாடங்கள், இயந்திர உற்பத்திப் பொருட்களின் முப்பரிமாணப் படங்கள் வரைதல், சமூக அறிவியல் போன்ற பாடப்பகுதிகள் இருக்கின்றன. இவைதவிர செய்முறை பயிற்சிகள் அடங்கும். மொத்தம் இதற்கு 700 மதிப்பெண்கள்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் இரண்டாண்டு பயிற்சிகளை முடித்ததும் அவர்களுக்கு அகில இந்திய பொதுத்தேர்வுகள் இந்திய அளவில் நடத்தப்படுகின்றன. இது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு ஈடாக நடக்கிறது. இந்த தேர்வுகளை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு என்சிவிடி(நேஷனல் கவுன்சில் ஒக்கேஷனல் டிரெயினிங்) எனப்படும். அகில இந்திய தொழிற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதுவும் தற்காலிக (புரவிஷனல் சான்றிதழ்) மதிப்பெண் பட்டியல் பதிவு செய்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழைக்கொண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியை முடித்த மாணவர்கள் அப்ரண்டீஸ் (தொழில் பழகுனர் பயிற்சிக்காக ) அரசு சார்ந்த , சாராத தொழிற்சாலைகளில் ஐடிஐ தொழிற்பழகுனர் பயிற்சி பெறுவதற்கென அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் சேர்ந்து ஒரு வருடம் அல்லது தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற பாடங்களின் கால அளவைப்பொறுத்து தொழில் பழகுனர் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

இந்த பயிற்சியை பெற மாணவர்கள் தொழில் பழகுனர் பயிற்சி மையங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்வதைப் போல பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆர்ஐ சென்டர்கள் மாணவர்களின் முகவரிக்கு கடிதம் அனுப்பி சம்பந்தமப்ட்ட தொழிற்சாலைகளில் தொழிற்பழகுனர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து தருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக